PAT 3.9.5

பஞ்சவர் தூதன்

311 பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து *
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு *
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட் டருள்செய்த *
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற.
311
paNYjavar thoodhanāy * bāradham kaiseydhu *
naNYjumizh n^āham * kidandha nalpoyhai pukku *
aNYja paNaththin mEl * pāyndhittu aruL seydha *
aNYjana vaNNanai pādippaRa *
asOdhai than_siNGgaththai pādippaRa. * 5.

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

311. O undi, fly and sing the praise of the dark kohl-colored god who went as a messenger for the Pāndavas and helped them fight the Bhārathā war. He jumped into the pond and danced on the heads of the snake Kālingan and gave it His grace. Sing the praise of the lion-like son of Yashodā and fly.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பஞ்சவர் பஞ்சபாண்டவர்களுக்கு; தூதனாய் தூதனாகச் சென்று; பாரதம் மஹாபாரத யுத்தத்தில்; கை செய்து கைகொடுத்து உதவியவனும்; நஞ்சு உமிழ் விஷம் உமிழும்; நாகம் கிடந்த காளீய நாகம் இருந்த; நற் பொய்கை புக்கு குளத்தில் போய் குதித்து; அஞ்ச அவன் அஞ்சும்படி; பணத்தின் மேல் பாம்பின் படத்தின் மேல்; பாய்ந்திட்டு பாய்ந்து பிறகு; அருள் அவனைக் கொல்லாமல்; செய்த அருள் செய்த; அஞ்சன வண்ணனை மை நிற வண்ணனின்; பாடிப் பற! பெருமையை பாடுங்கள்!; அசோதை தன் யசோதையின்; சிங்கத்தை கண்மணியின்; பாடிப் பற! பெருமையை; பாடிப் பற! பாடுங்கள் பாராட்டுங்கள்!