என் வில் வலி கண்டு போ என்று எதிர் வந்தான் தன் வில்லினோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண் உயிர் உண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற –3-9-2- –
பதவுரை
என் வில் வலி கண்டு போ என்று–‘என்னுடைய வில்லின் வலியைக் கண்டு போ’ என்று சொல்லிக் கொண்டு எதிர் வந்தான் தன்–எதிர்த்து வந்த பரசு ராமனுடைய வில்லினோடு–வில்லையும் தவத்தையும்–தபஸ்ஸையும்