NAT 11.6

நான்மறையின் சொற்பொருளாய் நின்றவரன்றோ அவர்?

612 கைப்பொருள்கள்முன்னமே கைக்கொண்டார் * காவிரிநீர்
செய்ப்புரளவோடும் திருவரங்கச்செல்வனார் *
எப்பொருட்கும்நின்று ஆர்க்குமெய்தாது * நான்மறையின்
சொற்பொருளாய்நின்றார் என்மெய்ப்பொருளும்கொண்டாரே.
612 kaip pŏrul̤kal̤ muṉṉame * kaikkŏṇṭār * kāviri nīr
cĕyp pural̤a oṭum * tiruvaraṅkac cĕlvaṉār **
ĕp pŏruṭkum niṉṟu ārkkum * ĕytātu * nāṉ maṟaiyiṉ
cŏṟpŏrul̤āy niṉṟār * ĕṉ mĕyppŏrul̤um kŏṇṭāre (6)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

612. He is the beloved god of Srirangam where the Kaveri river flows carrying riches from everywhere and nourishing the fields. He is the inner meaning of the four Vedās and cannot be reached by anyone, high or low. He already stole my bangles and now he has stolen my heart and my whole self.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காவிரி நீர் காவேரியின் நீர்; செய்ப் புரள பயிர் நிலங்களில் புரண்டு; ஓடும் ஓடும்; திருவரங்க ஸ்ரீரங்கத்தில் இருக்கும்; செல்வனார் பிரான்; எப்பொருட்கும் எல்லாப் பொருட்களிலும்; நின்று நின்று இருந்து; ஆர்க்கும் எவர்க்கும்; எய்தாது நெருங்கவொண்ணாது; நான்மறையின் நான்கு வேதங்களின்; சொல் சொற்களுக்கும்; பொருளாய் பொருளாய்; நின்றார் நிற்பவர்; முன்னமே ஏற்கனவே; கைப்பொருள்கள் கையிலுள்ள பொருள்களை; கைக்கொண்டார் பறித்துக் கொண்டவர்; என் மெய் எனது சரீரமாகிற; பொருளும் பொருளையும்; கொண்டாரே கொள்ளை கொண்டாரே

Detailed WBW explanation

Emperumān, in His boundless compassion, has graciously chosen to dwell as Śrīmān—He who possesses Śrī Mahālakṣmī as His divine consort and wealth—in Thiruvarangam. This sacred abode is blessed with fields rendered fertile by the nurturing waters of the Kāvērī River. To some, He reveals Himself with sublime simplicity, regardless of their earthly stature, yet

+ Read more