PT 6.1.5

திருவண்ணகரானே! திருவருள் தா

1452 பாரெழுகடலெழுமலையெழுமாய்ச்
சீர்கெழும்இவ்வுலகேழுமெல்லாம் *
ஆர்கெழுவயிற்றினில்அடக்கிநின்று அங்கு
ஒரெழுத்துஓருருவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
PT.6.1.5
1452 pār ĕzhu kaṭal ĕzhu malai ĕzhum āyc *
cīr kĕzhum iv ulaku ezhum ĕllām *
ār kĕzhu vayiṟṟiṉil aṭakki niṉṟu * aṅku
or ĕzhuttu or uru āṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-5

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1452. O lord, you are my ruler. You swallowed all the seven worlds, seven oceans, seven mountains and the whole wonderful earth and kept them in your strong, handsome stomach. You have the form of one letter, “Shri. ” If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பார் எழு ஏழு பூமியையும்; கடல் எழு ஏழு கடல்களையும்; மலை எழும் ஆய் ஏழு மலைகளையும்; சீர் கெழும் அழகு மிக்க; இவ்வுலகு இவ்வுலகங்கள்; ஏழும் ஏழையும்; எல்லாம் எல்லாவற்றையும்; ஆர் கெழு மிக அழகிய; வயிற்றினில் வயிற்றினில்; அடக்கி அடக்கி; நின்று அங்கு வைத்துக்கொண்டு; ஓர் எழுத்து அகாரத்திற்கு காரணமானவனே; ஓர் உரு ஓர் ஆதிமூர்த்தி அகாரத்தின் பொருள்; ஆனவனே! ஆனவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!

Āchārya Vyākyānam

சேராதவற்றை சேர்த்துக் கொண்டது உமக்கு ஒரு பொருட்டே இல்லையே அகில ஸமஸ்த வஸ்துக்களும் சகல வித காரணம் நீ அன்றோ –

பாரெழு கடலெழு மலை ஏழு மாயச் சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம் ஆர் குழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கோர் எழுத்து ஓர் உரு வானவனே ஆண்டாய் உனைக் காண்பதோர் அருள் எனக்கு அருளுதியேல் வேண்டேன் மனை வாழ்க்கையை விண்ணவர் மேயவனே —6-1-5-

எழுத்து ஓர் உரு வானவனே-அகார -வாஸ்யம்

+ Read more