PT 6.1.3

நீலமேனியனே! நின்னைக்காண அருள் செய்

1450 குழல்நிறவண்ண! நின்கூறுகொண்ட
தழல்நிறவண்ணன்நண்ணார்நகரம்
விழ * நனிமலைசிலைவளைவுசெய்து அங்கு
அழல்நிறஅம்பதுவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
PT.6.1.3
1450 kuzhal niṟa vaṇṇa niṉkūṟu kŏṇṭa *
tazhal niṟa vaṇṇaṉ naṇṇār nakaram
vizha * naṉi malai cilai val̤aivu cĕytu * aṅku
azhal niṟa ampu-atuāṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-3

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1450. You with your dark curly hair are the brother of the fire-colored BalaRāman who bent his bow that was strong as a mountain, fought with his enemies and destroyed their lands with his fiery arrows. You are my ruler. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குழல் தலைமுடியை ஒத்த; நிற வண்ண! நிறமுடையவனே!; நின் உன் சரீரத்தின்; கூறு ஒரு பகுதியை; கொண்ட இடமாக கொண்ட; தழல் நெருப்பின்; நிற வண்ணன் நிறம் போன்ற ருத்ரனால்; நண்ணார் அசுரர்களின்; நகரம் விழ திரிபுரம் முடியும்படியாக; நனி மலை மேருமலை போன்ற; சிலை வளைவு செய்து வில்லை வளைத்து; கழல் நெருப்புப்போன்ற; அங்கு நிற அம்பு அது நிறமுடைய அம்பில்; ஆனவனே! பிரவேசித்தவனே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!