307. When Indrani refused to part with the Parijatham tree, He
(Krishna) sent Garudā to uproot the tree in Indra's presence
and planted it in Satyabhama's garden.
Praise and sing the strength of my beloved and fly,
praise and sing the strength of my dear one and fly.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்நாதன் — என் ஸ்வாமி கண்ணபிரானுடைய; தேவிக்கு அன்று — தேவியான சத்யபாமைக்கு அன்று; இன்பப்பூ — இனிமையான கற்பகப் பூவை; ஈயாதாள் தன் — தராதவளான இந்திராணியின்; நாதன் — கணவன் இந்திரன்; காணவே — பார்த்திருக்கும் போதே; தண் பூ — குளிர்ந்து பூத்திருக்கிற; மரத்தினை — கற்பக விருக்ஷத்தை; வன்நாத — வலிமையுடைய ஸாமவேத ஸ்வரூபியான; புள்ளால் — கருடனால்; வலியப் பறித்து — மிக்க பலத்துடன் பிடுங்கி வரச்செய்து; இட்ட — சத்யபாமாவின் தோட்டத்தில் நட்ட; என் நாதன் — என் தலைவனான கண்ணபிரானின்; வன்மையை — வல்லமையை; பாடிப் பற! — பாடுங்கள் பாராட்டுங்கள்!; எம்பிரான் — என் பிரானின்; வன்மையை — வல்லமையை; பாடிப் பற! — பாடுங்கள் பாராட்டுங்கள்!