PAT 3.9.6

பரதனுக்கு அடிநிலையளித்த இராமன்

312 முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு * உன்
அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த *
படியில்குணத்துப் பரதநம்பிக்கு * அன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.
312 muṭi ŏṉṟi * mūvulakaṅkal̤um āṇṭu * uṉ
aṭiyeṟku arul̤ ĕṉṟu * avaṉpiṉ tŏṭarnta **
paṭiyil kuṇattup * parata nampikku * aṉṟu
aṭinilai īntāṉaip pāṭip paṟa * ayottiyar komāṉaip pāṭip paṟa (6)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Divya Desam

Simple Translation

312. O undi, fly and sing the praise of Rāma who gave his padukas when his faultless brother Bharatha followed him and asked him to come back to rule all the three worlds and be the king and show him his grace. Sing the praise of the king of Ayodhya and fly.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முடி ஒன்றி முடி சூடிக்கொண்டு; மூவுலகங்களும் பூமி சுவர்க்கம் பாதாளம் மூன்றையும்; ஆண்டு ஆண்டு கொண்டு; உன் அடியேற்கு உனது தாசனான எனக்கு; அருள் என்று அருளவேண்டும் என்று துதித்து; அவன் பின் தொடர்ந்த ஸ்ரீராமனின் பின்னே சென்ற; படியில் குணத்து ஒப்பற்ற குணமுடைய; பரத நம்பிக்கு பரதனுக்கு; அன்று அடி நிலை அன்று பாதுகைகளை; ஈந்தானை அளித்தருளிய ராமனின்; பாடிப் பற! பெருமையைப் பாடிப் பற!; அயோத்தியர் அயோத்தியின்; கோமானை கோமகனின் பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!
parata nampikku bharatha; paṭiyil kuṇattu with incomparable qualities; avaṉ piṉ tŏṭarnta went to Rama; uṉ aṭiyeṟku as a servent; arul̤ ĕṉṟu and asked for His blessings; muṭi ŏṉṟi pleaded Him to take the reign; āṇṭu and rule; mūvulakaṅkal̤um all the three worlds; īntāṉai Rama blessed him and gave; aṉṟu aṭi nilai His padukas; pāṭip paṟa! sing and praise His glory!; pāṭip paṟa! sing and praise !; komāṉai the greatness of the son of; ayottiyar ayodhya