PAT 3.10.7

இலக்குமணன் சீதையை விட்டுப் பிரிந்தது

324 மின்னொத்தநுண்ணிடையாய்! மெய்யடியேன்விண்ணப்பம் *
பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட *
நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக *
பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம்.
324 miṉ ŏtta nuṇ iṭaiyāy * mĕy aṭiyeṉ viṇṇappam *
pŏṉ ŏtta māṉ ŏṉṟu * pukuntu iṉitu vil̤aiyāṭa **
niṉ aṉpiṉ vazhiniṉṟu * cilai piṭittu ĕmpirāṉ eka *
piṉṉe aṅku ilakkumaṇaṉ * pirintatum or aṭaiyāl̤am (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

324. O! One with a waist as thin as lightning! This is your true slave's request! Seeing a golden deer playing sweetly in the forest , you asked your beloved husband to bring it to you, He took his bow and went to catch it, leaving Lakshmana to guard you. Hearing Rāma's call, Lakshmana left you alone and went to help Rāma This is again a proof that I am Rāma's messenger.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் ஒத்த மின்னலை போன்ற; நுண்ணிடையாய்! நுண்ணிய இடை உடையவளே!; மெய் அடியேன் உண்மையான பக்தனாகிய எனது; விண்ணப்பம் விண்ணப்பத்தைக் கேளுங்கள்; பொன் ஒத்த மான் ஒன்று பொன் போன்ற மான் ஒன்று; புகுந்து பஞ்சவடி ஆசிரமத்தில் வந்து; இனிது விளையாட அழகாக விளையாட; நின் அன்பின் தாங்கள் ஆசைப்பட்டதற்கு; வழி நின்று இணங்க; சிலை பிடித்து வில்லை எடுத்துக்கொண்டு; எம்பிரான் ஏக இராமபிரான் அதனைத் தொடர்ந்து போக; பின்னே அங்கு இலக்குமணன் பிறகு லக்ஷ்மணனும்; பிரிந்ததும் தங்களை விட்டுப் பிரிந்து போனதும்; ஓர் அடையாளம் ஓர் அடையாளமாகும்
nuṇṇiṭaiyāy! one with a delicate waist!; miṉ ŏtta like a lightning bolt; mĕy aṭiyeṉ as a true devotee; viṇṇappam please hear my request; pŏṉ ŏtta māṉ ŏṉṟu a golden deer; pukuntu came to the panchavati ashram; iṉitu vil̤aiyāṭa and played beautifully; vaḻi niṉṟu agreeing; niṉ aṉpiṉ to fulfill Your desire; ĕmpirāṉ eka Rama followed it; cilai piṭittu with His bow and arrow; piṉṉe aṅku ilakkumaṇaṉ then Lakshman too; pirintatum parted from You; or aṭaiyāl̤am this is a proof that i am Rama's messenger