PT 6.1.9

மும்மூர்த்தியானவனே; நின்னைக் காணவேண்டும்

1456 சாதலும்பிறத்தலும்என்றிவற்றை
காதல்செய்யாதுஉனகழலடைந்தேன் *
ஓதல்செய்நான்மறையாகி உம்பர்
ஆதல்செய்மூவுருவானவனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
PT.6.1.9
1456 cātalum piṟattalum ĕṉṟu ivaṟṟai
kātal cĕyyātu uṉa kazhal aṭainteṉ *
otal cĕy nāṉmaṟai āki * umpar
ātal cĕy mūvuru āṉavaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-9

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1456. O my lord and ruler, I do not want to be born or die in this world again and again, and so I come to your ankleted feet. You are the four Vedās recited by sages and you are the three gods in the sky. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓதல் செய் ஓதப்படும்; நான்மறை நான்கு வேதங்களுக்கும்; ஆகி பொருளாய்; உம்பர் பிரமன் சிவன் இந்திரன்; ஆதல் செய் மூவுரு ஆகிய மூவர்க்கும்; ஆனவனே! சரீரமானவனே!; சாதலும் பிறத்தலும் சாவதும் பிறப்பதும்; என்று இவற்றை என்ற இவற்றை; காதல் செய்யாது விரும்பாமல்; உன கழல் உன் பாதங்களை; அடைந்தேன் பற்றினேன்; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!