Chapter 9

Two girls talking to each other about the glories of Lord Rama and Lord Krishna - (என் நாதன்)

உந்தி பறத்தல்
Two girls talking to each other about the glories of Lord Rama and Lord Krishna - (என் நாதன்)
Periyāzhvār has so far delighted in describing Krishna's qualities. Now, he wishes to rejoice in the noble virtues of Rama as well. He transforms into two cowherd women. Through the voice of one woman, he narrates the virtues of Rama, and through the voice of the other, he recounts the qualities of Krishna, immersing himself in the ocean of their greatness. This hymn is structured such that one verse praises Rama's greatness, and the next verse extols Krishna's greatness!
பெரியாழ்வார் இதுவரை கண்ணனின் பண்புகளையே கூறி மகிழ்ந்தார். இனி இராமனின் சீரிய குணங்களையும் கலந்து கூறி மகிழ விரும்பினார். தாமே இரண்டு ஆயர் பெண்களாக ஆனார். ஒரு பெண் வாயினால் இராம குணத்தையும், மற்றொரு பெண் வாயினால் கிருஷ்ணனின் குணத்தையும் கூறி அவர்களின் பெருமைக் கடலில் மூழ்குகிறார். ஒரு பாசுரம் இராமனின் பெருமையையும் மற்றொரு பாசுரம் கிருஷ்ணனின் பெருமையையும் கூறுவதாக இத்திருமொழி அமைந்துள்ளது!
Verses: 307 to 317
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting freed from all hurdles
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 3.9.1

307 என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன் * னாதன்காணவே தண்பூமரத்தினை *
வன்னாதப்புள்ளால் வலியப்பறித்திட்ட *
என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற. (2)
307 ## என் நாதன் தேவிக்கு * அன்று இன்பப்பூ ஈயாதாள் *
தன் நாதன் காணவே * தண்பூ மரத்தினை **
வன் நாதப் புள்ளால் * வலியப் பறித்திட்ட *
என் நாதன் வன்மையைப் பாடிப் பற * எம்பிரான் வன்மையைப் பாடிப் பற (1)
307 ## ĕṉ nātaṉ tevikku * aṉṟu iṉpappū īyātāl̤ *
taṉ nātaṉ kāṇave * taṇpū marattiṉai **
vaṉ nātap pul̤l̤āl * valiyap paṟittiṭṭa *
ĕṉ nātaṉ vaṉmaiyaip pāṭip paṟa * ĕmpirāṉ vaṉmaiyaip pāṭip paṟa (1)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

307. When Indrani refused to part with the Parijatham tree, He (Krishna) sent Garudā to uproot the tree in Indra's presence and planted it in Satyabhama's garden. Praise and sing the strength of my beloved and fly, praise and sing the strength of my dear one and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்நாதன் என் ஸ்வாமி கண்ணபிரானுடைய; தேவிக்கு அன்று தேவியான சத்யபாமைக்கு அன்று; இன்பப்பூ இனிமையான கற்பகப் பூவை; ஈயாதாள் தன் தராதவளான இந்திராணியின்; நாதன் கணவன் இந்திரன்; காணவே பார்த்திருக்கும் போதே; தண் பூ குளிர்ந்து பூத்திருக்கிற; மரத்தினை கற்பக விருக்ஷத்தை; வன்நாத வலிமையுடைய ஸாமவேத ஸ்வரூபியான; புள்ளால் கருடனால்; வலியப் பறித்து மிக்க பலத்துடன் பிடுங்கி வரச்செய்து; இட்ட சத்யபாமாவின் தோட்டத்தில் நட்ட; என் நாதன் என் தலைவனான கண்ணபிரானின்; வன்மையை வல்லமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!; எம்பிரான் என் பிரானின்; வன்மையை வல்லமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
tevikku aṉṟu once, for Sathyabama, the divine consort of; ĕṉnātaṉ my lord, Kannan; īyātāl̤ taṉ when indrani; iṉpappū refused to give karapaga flowers; pul̤l̤āl garuda; vaṉnāta in the form of the powerful Samaveda; valiyap paṟittu with strength plucked; taṇ pū the blooming; marattiṉai wish-fulfilling tree; nātaṉ and when her husband Indran; kāṇave was looking; iṭṭa and planted it in Sathyabama's garden; pāṭip paṟa! praise and sing!; vaṉmaiyai the power of; ĕṉ nātaṉ my lord, Kannan; pāṭip paṟa! praise and sing!; vaṉmaiyai the power of; ĕmpirāṉ my lord

PAT 3.9.2

308 என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன் * வில்லினோடும் தவத்தைஎதிர்வாங்கி *
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான் *
தன் வில்லின்வன்மையைப்பாடிப்பற தாசரதிதன்மையைப்பாடிப்பற.
308 என் வில் வலி கண்டு * போ என்று எதிர்வந்தான்
தன் * வில்லினோடும் * தவத்தை எதிர்வாங்கி **
முன் வில் வலித்து * முதுபெண் உயிருண்டான்
தன் * வில்லின் வன்மையைப் பாடிப் பற * தாசரதி தன்மையைப் பாடிப் பற (2)
308 ĕṉ vil vali kaṇṭu * po ĕṉṟu ĕtirvantāṉ
taṉ * villiṉoṭum * tavattai ĕtirvāṅki **
muṉ vil valittu * mutupĕṇ uyiruṇṭāṉ
taṉ * villiṉ vaṉmaiyaip pāṭip paṟa * tācarati taṉmaiyaip pāṭip paṟa (2)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

308. When ParasuRāman challenged Lord Rāma saying "See the power of my bow and leave!", Rāma broke his bow and penance. Prior to this He bent his bow and took the life of Thadagai. O, undi, fly and sing the might of His bow! Sing and praise the strength of the son of Dasharatha, fly and sing the power of his bow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் வில் வலி என்னுடைய வில்லின் வலிமையை; கண்டு போ என்று பார்த்துவிட்டுப் போ என்று; எதிர் வந்தான் தன் எதிர்த்து வந்த பரசுராமனுடைய; வில்லினோடும் வில்லையும்; தவத்தை தவ பலத்தையும்; எதிர் வாங்கி அவன் கண்முன்னே அழித்து; முன் அதற்கு முற்காலத்திலேயே; வில் வலித்து வில்லை வளைத்து; முதுபெண் தன் தாடகி என்னும் ராக்ஷசியின்; உயிருண்டான் உயிரை முடித்த ராமனின்; வில்லின் வில்லினுடைய; வன்மையைப் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!; தாசரதி தசரத புத்திரன் ராமபிரானின்; தன்மையை பெருமையைப்; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
ĕtir vantāṉ taṉ when Parasurama told Rama to; ĕṉ vil vali see the power of His bow; kaṇṭu po ĕṉṟu and leave; ĕtir vāṅki in front of his eyes, Rama; villiṉoṭum destroyed His bow; tavattai and the penance; muṉ prior to this; uyiruṇṭāṉ Rama; vil valittu bent His bow; mutupĕṇ taṉ and took the life of Thadagai; pāṭip paṟa! sing and praise; vaṉmaiyaip the greatness of; villiṉ Rama's bow; pāṭip paṟa! sing and praise !; taṉmaiyai the greatness of; tācarati the son of Dasharatha

PAT 3.9.3

309 உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு *
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து *
செருக்குற்றான் வீரம்சிதைய * தலையைச்
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற.
309 உருப்பிணி நங்கையைத் * தேர் ஏற்றிக் கொண்டு *
விருப்புற்று அங்கு ஏக * விரைந்து எதிர் வந்து **
செருக்கு உற்றான் * வீரம் சிதைய * தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற * தேவகி சிங்கத்தைப் பாடிப் பற (3)
309 uruppiṇi naṅkaiyait * ter eṟṟik kŏṇṭu *
viruppuṟṟu aṅku eka * viraintu ĕtir vantu **
cĕrukku uṟṟāṉ * vīram citaiya * talaiyaic
ciraittiṭṭāṉ vaṉmaiyaip pāṭip paṟa * tevaki ciṅkattaip pāṭip paṟa (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

309. Rukmani climbed Kannan's chariot willingly. When Rukman, her proud brother opposed him, Kannan shot arrows and cut off his head. O undi, fly and sing his praise, praise the lion-like son of Devaki and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உருப்பிணி ருக்மிணி; நங்கையை பிராட்டியை; தேர் ஏற்றிக் கொண்டு தேரில் ஏற்றிக் கொண்டு; விருப்புற்று விருப்பத்துடன்; அங்கு ஏக போகும் போதே; விரைந்து எதிர் வந்து வேகமாக எதிரே வந்த; செருக்கு உற்றான் கர்வமுடைய ருக்மனுடைய; வீரம் சிதைய வீரம் அழியும்படி; தலையை அவன் தலையை அம்பாலே; சிரைத்திட்டான் வெட்டியவனுடைய; வன்மையை பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!; தேவகி சிங்கத்தை தேவகியின் சிங்கம் போன்ற மைந்தன் புகழை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
uruppiṇi when Rukimini; naṅkaiyai devi; viruppuṟṟu eagery got onto; ter eṟṟik kŏṇṭu the chariot; aṅku eka and going with Kannan; cĕrukku uṟṟāṉ the proud rukman; viraintu ĕtir vantu came in the front and opposed; pāṭip paṟa! sing and praise !; vaṉmaiyai the greatness of Kannan; ciraittiṭṭāṉ who cut off; talaiyai the head of Rukman with arrows; vīram citaiya and desroyed his pride; pāṭip paṟa! sing and praise !; tevaki ciṅkattai the greatness of devaki's lion-like son

PAT 3.9.4

310 மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிட *
ஈற்றுத்தாய்பின்தொடர்ந்து எம்பிரான்! என்றுஅழ *
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன *
சீற்றமிலாதானைப்பாடிப்பற சீதைமணாளனைப்பாடிப்பற.
310 மாற்றுத்தாய் சென்று * வனம்போகே என்றிட *
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து * எம்பிரான் என்று அழ **
கூற்றுத் தாய் சொல்லக் * கொடிய வனம் போன *
சீற்றம் இலாதானைப் பாடிப் பற * சீதை மணாளனைப் பாடிப் பற (4)
310 māṟṟuttāy cĕṉṟu * vaṉampoke ĕṉṟiṭa *
īṟṟuttāy piṉtŏṭarntu * ĕmpirāṉ ĕṉṟu azha **
kūṟṟut tāy cŏllak * kŏṭiya vaṉam poṉa *
cīṟṟam ilātāṉaip pāṭip paṟa * cītai maṇāl̤aṉaip pāṭip paṟa (4)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

310. Mother-like Sumithra grieved, "Oh are you going to forest?, the one who begot him cried "Oh my dear son" Wicked mother Kaikeyi said "Go to forest' and Rāma went without anger. O, undi, fly singing his strength! Sing the glories of Sita's beloved!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாற்றுத் தாய் சென்று தாய் போன்ற சுமித்திரை; வனம்போகே காட்டுக்கே போகிறாயே; என்றிட என்று வருந்த; ஈற்றுத் தாய் பெற்ற தாயான கௌசலை; பின் தொடர்ந்து பின்னே சென்று; எம்பிரான்! என் கண்மணியே!; என்று அழ என்று அழ; கூற்றுத் தாய் சொல்ல கைகேயியின் சொல்படி; கொடிய வனம் போன கொடிய காடு சென்ற; சீற்றம் இலாதானை கோபம் இல்லாத இராமபிரானின்; பாடிப் பற! பெருமையை பாடுங்கள் பாராட்டுங்கள்!; சீதை சீதையின்; மணாளனை மணாளனின் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
māṟṟut tāy cĕṉṟu mother-like sumithra; ĕṉṟiṭa felt sad; vaṉampoke as they were going to forest; īṟṟut tāy and mother kausalya; piṉ tŏṭarntu went behind; ĕmpirāṉ! said oh my dear son and; ĕṉṟu aḻa cried; cīṟṟam ilātāṉai without any anger Rama went to; kŏṭiya vaṉam poṉa deep forest; kūṟṟut tāy cŏlla as per Kaikaeyi's wishes; pāṭip paṟa! sing His greatness !; pāṭip paṟa! sing and praise !; maṇāl̤aṉai the beloved; cītai of Sita

PAT 3.9.5

311 பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து *
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு *
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த *
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற.
311 பஞ்சவர் தூதனாய்ப் * பாரதம் கைசெய்து *
நஞ்சு உமிழ் நாகம் * கிடந்த நற்பொய்கை புக்கு **
அஞ்சப் பணத்தின்மேல் * பாய்ந்திட்டு அருள்செய்த *
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற * அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற (5)
311 pañcavar tūtaṉāyp * pāratam kaicĕytu *
nañcu umizh nākam * kiṭanta naṟpŏykai pukku **
añcap paṇattiṉmel * pāyntiṭṭu arul̤cĕyta *
añcaṉa vaṇṇaṉaip pāṭip paṟa * acotaitaṉ ciṅkattaip pāṭip paṟa (5)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

311. O undi, fly and sing the praise of the dark kohl-colored god who went as a messenger for the Pāndavas and helped them fight the Bhārathā war. He jumped into the pond and danced on the heads of the snake Kālingan and gave it His grace. Sing the praise of the lion-like son of Yashodā and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பஞ்சவர் பஞ்சபாண்டவர்களுக்கு; தூதனாய் தூதனாகச் சென்று; பாரதம் மஹாபாரத யுத்தத்தில்; கை செய்து கைகொடுத்து உதவியவனும்; நஞ்சு உமிழ் விஷம் உமிழும்; நாகம் கிடந்த காளீய நாகம் இருந்த; நற் பொய்கை புக்கு குளத்தில் போய் குதித்து; அஞ்ச அவன் அஞ்சும்படி; பணத்தின் மேல் பாம்பின் படத்தின் மேல்; பாய்ந்திட்டு பாய்ந்து பிறகு; அருள் அவனைக் கொல்லாமல்; செய்த அருள் செய்த; அஞ்சன வண்ணனை மை நிற வண்ணனின்; பாடிப் பற! பெருமையை பாடுங்கள்!; அசோதை தன் யசோதையின்; சிங்கத்தை கண்மணியின்; பாடிப் பற! பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
tūtaṉāy Kannan went as a messenger; pañcavar for pandavas; kai cĕytu and stood with them; pāratam in the mahabharatha war; naṟ pŏykai pukku He jumped into the pond; nākam kiṭanta where resided the Kalinga snake; nañcu umiḻ that was venomous; añca He scared the snake; pāyntiṭṭu by jumping; paṇattiṉ mel on its hood; arul̤ but did not kill; cĕyta rather blessed it; pāṭip paṟa! sing and praise !; añcaṉa vaṇṇaṉai the dark kohl-colored god; pāṭip paṟa! sing and praise !; pāṭip paṟa! the greatness; acotai taṉ of mother yashoda's; ciṅkattai son

PAT 3.9.6

312 முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு * உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த *
படியில்குணத்துப் பரதநம்பிக்கு * அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.
312 முடி ஒன்றி * மூவுலகங்களும் ஆண்டு * உன்
அடியேற்கு அருள் என்று * அவன்பின் தொடர்ந்த **
படியில் குணத்துப் * பரத நம்பிக்கு * அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற * அயோத்தியர் கோமானைப் பாடிப் பற (6)
312 muṭi ŏṉṟi * mūvulakaṅkal̤um āṇṭu * uṉ
aṭiyeṟku arul̤ ĕṉṟu * avaṉpiṉ tŏṭarnta **
paṭiyil kuṇattup * parata nampikku * aṉṟu
aṭinilai īntāṉaip pāṭip paṟa * ayottiyar komāṉaip pāṭip paṟa (6)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

312. O undi, fly and sing the praise of Rāma who gave his padukas when his faultless brother Bharatha followed him and asked him to come back to rule all the three worlds and be the king and show him his grace. Sing the praise of the king of Ayodhya and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முடி ஒன்றி முடி சூடிக்கொண்டு; மூவுலகங்களும் பூமி சுவர்க்கம் பாதாளம் மூன்றையும்; ஆண்டு ஆண்டு கொண்டு; உன் அடியேற்கு உனது தாசனான எனக்கு; அருள் என்று அருளவேண்டும் என்று துதித்து; அவன் பின் தொடர்ந்த ஸ்ரீராமனின் பின்னே சென்ற; படியில் குணத்து ஒப்பற்ற குணமுடைய; பரத நம்பிக்கு பரதனுக்கு; அன்று அடி நிலை அன்று பாதுகைகளை; ஈந்தானை அளித்தருளிய ராமனின்; பாடிப் பற! பெருமையைப் பாடிப் பற!; அயோத்தியர் அயோத்தியின்; கோமானை கோமகனின் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
parata nampikku bharatha; paṭiyil kuṇattu with incomparable qualities; avaṉ piṉ tŏṭarnta went to Rama; uṉ aṭiyeṟku as a servent; arul̤ ĕṉṟu and asked for His blessings; muṭi ŏṉṟi pleaded Him to take the reign; āṇṭu and rule; mūvulakaṅkal̤um all the three worlds; īntāṉai Rama blessed him and gave; aṉṟu aṭi nilai His padukas; pāṭip paṟa! sing and praise His glory!; pāṭip paṟa! sing and praise !; komāṉai the greatness of the son of; ayottiyar ayodhya

PAT 3.9.7

313 காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு * அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து *
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன் *
தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற.
313 காளியன் பொய்கை * கலங்கப் பாய்ந்திட்டு * அவன்
நீள்முடி ஐந்திலும் * நின்று நடம்செய்து **
மீள அவனுக்கு * அருள்செய்த வித்தகன் *
தோள் வலி வீரமே பாடிப் பற * தூ மணிவண்ணனைப் பாடிப் பற (7)
313 kāl̤iyaṉ pŏykai * kalaṅkap pāyntiṭṭu * avaṉ
nīl̤muṭi aintilum * niṉṟu naṭamcĕytu **
mīl̤a avaṉukku * arul̤cĕyta vittakaṉ *
tol̤-vali vīrame pāṭip paṟa * tū maṇivaṇṇaṉaip pāṭip paṟa (7)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

313. O undi, fly and sing Kannan's praise who jumped into the pond and danced on Kālingā's five heads and later blessed him. Sing the praise of His heroic arms! Praise the pure sapphire-colored lord and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோள் வலி வீரமே பாடிப் பற!; காளியன் காளியன் என்ற பாம்பு; பொய்கை இருக்கும் பொய்கை; கலங்கப் பாய்ந்திட்டு கலங்கும்படி அதில் குதித்து; அவன் நீள் முடி அந்த பாம்பின் நீண்ட தலையின்; ஐந்திலும் ஐந்து படங்களிலும்; நின்று நடம் செய்து மாறி மாறி ஆடி கூத்தாடி; மீள அவனுக்கு அவன் ஓய்ந்து சரணம் அடைந்தபோது; அருள் செய்த கொல்லாமல் விடுவித்து அருள் செய்த; வித்தகன் வித்தகன் கண்ணனின்; தோள் வலி வீரமே புஜ பலத்தையும் வீரத்தையும்; பாடிப் பற! பாடிப் பற!; தூமணி தூமணி; வண்ணனை வண்ணனின் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
tol̤ sing and fly, o valorous one!; vittakaṉ the magical Kannan; kalaṅkap pāyntiṭṭu jumps wildly into; pŏykai the pond where dwells; kāl̤iyaṉ the snake named Kaaliyan; niṉṟu naṭam cĕytu and dance, perform, and leap; aintilum on the five smaller heads of; avaṉ nīl̤ muṭi snake’s long head; mīl̤a avaṉukku and when the snake surrenders; arul̤ cĕyta He spared and blessed him; pāṭip paṟa! sing of; tol̤ vali vīrame His strength and bravery!; pāṭip paṟa! sing and praise !; vaṇṇaṉai the greatness of; tūmaṇi thoomani vannan

PAT 3.9.8

314 தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து * தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி * நுடங்கிடைச்
சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு * அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற.
314 தார்க்கு இளந்தம்பிக்கு * அரசு ஈந்து * தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி * நுடங்கு இடைச்
சூர்ப்பணகாவைச் * செவியொடு மூக்கு * அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற * அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற (8)
314 tārkku il̤antampikku * aracu īntu * taṇṭakam
nūṟṟaval̤ cŏṟkŏṇṭu poki * nuṭaṅku- iṭaic
cūrppaṇakāvaic * cĕviyŏṭu mūkku * aval̤
ārkka arintāṉaip pāṭip paṟa * ayottikku aracaṉaip pāṭip paṟa (8)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

314. O undi, fly and sing the praise of Rāma who gave the kingdom to his younger brother and went to the forest obeying his step-mother Kaikeyi's orders and in the forest he cut off the ears and nose of thin-waisted Surpanakha as she screamed. Sing and praise the king of Ayodhya and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தார்க்கு மாலை அணிந்து அரசாள விதிப்படி; இளம் தம்பிக்கு தகாத தம்பி பரதனுக்கு; அரசு ஈந்து அரசைக்கொடுத்து; தண்டகம் தண்டகாரண்ய காட்டுக்கு; நூற்றவள் சொல் கைகேயியின் சொல்லை ஏற்று; கொண்டு போகி எழுந்தருளிப் போய்; நுடங்கு இடை துவண்ட இடை யுடைய; சூர்ப்பணகாவை சூர்ப்பணகையினுடைய; செவியொடு மூக்கு காதையும் மூக்கையும்; அவள் ஆர்க்க அவள் கதறும்படி; அரிந்தானை அறுத்த ராமபிரானின்; பாடிப் பற! பெருமையைப் பாடிப் பற!; அயோத்திக்கு அயோத்திக்கு; அரசனை அரசனான இராமபிரானின் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
nūṟṟaval̤ cŏl obeying kaikeyi's orders; taṇṭakam Rama went to the forest; aracu īntu and gave away the kingdom; tārkku to His; il̤am tampikku younger brother; kŏṇṭu poki He went on; arintāṉai and cut off; cĕviyŏṭu mūkku the nose and ears; nuṭaṅku iṭai of narrow waisted; cūrppaṇakāvai Surpanaka; aval̤ ārkka as she screamed; pāṭip paṟa! sing and praise !; pāṭip paṟa! sing and praise !; aracaṉai the greatness of Rama, the prince of; ayottikku Ayodhya

PAT 3.9.9

315 மாயச்சகடமுதைத்து மருதிறுத்து *
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து * அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற *
ஆயர்களேற்றினைப்பாடிப்பற ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற.
315 மாயச் சகடம் உதைத்து * மருது இறுத்து *
ஆயர்களோடு போய் * ஆநிரை காத்து ** அணி
வேயின் குழல் ஊதி * வித்தகனாய் நின்ற *
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற * ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற (9)
315 māyac cakaṭam utaittu * marutu iṟuttu *
āyarkal̤oṭu poy * ānirai kāttu ** aṇi
veyiṉ kuzhal ūti * vittakaṉāy niṉṟa *
āyarkal̤ eṟṟiṉaip pāṭip paṟa * ānirai meyttāṉaip pāṭip paṟa (9)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

315. O undi, fly and sing His praise ! He, Krishna kicked Sakatāsuran who came disguised as a cart and killed the asuras who came as two marudam trees. The potent Lord goes with the cowherds, protecting the cattle and playing on the flute wonderfully. Fly and sing the praise of the bull-like son of the cowherds, Fly and sing His praise who grazed the cows.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாயச்சகடம் வஞ்சனையுடன் வந்த சகடாசுரனை; உதைத்து முறியும்படி உதைத்தும்; மருது இரண்டு மருத மரங்களாக வந்த அசுரர்களை; இறுத்து முறித்தும்; ஆயர்களோடு போய் ஆயர் பிள்ளைகளோடு போய்; ஆநிரை காத்து பசுக்களைக் காப்பாற்றி; அணி வேயின் குழலூதி அழகிய புல்லாங்குழல் ஊதி; வித்தகனாய் நின்ற சாமர்த்தியசாலியாய் நின்ற; ஆயர்கள் ஏற்றினை ஆயர்குல தலைவன் கண்ணனின்; பாடிப் பற! பெருமையைப் பாடிப் பாராட்டுங்கள்!; ஆநிரை ஆநிரை; மேய்த்தானை மேய்த்தவனின்; பாடிப் பற! பெருமையை பாடிப் பாராட்டுங்கள்!
māyaccakaṭam shakatasura, who came with deceit; utaittu was struck down by the Lord with a blow; marutu and the demons who came as two Marudha trees; iṟuttu were also destroyed; āyarkal̤oṭu poy He goes along with the cowherd children; ānirai kāttu and save the cows; vittakaṉāy niṉṟa He stands as magnificent figure and; aṇi veyiṉ kuḻalūti plays the beautiful flute; āyarkal̤ eṟṟiṉai the leader of the cowherd clan; pāṭip paṟa! sing and praise !; meyttāṉai the greatness of the One who tended; ānirai the cows

PAT 3.9.10

316 காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு *
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் *
நேராஅவன்தம்பிக்கே நீளரசீந்த *
ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற.
316 காரார் கடலை அடைத்திட்டு * இலங்கை புக்கு *
ஓராதான் பொன்முடி * ஒன்பதோடு ஒன்றையும் **
நேரா அவன்தம்பிக்கே * நீள் அரசு ஈந்த *
ஆராவமுதனைப் பாடிப் பற * அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற (10)
316 kārār kaṭalai aṭaittiṭṭu * ilaṅkai pukku *
orātāṉ pŏṉmuṭi * ŏṉpatoṭu ŏṉṟaiyum **
nerā avaṉtampikke * nīl̤ aracu īnta *
ārāvamutaṉaip pāṭip paṟa * ayottiyar ventaṉaip pāṭip paṟa (10)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

316. O undi, fly and sing His praise who built a bride, crossed the ocean, entered Lankā and killed his enemy Rāvana the ten-headed king, and gave his kingdom to Vibhishanā, Rāvana's good brother. O undi, fly and sing the praise of the nectar-like sweet god, Fly and sing the praise of the king of Ayodhya.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காரார் கடலை கருமை மிக்க பெரிய கடலை; அடைத்திட்டு மலைகளினால் அடைத்து விட்டு; இலங்கை புக்கு இலங்கையில் நுழைந்து; ஓராதான் பொன்முடி இராமபிரானின் வீரத்தை மதிக்காத; ஒன்பதோடு ஒன்றையும் ராவணனின்; நேரா பத்துத் தலைகளையும் அறுத்து; அவன் தம்பிக்கே அவனது தம்பி விபீஷணனுக்கே; நீள் நெடுங்காலம்; அரசு ஈந்த ஆண்டிட ராஜ்யத்தை கொடுத்த; ஆரா அமுதனை ஆரா அமுதனான இராமபிரானை; பாடிப் பற! கொண்டாடிப் பாடிப் பற!; அயோத்தியர் அயோத்தி; வேந்தனை மன்னனின் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
nerā Rama cut off the ten heads of; ŏṉpatoṭu ŏṉṟaiyum ravana; orātāṉ pŏṉmuṭi who did not respect the valor of Rama; ilaṅkai pukku who enterted Lanka; aṭaittiṭṭu after blocking the; kārār kaṭalai vast dark ocean; aracu īnta He gave the kingdom to rule for a; nīl̤ long time; avaṉ tampikke to Ravana's brother vibishana; pāṭip paṟa! celebrate and sing; ārā amutaṉai about the never ending nectar; pāṭip paṟa! sing and praise!; ventaṉai the greatness of the king of; ayottiyar ayodhya

PAT 3.9.11

317 நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று *
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல் *
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல் *
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)
317 ## நந்தன் மதலையைக் * காகுத்தனை நவின்று *
உந்தி பறந்த * ஒளியிழை யார்கள்சொல் **
செந்தமிழ்த் தென்புதுவை * விட்டு சித்தன்சொல் *
ஐந்தினோடு ஐந்தும்வல் லார்க்கு * அல்லல் இல்லையே (11)
317 ## nantaṉ matalaiyaik * kākuttaṉai naviṉṟu *
unti paṟanta * ŏl̤iyizhai yārkal̤cŏl **
cĕntamizht tĕṉputuvai * viṭṭu cittaṉcŏl *
aintiṉoṭu aintumval lārkku * allal illaiye (11)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

317. Vishnuchithan, the chief of southern Puduvai where ornamented Tamil flourishes, composed ten pāsurams describing how the women decorated with shining ornaments asked the undi to praise and sing the heroic deeds of Krishna, the son of Nandan and Rāma (kahustan) Those who learn and sing these ten pāsurams will have no trouble in life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நந்தன் நந்தகோபன் மகன்; மதலையை கண்ணபிரானையும்; காகுத்தனை நவின்று இராமபிரானையும் கூறி; ஒளி ஒளிவீசும்; இழையார்கள் ஆபரணமணிந்த பெண்களின்; உந்தி பறந்த மாறி மாறி புகழ்ந்து; சொல் பேசிய பேச்சை; செந்தமிழ் செம்மையான தமிழ் மொழியாலே; தென் புதுவை அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்த் தலைவரான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சொல் அருளிச்செய்த; ஐந்தினோடு ஐந்தும் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்க்கு ஓத வல்லார்க்கு; அல்லல் இல்லையே துன்பம் இல்லையே
viṭṭucittaṉ Periyalwar; tĕṉ putuvai the great leader of Srivilliputhur; cŏl composed; aintiṉoṭu aintum these ten pasurams that captured; cĕntamiḻ in beautiful Tamil language; unti paṟanta the praises and; cŏl comments by; iḻaiyārkal̤ women wearing ornaments that; ŏl̤i sparkle about; matalaiyai Kannan; nantaṉ the Son of Nandagopar; kākuttaṉai naviṉṟu and Rama; vallārkku those who recite these pasurams; allal illaiye there is no sorrow