Chapter 11

The love of a girl for the lord of Srirangam - (தாம் உகக்கும்)

திருவரங்கத்துச் செல்வனைக் காமுறல்
The love of a girl for the lord of Srirangam - (தாம் உகக்கும்)
"Andal longs for the Lord, thinking of Him constantly. Her body becomes emaciated, and the bangles on her arms slip off. Yet, He does not come to her. Andal laments; Krishna, who is Ranganatha, lovingly holds the conch in His hand. But He has caused the conch bangles on my hand to fall off. He walked to Bali to grant him three paces of land! Can't He + Read more
ஆண்டாள் பகவானை நினைத்து ஏங்குகிறாள். உடல் இளைக்கிறது. கை வளைகள் கழன்று விழுகின்றன. அப்போதும் அவன் அவ்விடம் வரவில்லை. ஆண்டாள் வருந்துகிறாள்; கண்ணனாகிய அரங்கன் தன் கையில் ஆசைப்பட்டு சங்கை வைத்திருக்கிறான். ஆனால் என் கையிலுள்ள சங்கு வளைகளைக் கீழே விழுமாறு செய்தவிட்டான். மூவடிமண் பெற + Read more
Verses: 607 to 616
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 11.1

607 தாமுகக்கும்தம்கையில் சங்கமேபோலாவோ? *
யாமுகக்குமெங்கையில் சங்கமுமேந்திழையீர் *
தீமுகத்துநாகணைமேல் சேரும்திருவரங்கர் *
ஆ முகத்தைநோக்காரால் அம்மனே! அம்மனே! (2)
607 ## தாம் உகக்கும் தம் கையில் * சங்கமே போலாவோ *
யாம் உகக்கும் எம் கையில் * சங்கமும்? ஏந்திழையீர் **
தீ முகத்து நாகணைமேல் * சேரும் திருவரங்கர் *
ஆ முகத்தை நோக்காரால் * அம்மனே அம்மனே (1)
607 ## tām ukakkum tam kaiyil * caṅkame polāvo *
yām ukakkum ĕm kaiyil * caṅkamum? entizhaiyīr **
tī mukattu nākaṇaimel * cerum tiruvaraṅkar *
ā mukattai nokkārāl * ammaṉe ammaṉe (1)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

607. O friends adorned with precious jewels, aren’t the bangles that I wear on my hands as precious as the conch that he carries in his hand? Won’t the lord of Srirangam resting on the fiery-faced snake look at me? It is very hard for me, very hard.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஏந்திழையீர்! நகை அணிந்துள்ள மாதர்களே!; யாம் உகக்கும் நான் விரும்பும்; எம் கையில் சங்கமும் என் கை வளைகள்; தாம் உகக்கும் தான் உகக்கும்; தம் கையில் சங்கமே தன் கை சங்கோடு; போலாவோ ஒப்பாகாதோ?; தீ முகத்து தீ போன்ற முகமுடைய; நாகணைமேல் பாம்புப் படுக்கையின்மேலே; சேரும் சயனித்திருக்கும்; திருவரங்கர் ஸ்ரீரங்கநாதன்; முகத்தை என் முகத்தை; நோக்காரால் பார்க்கவில்லையே; ஆ! அம்மனே! அம்மனே! ஐயோ! அந்தோ! அந்தோ!
entiḻaiyīr! o ornamented women!; ĕm kaiyil caṅkamum my bangles; yām ukakkum that I adore; polāvo would it match?; tam kaiyil caṅkame the hand-held conch; tām ukakkum that He adores; tiruvaraṅkar the Lord of Sri Rangam; cerum who rests on; nākaṇaimel the bed made of a serpent that has; tī mukattu a face like blazing fire; nokkārāl has not seen; mukattai my face; ā! ammaṉe! ammaṉe! oh what a sorrow!

NAT 11.2

608 எழிலுடையஅம்மனைமீர்! என்னரங்கத்தின்னமுதர் *
குழலழகர்வாயழகர் கண்ணழகர் * கொப்பூழில்
எழுகமலப்பூவழக ரெம்மானார் * என்னுடைய
கழல்வளையைத் தாமும்கழல்வளையேயாக்கினரே.
608 எழில் உடைய அம்மனைமீர் * என் அரங்கத்து இன்னமுதர் *
குழல் அழகர் வாய் அழகர் * கண் அழகர் கொப்பூழில் *
எழு கமலப் பூ அழகர் * எம்மானார் * என்னுடைய
கழல் வளையைத் * தாமும் கழல் வளையே ஆக்கினரே (2)
608 ĕzhil uṭaiya ammaṉaimīr * ĕṉ araṅkattu iṉṉamutar *
kuzhal azhakar vāy azhakar * kaṇ azhakar kŏppūzhil *
ĕzhu kamalap pū azhakar * ĕmmāṉār * ĕṉṉuṭaiya
kazhal val̤aiyait * tāmum kazhal val̤aiye ākkiṉare (2)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

608. O lovely women, My lord of Srirangam is sweet like nectar His hair is beautiful, His mouth and eyes are beautiful He has a lovely lotus on his navel with Nānmuhan on it He has made my bangles loosen and slide from my hands. Did he take them so he could wear them?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
எழிலுடைய அம்மனைமீர்! அழகிய தாய்மார்களே!; என் அரங்கத்து திருவரங்கத்திலிருக்கும்; இன் அமுதர் அமுதம் போன்ற எம்பெருமான்; குழல் அழகர் அழகான தலைமுடியுடையவர்; வாய் அழகர் அழகான அதரம் உடையவர்; கண் அழகர் அழகிய கண் உடையவர்; கொப்பூழில் நாபிக்கமலத்தில்; எழு கமல தாமரைப் பூவை; பூ அழகர் பெற்ற அழகர்; எம்மானார் எனக்கு ஸ்வாமியானவர்; என்னுடைய என்னுடைய; கழல் வளையை கைவளையை; தாமும் அவர்தான்; கழல் வளையே கழன்று போகும் வளை என்று; ஆக்கினரே ஆக்கினார்
ĕḻiluṭaiya ammaṉaimīr! oh beautiful mothers!; iṉ amutar the nectar-like Lord; ĕṉ araṅkattu who resides in Sri Rangam; kuḻal aḻakar has beautiful hair; vāy aḻakar has beautiful lips; kaṇ aḻakar and has beautiful eyes; pū aḻakar He has; ĕḻu kamala lotus; kŏppūḻil in His navel; ĕmmāṉār He is my Lord; tāmum He is the One; ākkiṉare who made; ĕṉṉuṭaiya my; kaḻal val̤aiyai bangles; kaḻal val̤aiye fall off from my hand

NAT 11.3

609 பொங்கோதம்சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் *
அங்காதுஞ்சோராமே ஆள்கின்றவெம்பெருமான் *
செங்கோலுடைய திருவரங்கச்செல்வனார் *
எங்கோல்வளையால் இடர்தீர்வராகாதே? (2)
609 ## பொங்கு ஓதம் சூழ்ந்த * புவனியும் விண் உலகும் *
அங்கு ஆதும் சோராமே * ஆள்கின்ற எம்பெருமான் **
செங்கோல் உடைய * திருவரங்கச் செல்வனார் *
எம் கோல் வளையால் * இடர் தீர்வர் ஆகாதே? (3)
609 ## pŏṅku otam cūzhnta * puvaṉiyum viṇ ulakum *
aṅku ātum corāme * āl̤kiṉṟa ĕmpĕrumāṉ **
cĕṅkol uṭaiya * tiruvaraṅkac cĕlvaṉār *
ĕm kol val̤aiyāl * iṭar tīrvar ākāte? (3)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

609. My dear lord of Srirangam rules the world surrounded by roaring oceans and the world of the sky, with his scepter, keeping trouble away from them. Would my bangles that he has made loose help him remove all the troubles of the world and keep it prosperous?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பொங்கு ஓதம் பொங்கும் கடலாலே; சூழ்ந்த சூழப்பட்ட; புவனியும் பூமண்டலமும்; விண் உலகும் பரமபதமும்; அங்கு ஆதும் சிறிதும்; சோராமே குறைவின்றி; ஆள்கின்ற ஆள்கின்ற; எம் பெருமான் எம்பெருமான்; செங்கோல் செங்கோல்; உடைய வைத்துள்ள; திருவரங்க திருவரங்க; செல்வனார் பிரான்; எம் எனது; கோல் வளையால் கைவளையாலே; இடர் தீர்வர் ஆகாதே? தம் குறைகள் தீர்ந்து நிறைவு பெறுவார் அன்றோ
ĕm pĕrumāṉ the Lord; āl̤kiṉṟa who rules; puvaṉiyum the earth; cūḻnta surrounded by; pŏṅku otam surging oceans; viṇ ulakum and the supreme abode; aṅku ātum without the slightest; corāme deficiency; cĕlvaṉār the Lord of; tiruvaraṅka Sri Rangam; uṭaiya who has; cĕṅkol the scepter; ĕm would my; kol val̤aiyāl bangles; iṭar tīrvar ākāte? remove troubles and help attain completeness

NAT 11.4

610 மச்சணிமாட மதிளரங்கர்வாமனனார் *
பச்சைப்பசுந்தேவர் தாம்பண்டுநீரேற்ற *
பிச்சைக்குறையாகி என்னுடையபெய்வளைமேல் *
இச்சை யுடையரேல் இத்தெருவேபோதாரே ?
610 மச்சு அணி மாட * மதில் அரங்கர் வாமனனார் *
பச்சைப் பசுந் தேவர் * தாம் பண்டு நீர் ஏற்ற **
பிச்சைக் குறையாகி * என்னுடைய பெய்வளை மேல் *
இச்சை உடையரேல் * இத் தெருவே போதாரே? (4)
610 maccu aṇi māṭa * matil araṅkar vāmaṉaṉār *
paccaip pacun tevar * tām paṇṭu nīr eṟṟa **
piccaik kuṟaiyāki * ĕṉṉuṭaiya pĕyval̤ai mel *
iccai uṭaiyarel * it tĕruve potāre? (4)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

610. The divine god of Srirangam filled with beautiful palaces and walls, went to Mahābali in ancient times as Vāmanā, and received with water poured in His hands scaled the world and took his lands. Wasn’t that enough for him? If he wants my bangles also can’t he come to my street and ask for them?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மச்சு அணி மேல் தள அலங்கரிக்கப்பட்ட வரிசையான; மாட மாடங்களையும்; மதிள் மதிள்களையுமுடைய; அரங்கர் ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்; வாமனனார் வாமனனாக; பச்சைப் பசும் பசுமை மிக்க; தேவர் தேவர்பிரான்; தாம் பண்டு தாம் முன்பு ஒரு சமயம்; நீர் ஏற்ற நீர் தாரை ஏந்திப் பெற்ற; பிச்சை பிச்சையிலே; குறை ஆகி குறை ஆனதால்; என்னுடைய என்னுடைய; பெய்வளை மேல் கை வளைமேல்; இச்சை உடையரேல் விருப்பம் கொண்டவரானால்; இத் தெருவே இத் தெருவழியாக; போதாரே? வரமாட்டாரோ?
araṅkar He who resides in Sri Rangam; matil̤ that has walls; māṭa and mansions; maccu aṇi with adorned top floor; tevar the Lord of Celestials; paccaip pacum full of freshness and green; tām paṇṭu once upon a time; vāmaṉaṉār as Vamana; nīr eṟṟa received lands with stream of water; piccai as alms; kuṟai āki as though they were insufficient; iccai uṭaiyarel He wants; ĕṉṉuṭaiya my; pĕyval̤ai mel hand bangle too; potāre? would He not come; it tĕruve through this street

NAT 11.5

611 பொல்லாக்குறளுருவாய்ப் பொற்கையில்நீரேற்று *
எல்லாவுலகும் அளந்துகொண்ட எம்பெருமான் *
நல்லார்கள் வாழும் நளிரரங்கநாகணையான் *
இல்லாதோம்கைப்பொருளும் எய்துவானொத்துளனே.
611 பொல்லாக் குறள் உருவாய்ப் * பொன் கையில் நீர் ஏற்று *
எல்லா உலகும் * அளந்து கொண்ட எம்பெருமான் **
நல்லார்கள் வாழும் * நளிர் அரங்க நாகணையான் *
இல்லாதோம் கைப்பொருளும் * எய்துவான் ஒத்து உளனே (5)
611 pŏllāk kuṟal̤ uruvāyp * pŏn kaiyil nīr eṟṟu *
ĕllā ulakum * al̤antu kŏṇṭa ĕmpĕrumāṉ **
nallārkal̤ vāzhum * nal̤ir araṅka nākaṇaiyāṉ *
illātom kaippŏrul̤um * ĕytuvāṉ ŏttu ul̤aṉe (5)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

611. He rests on the snake bed in Srirangam where good people live. He went as a little boy to Mahābali, made him pour water on His golden hands, tricked him and measured the entire world I don't have anything with me. He seems to take away the little I have. What will He take?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பொல்லாக் குறள் அழகற்ற குள்ள; உருவாய் உருவம் எடுத்து; பொற் கையில் பொன்னான கையால்; நீர் ஏற்று பிக்ஷை பெற்று; எல்லா உலகும் அனைத்து உலகங்களையும்; அளந்து கொண்ட அளந்து தன் வசப்படுத்திய; எம் பெருமான் எம் பெருமான்; நல்லார்கள் உத்தமர்கள்; வாழும் வாழ்கிற; நளிர் குளிர்ச்சியான; அரங்க திருவரங்கத்தில்; நாக ஆதிசேஷன் மேல்; அணையான் சயனித்துள்ள பிரான்; இல்லாதோம் ஒன்றும் இல்லாதவளின்; கைப்பொருளும் கைப்பொருளை; எய்துவான் பறித்திடுபவன்; ஒத்து உளனே போல் உள்ளானே
ĕm pĕrumāṉ my Lord; uruvāy who took the form; pŏllāk kuṟal̤ of an unattractive dwarf; nīr eṟṟu and received alms; pŏṟ kaiyil with His golden hands; al̤antu kŏṇṭa and measured; ĕllā ulakum all the worlds; aṇaiyāṉ the Lord; nāka rests on Adisesha; nal̤ir in the cool; araṅka Sri Rangam; nallārkal̤ where noble ones; vāḻum live; ŏttu ul̤aṉe He appears to be the One who; ĕytuvāṉ snatches; kaippŏrul̤um things; illātom from the girl who had nothing

NAT 11.6

612 கைப்பொருள்கள்முன்னமே கைக்கொண்டார் * காவிரிநீர்
செய்ப்புரளவோடும் திருவரங்கச்செல்வனார் *
எப்பொருட்கும்நின்று ஆர்க்குமெய்தாது * நான்மறையின்
சொற்பொருளாய்நின்றார் என்மெய்ப்பொருளும்கொண்டாரே.
612 கைப் பொருள்கள் முன்னமே * கைக்கொண்டார் * காவிரி நீர்
செய்ப் புரள ஓடும் * திருவரங்கச் செல்வனார் **
எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் * எய்தாது * நான் மறையின்
சொற்பொருளாய் நின்றார் * என் மெய்ப்பொருளும் கொண்டாரே (6)
612 kaip pŏrul̤kal̤ muṉṉame * kaikkŏṇṭār * kāviri nīr
cĕyp pural̤a oṭum * tiruvaraṅkac cĕlvaṉār **
ĕp pŏruṭkum niṉṟu ārkkum * ĕytātu * nāṉ maṟaiyiṉ
cŏṟpŏrul̤āy niṉṟār * ĕṉ mĕyppŏrul̤um kŏṇṭāre (6)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

612. He is the beloved god of Srirangam where the Kaveri river flows carrying riches from everywhere and nourishing the fields. He is the inner meaning of the four Vedās and cannot be reached by anyone, high or low. He already stole my bangles and now he has stolen my heart and my whole self.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
காவிரி நீர் காவேரியின் நீர்; செய்ப் புரள பயிர் நிலங்களில் புரண்டு; ஓடும் ஓடும்; திருவரங்க ஸ்ரீரங்கத்தில் இருக்கும்; செல்வனார் பிரான்; எப்பொருட்கும் எல்லாப் பொருட்களிலும்; நின்று நின்று இருந்து; ஆர்க்கும் எவர்க்கும்; எய்தாது நெருங்கவொண்ணாது; நான்மறையின் நான்கு வேதங்களின்; சொல் சொற்களுக்கும்; பொருளாய் பொருளாய்; நின்றார் நிற்பவர்; முன்னமே ஏற்கனவே; கைப்பொருள்கள் கையிலுள்ள பொருள்களை; கைக்கொண்டார் பறித்துக் கொண்டவர்; என் மெய் எனது சரீரமாகிற; பொருளும் பொருளையும்; கொண்டாரே கொள்ளை கொண்டாரே
kāviri nīr the waters of Kaveri; cĕyp pural̤a roll through the fertile fields; oṭum and flow; tiruvaraṅka in Sri Rangam, where; cĕlvaṉār the Lord; ĕppŏruṭkum who abides in all things; niṉṟu and stands, present; ĕytātu unapproachable; ārkkum to everyone; niṉṟār He stands as; pŏrul̤āy the meaning; cŏl of the words of; nāṉmaṟaiyiṉ the four vedas; muṉṉame He already; kaikkŏṇṭār took away; kaippŏrul̤kal̤ the possesions from hand; kŏṇṭāre has He also stolen; pŏrul̤um the object; ĕṉ mĕy that is my body

NAT 11.7

613 உண்ணாதுறங்காது ஒலிகடலையூடறுத்து *
பெண்ணாக்கையாப்புண்டு தாமுற்றபேதெல்லாம் *
திண்ணார்மதிள்சூழ் திருவரங்கச்செல்வனார் *
எண்ணாதே தம்முடைய நன்மைகளேயெண்ணுவரே.
613 உண்ணாது உறங்காது * ஒலிகடலை ஊடறுத்து *
பெண் ஆக்கை யாப்புண்டு * தாம் உற்ற பேது எல்லாம் **
திண்ணார் மதிள் சூழ் * திருவரங்கச் செல்வனார் *
எண்ணாதே தம்முடைய * நன்மைகளே எண்ணுவரே (7)
613 uṇṇātu uṟaṅkātu * ŏlikaṭalai ūṭaṟuttu *
pĕṇ ākkai yāppuṇṭu * tām uṟṟa petu ĕllām **
tiṇṇār matil̤ cūzh * tiruvaraṅkac cĕlvaṉār *
ĕṇṇāte tammuṭaiya * naṉmaikal̤e ĕṇṇuvare (7)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

613. As Rāma, the divine god of Srirangam surrounded by strong walls suffered separation from his wife Sita. He couldn't eat or sleep without her He built a bridge across the ocean to bring her back from Lankā. We are separated from him, but he doesn’t worry about us and thinks only of making himself happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
திண்ணார் உறுதியான; மதில் சூழ் மதிள்களாலே சூழப்பட்ட; திருவரங்க ஸ்ரீரங்கத்தில் இருக்கும்; செல்வனார் பெருமான்; பெண் சீதையின்; ஆக்கை ஆப்புண்டு மேல் ஆசையினால்; உண்ணாது ஊண்; உறங்காது உறக்கமின்றி இருந்து; ஒலி கடலை கோஷிக்கின்ற கடலை; ஊடறுத்து துண்டித்து அணை கட்டி; தாம் உற்ற பேது அடைந்த சிறுமை; எல்லாம் எல்லாம்; எண்ணாதே எண்ணாமல்; தம்முடைய தமக்கு; நன்மைகளே உகந்தவற்றையே; எண்ணுவரே எண்ணுகிறாரே
cĕlvaṉār the Lord; tiruvaraṅka dwells in Sri Rangam; matil cūḻ that is surrounded by walls; tiṇṇār that were strong; uṟaṅkātu he remained sleepless; uṇṇātu and without food; ākkai āppuṇṭu because of His love; pĕṇ for Sita; ūṭaṟuttu He built a bridge across; ŏli kaṭalai the roaring sea; ĕṇṇāte without considering; ĕllām all; tām uṟṟa petu the suffering He went through; ĕṇṇuvare He now thinks; naṉmaikal̤e only what pleases; tammuṭaiya Him

NAT 11.8

614 பாசிதூர்த்துக்கிடந்த பார்மகட்கு * பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப்பன்றியாம் *
தேசுடையதேவர் திருவரங்கச்செல்வனார் *
பேசியிருப்பனகள் பேர்க்கவும்பேராவே. (2)
614 ## பாசி தூர்த்தக் கிடந்த * பார் மகட்கு * பண்டு ஒரு நாள்
மாசு உடம்பில் நீர் வாரா * மானம் இலாப் பன்றி ஆம் **
தேசு உடைய தேவர் * திருவரங்கச் செல்வனார் *
பேசி இருப்பனகள் * பேர்க்கவும் பேராவே (8)
614 ## pāci tūrttak kiṭanta * pār makaṭku * paṇṭu ŏru nāl̤
mācu uṭampil nīr vārā * māṉam ilāp paṉṟi ām **
tecu uṭaiya tevar * tiruvaraṅkac cĕlvaṉār *
peci iruppaṉakal̤ * perkkavum perāve (8)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

614. When the earth was hidden in the underworld, covered with moss the bright lord, took the form of an unclean boar in ancient times, split open the ground and rescued her I cannot forget the promises that the beautiful shining god of Srirangam made to me,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பண்டு ஒருநாள் முன்னொரு காலத்தில்; பாசி தூர்த்துக் கிடந்த பாசி படர்ந்து கிடந்த; பார் மகட்கு பூமிப் பிராட்டிக்காக; மாசு உடம்பில் சரீரத்தை அழுக்கேற்றிய; நீர்வாரா ஜலத்தில்; மானம் இலா மிகவும் கீழ்மையான; பன்றிஆம் பன்றி வடிவுடன் இருந்த; தேசு உடைய தேவர் தேஜஸ் மிக்க தேவர்; திரு அரங்க ஸ்ரீரங்கத்தில் இருக்கும்; செல்வனார் பிரான்; பேசி உன்னைப் பிரிந்திடேன் என்று; இருப்பனகள் பேசி இருப்பவை; பேர்க்கவும் மறக்க; பேராவே முடியாதபடி உள்ளதே
paṇṭu ŏrunāl̤ once upon a time; pār makaṭku when mother earth; pāci tūrttuk kiṭanta was covered with moss; tecu uṭaiya tevar the radiant Lord; tiru araṅka who reside in Sri Rangam; paṉṟiām incarnated as a boar; māṉam ilā which is a lowly form; mācu uṭampil with unclean body; nīrvārā in waters; cĕlvaṉār the Lord; iruppaṉakal̤ said; peci that He will not forget me; perāve which remain impossible; perkkavum to forget

NAT 11.9

615 கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக்கைப்பிடிப்பான் *
திண்ணார்ந்திருந்த சிசுபாலன்தேசழிந்து *
அண்ணாந் திருக்கவே ஆங்கவளைக்கைப்பிடித்த *
பெண்ணாளன்பேணுமூர் பேருமரங்கமே.
615 கண்ணாலம் கோடித்துக் * கன்னி தன்னைக் கைப்பிடிப்பான் *
திண் ஆர்ந்து இருந்த * சிசுபாலன் தேசு அழிந்து **
அண்ணாந்து இருக்கவே * ஆங்கு அவளைக் கைப்பிடித்த *
பெண்ணாளன் பேணும் ஊர் * பேரும் அரங்கமே (9)
615 kaṇṇālam koṭittuk * kaṉṉi taṉṉaik kaippiṭippāṉ *
tiṇ ārntu irunta * cicupālaṉ tecu azhintu **
aṇṇāntu irukkave * āṅku aval̤aik kaippiṭitta *
pĕṇṇāl̤aṉ peṇum ūr * perum araṅkame (9)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

615. When Sisupalan wanted to marry Rukmini, after all the arrangements had been made, Kannan fought him, took Rukmini with him and married her. Sri Ranganathan, the lord of Srirangam, will help me as he helped Rukmani.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கண்ணாலம் திருமண; கோடித்து ஏற்பாடு செய்து; கன்னி தன்னை ருக்மிணிப் பிராட்டியை; கைப்பிடிப்பான் திருமணம் செய்து கொள்வோம் என; திண் ஆர்ந்து இருந்த நிச்சயமாக நினைத்திருந்த; சிசுபாலன் தேசு அழிந்து சிசுபாலன் மானமழிந்து; அண்ணாந்து வானத்தை நோக்கியபடி; இருக்கவே இருந்தபோது; ஆங்கு அவளைக் அந்த ருக்மிணியை; கைப்பிடித்த திருமணம் செய்து கொண்டவனான; பெண்ணாளன் பெண்களைக் காக்கும் பிரான்; பேணும் ஊர் விரும்பியிருக்கும் ஊரின்; பேரும் அரங்கமே பெயரும் திருவரங்கமாம்
cicupālaṉ tecu aḻintu Sisupalan lost his honor; tiṇ ārntu irunta who had firm determination; kaippiṭippāṉ of marrying; kaṉṉi taṉṉai Rukmini; koṭittu after making arrangements to; kaṇṇālam marry her; kaippiṭitta when the Lord married; āṅku aval̤aik that Rukmini; irukkave when Sisupalan was; aṇṇāntu gazing helplessly at the sky; pĕṇṇāl̤aṉ The Lord, who is the protector of women; peṇum ūr desires the city the most; perum araṅkame which is called Sri Rangam

NAT 11.10

616 செம்மையுடைய திருவரங்கர்தாம்பணித்த *
மெய்ம்மைப்பெருவார்த்தை விட்டுசித்தர்கேட்டிருப்பர் *
தம்மையுகப்பாரைத் தாமுகப்பரென்னும்சொல் *
தம்மிடையேபொய்யானால் சாதிப்பாராரினியே? (2)
616 ## செம்மை உடைய * திருவரங்கர் தாம் பணித்த *
மெய்ம்மைப் பெரு வார்த்தை * விட்டுசித்தர் கேட்டிருப்பர் **
தம்மை உகப்பாரைத் * தாம் உகப்பர் என்னும் சொல் *
தம்மிடையே பொய்யானால் * சாதிப்பார் ஆர் இனியே? (10)
616 ## cĕmmai uṭaiya * tiruvaraṅkar tām paṇitta *
mĕymmaip pĕru vārttai * viṭṭucittar keṭṭiruppar **
tammai ukappārait * tām ukappar ĕṉṉum cŏl *
tammiṭaiye pŏyyāṉāl * cātippār ār iṉiye? (10)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

616. Vishnuchithan would have listened to the divine words of the impeccable God of Srirangam. 'The lord says, ‘I love those who love me, ’ Can this go wrong? If so will people revere Him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செம்மை செம்மைக் குணம்; உடைய தீர்மையாக உள்ள; திருவரங்கர் திருவரங்கர்; தாம் தம் வாயாலே; பணித்த அருளிச்செய்த; மெய்ம்மை சத்தியமானதும்; பெரு பெருமை மிக்கதுமான; வார்த்தை சரம சுலோகத்தை; விட்டுசித்தர் பெரியாழ்வார்; கேட்டு குருமுகமாகக் கேட்டபடி; இருப்பர் இருப்பார்; தம்மை தம்மை; உகப்பாரை விரும்பினவர்களை; தாம் உகப்பர் தாமும் விரும்புவர்’; என்னும் சொல் என்ற கூற்று; தம்மிடையே தம்மிடத்திலேயே; பொய்யானால் பொய்யாகிவிட்டால்; இனியே இனி மேல்; சாதிப்பார் ஆர்? எவர் மதிப்பர்?
tiruvaraṅkar the Lord of Sri Rangam; uṭaiya who has firm; cĕmmai virtuous qualities; paṇitta made; mĕymmai a promise; tām with His own mouth; pĕru that is filled with greatness; vārttai its the sacred Charama Shloka; viṭṭucittar Periazhwar; keṭṭu heard it through the mouth of the guru; iruppar and remain devoted; ukappārai those who love; tammai Him; tām ukappar He will also love them; ĕṉṉum cŏl this statement; pŏyyāṉāl if it becomes a lie; tammiṭaiye within Himself; iṉiye hereafter; cātippār ār? who will respect Him?