PAT 3.9.3

ருக்மணியை அழைத்துவந்த தேவகி சிங்கம்

309 உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டு *
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து *
செருக்குற்றான் வீரம்சிதைய * தலையைச்
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற.
309 uruppiṇi naṅkaiyait * ter eṟṟik kŏṇṭu *
viruppuṟṟu aṅku eka * viraintu ĕtir vantu **
cĕrukku uṟṟāṉ * vīram citaiya * talaiyaic
ciraittiṭṭāṉ vaṉmaiyaip pāṭip paṟa * tevaki ciṅkattaip pāṭip paṟa (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

309. Rukmani climbed Kannan's chariot willingly. When Rukman, her proud brother opposed him, Kannan shot arrows and cut off his head. O undi, fly and sing his praise, praise the lion-like son of Devaki and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உருப்பிணி ருக்மிணி; நங்கையை பிராட்டியை; தேர் ஏற்றிக் கொண்டு தேரில் ஏற்றிக் கொண்டு; விருப்புற்று விருப்பத்துடன்; அங்கு ஏக போகும் போதே; விரைந்து எதிர் வந்து வேகமாக எதிரே வந்த; செருக்கு உற்றான் கர்வமுடைய ருக்மனுடைய; வீரம் சிதைய வீரம் அழியும்படி; தலையை அவன் தலையை அம்பாலே; சிரைத்திட்டான் வெட்டியவனுடைய; வன்மையை பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!; தேவகி சிங்கத்தை தேவகியின் சிங்கம் போன்ற மைந்தன் புகழை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
uruppiṇi when Rukimini; naṅkaiyai devi; viruppuṟṟu eagery got onto; ter eṟṟik kŏṇṭu the chariot; aṅku eka and going with Kannan; cĕrukku uṟṟāṉ the proud rukman; viraintu ĕtir vantu came in the front and opposed; pāṭip paṟa! sing and praise !; vaṉmaiyai the greatness of Kannan; ciraittiṭṭāṉ who cut off; talaiyai the head of Rukman with arrows; vīram citaiya and desroyed his pride; pāṭip paṟa! sing and praise !; tevaki ciṅkattai the greatness of devaki's lion-like son