PT 6.1.8

பெண்ணாசை விடுத்தேன்; நின்னைக் காண அருள் செய்

1455 காதல்செய்துஇளையவர்கலவிதரும்
வேதனைவினையதுவெருவுதலாம் *
ஆதலின்உனதடியணுகுவன்நான்.
போதலார்நெடுமுடிப்புண்ணியனே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
PT.6.1.8
1455 kātal cĕytu il̤aiyavar kalavi tarum *
vetaṉai viṉai atu vĕruvutal ām *
ātaliṉ uṉatu aṭi aṇukuvaṉ nāṉ *
potu alar nĕṭumuṭip puṇṇiyaṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-8

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1455. O lord, you, my ruler, are virtuous and you are adorned with a long crown decorated with opening blossoms. I am frightened to be in love with young women because it only makes me suffer and I approach your feet. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போது அழகிய மலர்களால்; அலர் அலங்கரிக்கப்பட்ட; நெடு முடி நீண்ட முடியையுள்ள; புண்ணியனே! புண்ணியனே!; இளையவர் இளம்பெண்கள்; காதல் செய்து காதல் செய்து; தரும் கொடுக்கும்; வேதனை துக்கரூபமான; கலவி கலவிக்கு காரணமான; வினை அது கர்மமானது; வெருவுதல் எனக்கு அச்சந்தருவதாக; ஆம் உள்ளது; ஆதலின் ஆகையினால்; உனது அடி உன் திருவடிகளை; அணுகுவன் நான்! நான் பணிவேன்; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் எனக்கு ஓர் அருள் எனக்கு; அருளுதியேல் அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!