Chapter 1

Thiruvinnagar 1 - (வண்டு உணும்)

திருவிண்ணகர் 1
Thiruvinnagar 1 - (வண்டு உணும்)
This Divya Desam is called Uppiliappan Kovil. It is also known as Thalasivanam. Here, Srinivasan resides. This is a place for offering prayers. The Lord here still accepts food offerings without salt. He is also known by the divine name Oppiliappan. How fitting it is to call Him Oppiliappan, meaning "the incomparable Lord"!
இந்தத் திவ்வியதேசத்தை உப்பிலியப்பன் கோயில் என்று கூறுவார்கள். இதனைத் தளஸீவனம் என்றும் கூறுவர். இங்கு ஸ்ரீநிவாஸன் எழுந்தருளி இருக்கின்றார். இது பிரார்த்தனைத் தலம். இப்பெருமாள் இப்போதும் உப்பு இல்லாமல் தளிகைகளை அமுது செய்கிறார். இப்பெருமானுக்கு ஒப்பிலியப்பன் என்ற திருநாமமும் கூறப்படுகிறது. ஒப்பில்லாத அப்பனை ஒப்பிலியப்பன் என்று அழைப்பது எவ்வளவு பொருத்தமானது!
Verses: 1448 to 1457
Grammar: Vaṉjiviruththam / வஞ்சிவிருத்தம்
Recital benefits: Will reach the feet of the lord Vāmanan
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.1.1

1448 வண்டுணு நறுமலரிண்டைகொண்டு
பண்டைநம்வினைகெடவென்று * அடிமேல்
தொண்டரும்அமரரும்பணியநின்று அங்கு
அண்டமொடுஅகலிடம்அளந்தவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே! (2)
1448 ## வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு *
பண்டை நம் வினை கெட என்று * அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று * அங்கு
அண்டமொடு அகல் இடம் அளந்தவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 1
1448 ## vaṇṭu uṇum naṟu malar iṇṭai kŏṇṭu *
paṇṭai nam viṉai kĕṭa ĕṉṟu * aṭimel
tŏṇṭarum amararum paṇiya niṉṟu * aṅku
aṇṭamŏṭu akal-iṭam al̤antavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-1

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1448. O lord, you are my ruler! I came and worshiped you who measured the world at Mahābali’s sacrifice as devotees and the gods carrying fragrant bunches of flowers swarming with honey-drinking bees and worshiped you so that their karmā will be removed. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரரும் தேவர்களும்; தொண்டரும் தொண்டர்களும்; வண்டு வண்டுகள்; உணும் மது உண்ணும்; நறு மலர் மணம் மிக்க நறு மலர் பூ; இண்டை மாலைகளை; கொண்டு ஏந்திக்கொண்டு; நம் பண்டை எங்களுடைய முந்தைய; வினை பாவங்களை எல்லாம்; கெட போக்கி அருள; என்று அடிமேல் வேண்டும் என்று வணங்கி; பணிய பாதங்களில் பணிய அவர்களுக்காக; அங்கு அங்கு அப்போதே; நின்று வாமனனாக நின்று; அண்டமொடு அண்டங்களையும்; அகல் இடம் பரந்த பூமியையும்; அளந்தவனே! திருவிக்கிரமனாக அளந்தவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் ஓர் அருள்; எனக்கு அருளுதியேல் எனக்கு அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.2

1449 அண்ணல்செய்துஅலைகடல்கடைந்து அதனுள்
கண்ணுதல்நஞ்சுண்ணக்கண்டவனே! *
விண்ணவரமுதுண அமுதில்வரும்
பெண்ணமுதுண்டஎம்பெருமானே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1449 அண்ணல் செய்து அலை கடல் கடைந்து * அதனுள்
கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே *
விண்ணவர் அமுது உண அமுதில் வரும் *
பெண் அமுது உண்ட எம் பெருமானே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 2
1449 aṇṇal cĕytu alai kaṭal kaṭaintu * ataṉul̤
kaṇṇutal nañcu uṇṇakkaṇṭavaṉe *
viṇṇavar amutu uṇa amutil varum *
pĕṇ amutu uṇṭa ĕm pĕrumāṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-2

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1449. You are the highest lord. When the milky ocean was churned, you saw Shivā with a forehead eye when he drank the poison that came from the ocean, and you gave the nectar that came out of the milky ocean to the gods and you loved Lakshmi who came from the milky ocean. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்ணல் தானே ஸர்வஸ்வாமி; செய்து என்பதைக் காட்டிக் கொண்டு; அலை கடல் அலை கடலை; கடைந்து கடைந்து; அதனுள் அக்கடலில்; நஞ்சு தோன்றின விஷத்தை; நுதல் கண் நெற்றிக் கண்ணனான ருத்ரன்; உண்ண உண்ணும்படி; கண்டவனே! பார்த்தவனே!; விண்ணவர் தேவர்கள்; அமுது உண அம்ருதம் உண்ண; அமுதில் வரும் அந்த அம்ருதத்திலிருந்து வந்த; பெண் பெண்ணான திருமகளை; அமுது உண்ட அம்ருதத்தை அனுபவித்த; எம் பெருமானே! எம் பெருமானே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் ஓர் அருள்; எனக்கு அருளுதியேல் எனக்கு அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.3

1450 குழல்நிறவண்ண! நின்கூறுகொண்ட
தழல்நிறவண்ணன்நண்ணார்நகரம்
விழ * நனிமலைசிலைவளைவுசெய்து அங்கு
அழல்நிறஅம்பதுவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1450 குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட *
தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ * நனி மலை சிலை வளைவு செய்து * அங்கு
அழல் நிற அம்பு அதுஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 3
1450 kuzhal niṟa vaṇṇa niṉkūṟu kŏṇṭa *
tazhal niṟa vaṇṇaṉ naṇṇār nakaram
vizha * naṉi malai cilai val̤aivu cĕytu * aṅku
azhal niṟa ampu-atuāṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-3

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1450. You with your dark curly hair are the brother of the fire-colored BalaRāman who bent his bow that was strong as a mountain, fought with his enemies and destroyed their lands with his fiery arrows. You are my ruler. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குழல் தலைமுடியை ஒத்த; நிற வண்ண! நிறமுடையவனே!; நின் உன் சரீரத்தின்; கூறு ஒரு பகுதியை; கொண்ட இடமாக கொண்ட; தழல் நெருப்பின்; நிற வண்ணன் நிறம் போன்ற ருத்ரனால்; நண்ணார் அசுரர்களின்; நகரம் விழ திரிபுரம் முடியும்படியாக; நனி மலை மேருமலை போன்ற; சிலை வளைவு செய்து வில்லை வளைத்து; கழல் நெருப்புப்போன்ற; அங்கு நிற அம்பு அது நிறமுடைய அம்பில்; ஆனவனே! பிரவேசித்தவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.4

1451 நிலவொடுவெயில்நிலவிருசுடரும்
உலகமும்உயிரும் உண்டுஒருகால் *
கலைதருகுழவியின்உருவினையாய்
அலைகடல்ஆலிலைவளர்ந்தவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1451 நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும் *
உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால் *
கலை தரு குழவியின் உருவினை ஆய் *
அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 4
1451 nilavŏṭu vĕyil nilavu iru cuṭarum *
ulakamum uyirkal̤um uṇṭu ŏrukāl *
kalai taru kuzhaviyiṉ uruviṉai āy *
alai kaṭal āl ilai val̤arntavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-4

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1451. O lord, you, my ruler, swallowed the bright moon, the sun, the world and all creatures at the end of the eon. You rested on a banyan leaf on the wavy ocean when you were a beautiful baby. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிலவொடு நிலாவோடும்; வெயில் வெய்யிலோடும்; நிலவு ஸஞ்சரிக்கும்; இரு சுடரும் சந்திரஸூர்யர்களையும்; உலகமும் உலகங்களையும்; உயிர்களும் உயிரினங்களையும்; உண்டு ஒருகால் பிரளயகாலத்தில் உண்டு; கலை தரு குழவியின் சிறிய வடிவுடையவனே!; உருவினை ஆய் குழந்தை ரூபமாய்; அலை கடல் அலை கடலில்; ஆலிலை ஆலிலைமேல்; வளர்ந்தவனே! கண் வளர்ந்தவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.5

1452 பாரெழுகடலெழுமலையெழுமாய்ச்
சீர்கெழும்இவ்வுலகேழுமெல்லாம் *
ஆர்கெழுவயிற்றினில்அடக்கிநின்று அங்கு
ஒரெழுத்துஓருருவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1452 பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்ச் *
சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம் *
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று * அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 5
1452 pār ĕzhu kaṭal ĕzhu malai ĕzhum āyc *
cīr kĕzhum iv ulaku ezhum ĕllām *
ār kĕzhu vayiṟṟiṉil aṭakki niṉṟu * aṅku
or ĕzhuttu or uru āṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-5

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1452. O lord, you are my ruler. You swallowed all the seven worlds, seven oceans, seven mountains and the whole wonderful earth and kept them in your strong, handsome stomach. You have the form of one letter, “Shri. ” If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் எழு ஏழு பூமியையும்; கடல் எழு ஏழு கடல்களையும்; மலை எழும் ஆய் ஏழு மலைகளையும்; சீர் கெழும் அழகு மிக்க; இவ்வுலகு இவ்வுலகங்கள்; ஏழும் ஏழையும்; எல்லாம் எல்லாவற்றையும்; ஆர் கெழு மிக அழகிய; வயிற்றினில் வயிற்றினில்; அடக்கி அடக்கி; நின்று அங்கு வைத்துக்கொண்டு; ஓர் எழுத்து அகாரத்திற்கு காரணமானவனே; ஓர் உரு ஓர் ஆதிமூர்த்தி அகாரத்தின் பொருள்; ஆனவனே! ஆனவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.6

1453 கார்கெழுகடல்களும்மலைகளுமாய்
ஏர்கெழும்உலகமுமாகி *
முதலார்களும்அறிவருநிலையினையாய்ச்
சீர்கெழுநான்மறையானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1453 கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய் *
ஏர் கெழும் உலகமும் ஆகி *
முதலார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்ச் *
சீர் கெழு நான்மறை ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 6
1453 kār kĕzhu kaṭalkal̤um malaikal̤um āy *
er kĕzhum ulakamum āki *
mutalārkal̤um aṟivu-arum nilaiyiṉai āyc *
cīr kĕzhu nāṉmaṟai āṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-6

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1453. O lord, you, my ruler, are the dark oceans, the mountains, the beautiful worlds and the four excellent Vedās, which you taught to the sages, giving divine knowledge to all. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் கெழு மேகங்கள் நிறைதிருக்கும்; கடல்களும் கடல்களுக்கும்; மலைகளுமாய் மலைகளுக்கும் ஆதாரபூதனாய்; ஏர் கெழும் அழகிய; உலகமும் உலகங்களுக்கும்; ஆகி நிர்வாஹகனாய்; முதலார்களும் பிரமன் முதலியோர்க்கும்; அறிவு அரும் அறிய முடியாத; நிலையினை ஆய் ஸ்வபாவத்தையுடையவனாய்; சீர் கெழு சிறந்த அழகையுடைய; நான்மறை நான்கு வேதங்களுக்கும்; ஆனவனே! பொருளானவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.7

1454 உருக்குறுநறுநெய்கொண்டுஆரழலில்
இறுக்குறும்அந்தணர்சந்தியின்வாய் *
பெருக்கமொடுஅமரர்களமரநல்கும்
இருக்கினில்இன்னிசையானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1454 உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில் *
இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய் *
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும் *
இருக்கினில் இன் இசை ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 7
1454 urukku uṟu naṟu nĕy kŏṇṭu ār azhalil *
irukku uṟum antaṇar cantiyiṉvāy *
pĕrukkamŏṭu amararkal̤ amara nalkum *
irukkiṉil iṉ icai āṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-7

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1454. O my lord and ruler, in the evening when the Vediyars make sacrifices pouring fragrant ghee in fire and the gods come there in a group, joining them and they all recite the Rig Vedā, you are the sweet music in their recitation. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர்கள் தேவர்கள்; பெருக்க மொடு அமர வசதியாக வாழ; உருக்கு உறு உருக்கின; நறு நெய் மணம் மிக்க நெய்யை; கொண்டு கொண்டு; ஆர் அழலில் எரியும் அக்நியில்; இருக்கு உறும் வேதவித்பன்னர்களான; அந்தணர் வைதிகர்களும்; சந்தியின்வாய் ஸந்தியா காலந்தோறும்; பெருக்கமொடு ஹோமம்; நல்கும் பண்ணுவதற்கு தகுந்த; ருக்கினில் வேதத்திலுள்ள; இன்னிசை இன்னிசை; ஆனவனே! பிரதிபாத்யனானவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.8

1455 காதல்செய்துஇளையவர்கலவிதரும்
வேதனைவினையதுவெருவுதலாம் *
ஆதலின்உனதடியணுகுவன்நான்.
போதலார்நெடுமுடிப்புண்ணியனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1455 காதல் செய்து இளையவர் கலவி தரும் *
வேதனை வினை அது வெருவுதல் ஆம் *
ஆதலின் உனது அடி அணுகுவன் நான் *
போது அலர் நெடுமுடிப் புண்ணியனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 8
1455 kātal cĕytu il̤aiyavar kalavi tarum *
vetaṉai viṉai atu vĕruvutal ām *
ātaliṉ uṉatu aṭi aṇukuvaṉ nāṉ *
potu alar nĕṭumuṭip puṇṇiyaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-8

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1455. O lord, you, my ruler, are virtuous and you are adorned with a long crown decorated with opening blossoms. I am frightened to be in love with young women because it only makes me suffer and I approach your feet. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போது அழகிய மலர்களால்; அலர் அலங்கரிக்கப்பட்ட; நெடு முடி நீண்ட முடியையுள்ள; புண்ணியனே! புண்ணியனே!; இளையவர் இளம்பெண்கள்; காதல் செய்து காதல் செய்து; தரும் கொடுக்கும்; வேதனை துக்கரூபமான; கலவி கலவிக்கு காரணமான; வினை அது கர்மமானது; வெருவுதல் எனக்கு அச்சந்தருவதாக; ஆம் உள்ளது; ஆதலின் ஆகையினால்; உனது அடி உன் திருவடிகளை; அணுகுவன் நான்! நான் பணிவேன்; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.9

1456 சாதலும்பிறத்தலும்என்றிவற்றை
காதல்செய்யாதுஉனகழலடைந்தேன் *
ஓதல்செய்நான்மறையாகி உம்பர்
ஆதல்செய்மூவுருவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
1456 சாதலும் பிறத்தலும் என்று இவற்றை
காதல் செய்யாது உன கழல் அடைந்தேன் *
ஓதல் செய் நான்மறை ஆகி * உம்பர்
ஆதல் செய் மூவுரு ஆனவனே **
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் * அருள் எனக்கு அருளுதியேல் *
வேண்டேன் மனைவாழ்க்கையை * விண்ணகர் மேயவனே 9
1456 cātalum piṟattalum ĕṉṟu ivaṟṟai
kātal cĕyyātu uṉa kazhal aṭainteṉ *
otal cĕy nāṉmaṟai āki * umpar
ātal cĕy mūvuru āṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-9

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1456. O my lord and ruler, I do not want to be born or die in this world again and again, and so I come to your ankleted feet. You are the four Vedās recited by sages and you are the three gods in the sky. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓதல் செய் ஓதப்படும்; நான்மறை நான்கு வேதங்களுக்கும்; ஆகி பொருளாய்; உம்பர் பிரமன் சிவன் இந்திரன்; ஆதல் செய் மூவுரு ஆகிய மூவர்க்கும்; ஆனவனே! சரீரமானவனே!; சாதலும் பிறத்தலும் சாவதும் பிறப்பதும்; என்று இவற்றை என்ற இவற்றை; காதல் செய்யாது விரும்பாமல்; உன கழல் உன் பாதங்களை; அடைந்தேன் பற்றினேன்; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

PT 6.1.10

1457 பூமரு பொழிலணி விண்ணகர்மேல் *
காமருசீர்க் கலிகன்றிசொன்ன *
பாமருதமிழிவை பாடவல்லார் *
வாமனனடியிணை மருவுவரே. (2)
1457 ## பூ மரு பொழில் அணி * விண்ணகர் மேல் *
காமரு சீர்க் * கலிகன்றி சொன்ன **
பா மரு தமிழ் இவை * பாட வல்லார் *
வாமனன் அடி இணை * மருவுவரே 10
1457 ## pū maru pŏzhil aṇi * viṇṇakar mel *
kāmaru cīrk * kalikaṉṟi cŏṉṉa **
pā maru tamizh-ivai * pāṭa vallār *
vāmaṉaṉ aṭi-iṇai * maruvuvare-10

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1457. The famous Kaliyan composed Tamil pāsurams on Thiruvinnagar surrounded by blooming groves. If devotees learn and recite these musical pāsurams they will reach the feet of the lord Vāmanan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூமரு மலர்களையுடைய; பொழில் சோலைகளால்; அணி அலங்கரிக்கப்பட்ட; விண்ணகர்மேல் திருவிண்ணகரைக் குறித்து; காமரு விரும்பத்தக்க வைஷ்ணவ; சீர் லக்ஷ்மியையுடைய; கலிகன்றி திருமங்கையாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; பாமரு அழகிய இந்த; தமிழ் இவை பத்துப் பாசுரங்களையும்; பாடவல்லார் அனுசந்திப்பவர்கள்; வாமனன் வாமனன்; அடி இணை திருவடிகளை; மருவுவரே அடைவர்கள்