Chapter 2

Thiruvinnagar 2 - (பொறுத்தேன் புன்சொல்)

திருவிண்ணகர் 2
Thiruvinnagar 2 - (பொறுத்தேன் புன்சொல்)
These verses are from Thiruvannagar Pasurams. Previously, the āzhvār expressed a desire to renounce household life, saying "I do not want a worldly life." The Lord did not immediately come running to grant grace. Now, the āzhvār prays, "Do not consider my faults. Accept me, thinking of me as one associated with the Goddess," beseeching the Lord for His grace.
ஈண்டு உள்ளனவும் திருவண்ணகர்ப் பாசுரங்களே. முன்பு ஆழ்வார் வேண்டேன் மனை வாழ்க்கையை என்றார். பகவான் ஒடி வந்து அருள் கொடுக்கவில்லை. என் குற்றங்களைப் பாராதே பிராட்டியைச் சேர்ந்தவன் எனக்கருதி என்னை ஏற்றுக் கொள் என்று அவர் ஈண்டு வேண்டுகிறார்.
Verses: 1458 to 1467
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 6.2.1
    1458 ## பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் * பொருள் இன்பம் என இரண்டும்
    இறுத்தேன் * ஐம்புலன்கள் கடன் ஆயின * வாயில் ஒட்டி
    அறுத்தேன் ** ஆர்வச் செற்றம் அவை தம்மை * மனத்து அகற்றி
    வெறுத்தேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 1
  • PT 6.2.2
    1459 மறந்தேன் உன்னை முன்னம் * மறந்த மதி இல் மனத்தால் *
    இறந்தேன் எத்தனையும் * அதனால் இடும்பைக் குழியில் **
    பிறந்தே எய்த்து ஒழிந்தேன் * பெருமான் திரு மார்பா *
    சிறந்தேன் நின் அடிக்கே * திருவிண்ணகர் மேயவனே
  • PT 6.2.3
    1460 மான் ஏய் நோக்கியர் தம் * வயிற்றுக் குழியில் உழைக்கும் *
    ஊன் ஏய் ஆக்கை தன்னை * உதவாமை உணர்ந்து உணர்ந்து **
    வானே மா நிலமே * வந்து வந்து என் மனத்து இருந்த
    தேனே! * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 3
  • PT 6.2.4
    1461 பிறிந்தேன் பெற்ற மக்கள் * பெண்டிர் என்று இவர் பின் உதவாது
    அறிந்தேன் * நீ பணித்த அருள் என்னும் * ஒள் வாள் உருவி
    எறிந்தேன் ** ஐம்புலன்கள் இடர் தீர * எறிந்து வந்து
    செறிந்தேன் * நின் அடிக்கே * திருவிண்ணகர் மேயவனே 4
  • PT 6.2.5
    1462 பாண் தேன் வண்டு அறையும் குழலார்கள் * பல்லாண்டு இசைப்ப *
    ஆண்டார் வையம் எல்லாம் * அரசு ஆகி முன் ஆண்டவரே **
    மாண்டார் என்று வந்தார் * அந்தோ மனைவாழ்க்கை தன்னை
    வேண்டேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 5
  • PT 6.2.6
    1463 கல்லா ஐம்புலன்கள் அவை * கண்டவாறு செய்யகில்லேன் *
    மல்லா மல் அமருள் மல்லர் மாள * மல் அடர்த்த
    மல்லா ** மல்லல் அம் சீர் * மதிள் நீர் இலங்கை அழித்த
    வில்லா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 6
  • PT 6.2.7
    1464 வேறா யான் இரந்தேன் * வெகுளாது மனக்கொள் எந்தாய் *
    ஆறா வெம் நரகத்து * அடியேனை இடக் கருதி **
    கூறா ஐவர் வந்து குமைக்கக் * குடிவிட்டவரை *
    தேறாது உன் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 7
  • PT 6.2.8
    1465 தீ வாய் வல் வினையார் * உடன் நின்று சிறந்தவர்போல் *
    மேவா வெம் நரகத்து இட * உற்று விரைந்து வந்தார் **
    மூவா வானவர் தம் முதல்வா * மதி கோள் விடுத்த
    தேவா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 8
  • PT 6.2.9
    1466 போது ஆர் தாமரையாள் * புலவி குல வானவர் தம்
    கோதா * கோது இல் செங்கோல் * குடை மன்னர் இடை நடந்த
    தூதா ** தூ மொழியாய் சுடர்போல் * என் மனத்து இருந்த
    வேதா * நின் அடைந்தேன் * திருவிண்ணகர் மேயவனே 9
  • PT 6.2.10
    1467 ## தேன் ஆர் பூம் புறவில் * திருவிண்ணகர் மேயவனை *
    வான் ஆரும் மதிள் சூழ் * வயல் மங்கையர் கோன் மருவார் **
    ஊன் ஆர் வேல் கலியன் * ஒலிசெய் தமிழ் மாலை வல்லார் *
    கோன் ஆய் வானவர் தம் * கொடி மா நகர் கூடுவரே 10