PT 6.1.10

திருமால் திருவடி சேர்வர்

1457 பூமரு பொழிலணி விண்ணகர்மேல் *
காமருசீர்க் கலிகன்றிசொன்ன *
பாமருதமிழிவை பாடவல்லார் *
வாமனனடியிணை மருவுவரே. (2)
PT.6.1.10
1457 ## pū maru pŏzhil aṇi * viṇṇakar mel *
kāmaru cīrk * kalikaṉṟi cŏṉṉa **
pā maru tamizh-ivai * pāṭa vallār *
vāmaṉaṉ aṭi-iṇai * maruvuvare-10

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1457. The famous Kaliyan composed Tamil pāsurams on Thiruvinnagar surrounded by blooming groves. If devotees learn and recite these musical pāsurams they will reach the feet of the lord Vāmanan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூமரு மலர்களையுடைய; பொழில் சோலைகளால்; அணி அலங்கரிக்கப்பட்ட; விண்ணகர்மேல் திருவிண்ணகரைக் குறித்து; காமரு விரும்பத்தக்க வைஷ்ணவ; சீர் லக்ஷ்மியையுடைய; கலிகன்றி திருமங்கையாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; பாமரு அழகிய இந்த; தமிழ் இவை பத்துப் பாசுரங்களையும்; பாடவல்லார் அனுசந்திப்பவர்கள்; வாமனன் வாமனன்; அடி இணை திருவடிகளை; மருவுவரே அடைவர்கள்