PAT 3.9.11

அல்லல் இல்லை

317 நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று *
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல் *
செந்தமிழ்த்தென்புதுவை விட்டுசித்தன்சொல் *
ஐந்தினோடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே. (2)
317 ## nantaṉ matalaiyaik * kākuttaṉai naviṉṟu *
unti paṟanta * ŏl̤iyizhai yārkal̤cŏl **
cĕntamizht tĕṉputuvai * viṭṭu cittaṉcŏl *
aintiṉoṭu aintumval lārkku * allal illaiye (11)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

317. Vishnuchithan, the chief of southern Puduvai where ornamented Tamil flourishes, composed ten pāsurams describing how the women decorated with shining ornaments asked the undi to praise and sing the heroic deeds of Krishna, the son of Nandan and Rāma (kahustan) Those who learn and sing these ten pāsurams will have no trouble in life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நந்தன் நந்தகோபன் மகன்; மதலையை கண்ணபிரானையும்; காகுத்தனை நவின்று இராமபிரானையும் கூறி; ஒளி ஒளிவீசும்; இழையார்கள் ஆபரணமணிந்த பெண்களின்; உந்தி பறந்த மாறி மாறி புகழ்ந்து; சொல் பேசிய பேச்சை; செந்தமிழ் செம்மையான தமிழ் மொழியாலே; தென் புதுவை அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்த் தலைவரான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சொல் அருளிச்செய்த; ஐந்தினோடு ஐந்தும் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்க்கு ஓத வல்லார்க்கு; அல்லல் இல்லையே துன்பம் இல்லையே
viṭṭucittaṉ Periyalwar; tĕṉ putuvai the great leader of Srivilliputhur; cŏl composed; aintiṉoṭu aintum these ten pasurams that captured; cĕntamiḻ in beautiful Tamil language; unti paṟanta the praises and; cŏl comments by; iḻaiyārkal̤ women wearing ornaments that; ŏl̤i sparkle about; matalaiyai Kannan; nantaṉ the Son of Nandagopar; kākuttaṉai naviṉṟu and Rama; vallārkku those who recite these pasurams; allal illaiye there is no sorrow