PAT 3.9.7

காளியனுக்கு அருளிய தூமணிவண்ணன்

313 காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு * அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து *
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன் *
தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற.
313 kāl̤iyaṉ pŏykai * kalaṅkap pāyntiṭṭu * avaṉ
nīl̤muṭi aintilum * niṉṟu naṭamcĕytu **
mīl̤a avaṉukku * arul̤cĕyta vittakaṉ *
tol̤-vali vīrame pāṭip paṟa * tū maṇivaṇṇaṉaip pāṭip paṟa (7)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

313. O undi, fly and sing Kannan's praise who jumped into the pond and danced on Kālingā's five heads and later blessed him. Sing the praise of His heroic arms! Praise the pure sapphire-colored lord and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தோள் வலி வீரமே பாடிப் பற!; காளியன் காளியன் என்ற பாம்பு; பொய்கை இருக்கும் பொய்கை; கலங்கப் பாய்ந்திட்டு கலங்கும்படி அதில் குதித்து; அவன் நீள் முடி அந்த பாம்பின் நீண்ட தலையின்; ஐந்திலும் ஐந்து படங்களிலும்; நின்று நடம் செய்து மாறி மாறி ஆடி கூத்தாடி; மீள அவனுக்கு அவன் ஓய்ந்து சரணம் அடைந்தபோது; அருள் செய்த கொல்லாமல் விடுவித்து அருள் செய்த; வித்தகன் வித்தகன் கண்ணனின்; தோள் வலி வீரமே புஜ பலத்தையும் வீரத்தையும்; பாடிப் பற! பாடிப் பற!; தூமணி தூமணி; வண்ணனை வண்ணனின் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
tol̤ sing and fly, o valorous one!; vittakaṉ the magical Kannan; kalaṅkap pāyntiṭṭu jumps wildly into; pŏykai the pond where dwells; kāl̤iyaṉ the snake named Kaaliyan; niṉṟu naṭam cĕytu and dance, perform, and leap; aintilum on the five smaller heads of; avaṉ nīl̤ muṭi snake’s long head; mīl̤a avaṉukku and when the snake surrenders; arul̤ cĕyta He spared and blessed him; pāṭip paṟa! sing of; tol̤ vali vīrame His strength and bravery!; pāṭip paṟa! sing and praise !; vaṇṇaṉai the greatness of; tūmaṇi thoomani vannan