PT 6.1.4

ஆலிலையில் கண்வளர்ந்தவனே! அருள் செய்

1451 நிலவொடுவெயில்நிலவிருசுடரும்
உலகமும்உயிரும் உண்டுஒருகால் *
கலைதருகுழவியின்உருவினையாய்
அலைகடல்ஆலிலைவளர்ந்தவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
PT.6.1.4
1451 nilavŏṭu vĕyil nilavu iru cuṭarum *
ulakamum uyirkal̤um uṇṭu ŏrukāl *
kalai taru kuzhaviyiṉ uruviṉai āy *
alai kaṭal āl ilai val̤arntavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-4

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1451. O lord, you, my ruler, swallowed the bright moon, the sun, the world and all creatures at the end of the eon. You rested on a banyan leaf on the wavy ocean when you were a beautiful baby. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிலவொடு நிலாவோடும்; வெயில் வெய்யிலோடும்; நிலவு ஸஞ்சரிக்கும்; இரு சுடரும் சந்திரஸூர்யர்களையும்; உலகமும் உலகங்களையும்; உயிர்களும் உயிரினங்களையும்; உண்டு ஒருகால் பிரளயகாலத்தில் உண்டு; கலை தரு குழவியின் சிறிய வடிவுடையவனே!; உருவினை ஆய் குழந்தை ரூபமாய்; அலை கடல் அலை கடலில்; ஆலிலை ஆலிலைமேல்; வளர்ந்தவனே! கண் வளர்ந்தவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!