Chapter 7

The mother worries about her young daughter - (ஐய புழுதி)

நற்றாய் இரங்கல்
The mother worries about her young daughter - (ஐய புழுதி)
Just as a mother speaks of the suffering her daughter endures due to her love for Krishna, the āzhvār, embodying that mother, narrates and experiences these feelings. This hymn conveys the girl's condition, the words spoken about her by the townsfolk, and her desire to have her wedding in her own home, even though it is a small one (verse 10).
கண்ணன்மீது மையல் கொண்டு தன் மகள் படும்பாட்டைத் தாய் கூறுவதுபோல், ஆழ்வாரும் அப்பெண்ணின் தாயாகவே இருந்துகொண்டு கூறி அனுபவிக்கிறார். பெண்ணின் நிலை, அவளைப் பற்றி ஊரார் கூறும் சொல் ஆகியவற்றையும், தன் வீடு சிறிய வீடாக இருந்தாலும், பெண்ணின் திருமணத்தை வீட்டிலேயே செய்யவேண்டும் என்ற அவளது கருத்தையும் (பாடல் 10) இத்திருமொழி அறிவிக்கிறது.
Verses: 286 to 296
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 3.7.1

286 ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் *
செய்யநூலின்சிற்றாடை செப்பனுடுக்கவும்வல்லளல்லள் *
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் *
பையரவணைப்பள்ளியானொடு கைவைத்துஇவள்வருமே. (2)
286 ## ஐய புழுதி உடம்பு அளைந்து * இவள் பேச்சும் அலந்தலையாய் *
செய்ய நூலின் சிற்றாடை * செப்பன் உடுக்கவும் வல்லள் அல்லள் **
கையினில் சிறுதூதை யோடு * இவள் முற்றில் பிரிந்தும் இலள் *
பை அரவணைப் பள்ளியானொடு * கைவைத்து இவள்வருமே (1)
286 ## aiya puzhuti uṭampu al̤aintu * ival̤ peccum alantalaiyāy *
cĕyya nūliṉ ciṟṟāṭai * cĕppaṉ uṭukkavum vallal̤ allal̤ **
kaiyiṉil ciṟutūtai yoṭu * ival̤ muṟṟil pirintum ilal̤ *
pai aravaṇaip pal̤l̤iyāṉŏṭu * kaivaittu ival̤varume (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

286. She plays on the sand and makes herself dirty. She prattles like a baby. She doesn’t know how to wear her lovely dress made with fine thread. She has never gone out of our front yard with a small play pot in her hands, Yet she comes home, holding the hands of the one who rests on the snake Adishesha,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஐயபுழுதி உடம்பு உடம்பெல்லாம் புழுதியாயிருக்க; அளைந்து இவள் மண்ணில் அளைந்து விளையாடிய இவள்; பேச்சும் அலந்தலையாய் புரியும்படியான பேச்சுமிலாதவளாய்; செய்ய நூலின் சிற்றாடை சிவந்த சிற்றாடையை; செப்பன் உடுக்கவும் சரியாக உடுத்திடவும்; வல்லளல்லள் தெரியாதவளாய்; கையினில் கையிலுள்ள; சிறுதூதையோடு சிறிய மர சொப்புகளை; இவள் முற்றில் சுளககையும் (முறம்) பிரிய; பிரிந்தும் இலள் மனமில்லாத இவள்; பை அரவணை படம் உடைய அரவு மீது சயனம்; பள்ளியானொடு செய்பவனோடு; கைவைத்து கைகோர்த்து; இவள் வருமே வருகிறாளே! இது என்னே!
al̤aintu ival̤ she plays on the sand and; aiyapuḻuti uṭampu makes herself dirty; peccum alantalaiyāy she prattles like a baby; vallal̤allal̤ She doesn’t know; cĕppaṉ uṭukkavum how to wear her; cĕyya nūliṉ ciṟṟāṭai lovely dress made with fine thread; pirintum ilal̤ she never likes to; ival̤ muṟṟil part with; ciṟutūtaiyoṭu small wooden toys; kaiyiṉil that is in her hands; ival̤ varume but here she comes; kaivaittu holding the hands of; pal̤l̤iyāṉoṭu the One; pai aravaṇai who rests on the snake Adishesha

PAT 3.7.2

287 வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில *
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி *
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி *
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
287 வாயில் பல்லும் எழுந்தில * மயிரும் முடி கூடிற்றில *
சாய்வு இலாத குறுந்தலைச் * சில பிள்ளைகளோடு இணங்கி **
தீ இணக்கு இணங்கு ஆடி வந்து * இவள் தன் அன்ன செம்மை சொல்லி *
மாயன் மா மணிவண்ணன் மேல் * இவள் மால் உறுகின்றாளே (2)
287 vāyil pallum ĕzhuntila * mayi rum muṭi kūṭiṟṟila *
cāyvu ilāta kuṟuntalaic * cila pil̤l̤aikal̤oṭu iṇaṅki **
tī iṇakku iṇaṅku āṭi vantu * ival̤ taṉ aṉṉa cĕmmai cŏlli *
māyaṉ mā maṇivaṇṇaṉ mel * ival̤ māl uṟukiṉṟāl̤e (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

287. Her teeth have not grown out yet, her hair is not yet thick enough to plait, and she plays with sparse-haired still innocent children. But now she has made friends with naughty girls and says that they are good children like her. She has fallen in love with Māyan, the beautiful sapphire-colored lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாயில் பல்லும் இவள் வாயில் எல்லா பற்களும்; எழுந்தில முளைத்தபாடில்லை; மயிரும் முடி தலை முடியும் பின்னும் அளவுக்கு; கூடிற்றில வளரவில்லை; சாய்வு இலாத பணிவில்லாத; குறுந்தலைச் சில கர்வமாயிருக்கும் சில; பிள்ளைகளோடு இணங்கி பெண்களோடு சேர்ந்து; தீ இணக்கு இணங்கு பொல்லாத நட்பு கொண்டு; ஆடி வந்து இவள் அவர்களுடன் விளையாடுகிறாள்; தன் அன்ன தனக்கு இணக்கமான வார்த்தைகளால்; செம்மை தன் செய்கையை நேர்மை போல; சொல்லி சாமர்த்தியமாகச் சொல்லிக் கொண்டு; மாயன் மா அற்புதங்கள் செய்யும்; மணி வண்ணன் மேல் மணி போன்ற கண்ணனிடம் காதல் கொண்டு; இவள் மால் உறுகின்றாளே இவள் மயங்குகிறாளே!
vāyil pallum her teeth have; ĕḻuntila not erupted yet; kūṭiṟṟila her hair is not yet thick enough; mayirum muṭi to plait; āṭi vantu ival̤ she plays with girls; pil̤l̤aikal̤oṭu iṇaṅki she befriended; tī iṇakku iṇaṅku who are naughty,; cāyvu ilāta irresponsible,; kuṟuntalaic cila and proud,; maṇi vaṇṇaṉ mel Kannan; taṉ aṉṉa with words that suit Him; cĕmmai justifies His actions; cŏlli by saying it cleverly; māyaṉ mā and works wonders; ival̤ māl uṟukiṉṟāl̤e and she is falling in Love with Him!

PAT 3.7.3

288 பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில் *
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறாள் *
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை *
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே.
288 பொங்கு வெண்மணல் கொண்டு * சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில் *
சங்கு சக்கரம் தண்டு வாள் * வில்லும் அல்லது இழைக்கலுறாள் **
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில * கோவிந்தனோடு இவளை *
சங்கை யாகி என் உள்ளம் * நாள்தொறும் தட்டுளுப்பு ஆகின்றதே (3)
288 pŏṅku vĕṇmaṇal kŏṇṭu * ciṟṟilum muṟṟattu izhaikkaluṟil *
caṅku cakkaram taṇṭu vāl̤ * villum allatu izhaikkaluṟāl̤ **
kŏṅkai iṉṉam kuvintu ĕzhuntila * kovintaṉoṭu ival̤ai *
caṅkai yāki ĕṉ ul̤l̤am * nāl̤tŏṟum taṭṭul̤uppu ākiṉṟate (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

288. Even when she tries to make a play house on the white sand in the front yard of her house, she cannot make it without drawing pictures of a conch, a wheel, a club, a sword and a bow. She is not fully grown up But my heart worries every day because she is in love with Govindan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு வெண் நுண்ணிய வெளுத்த; மணல் கொண்டு மணலால்; சிற்றிலும் சிறிய வீடு கட்ட; முற்றத்து முற்றத்திலே; இழைக்கலுறில் தொடங்கினாலும்; சங்கு சக்கரம் சங்கு சக்கரம்; தண்டு வாள் வில்லும் கதை வாள் வில் என்று; அல்லது கண்ணனின் தொடர்பில்லாததை; இழைக்கலுறாள் இழைக்க மாட்டள்; கொங்கை இன்னம் அவளுக்கு மார்பகம் இன்னும்; குவிந்து எழுந்தில திரண்டு வந்தபாடில்லை; கோவிந்தனோடு இவளை கண்ணபிரானோடு இவளுக்கு; சங்கை யாகி சம்பந்தம் ஏற்பட்டிருக்குமோ; என் உள்ளம் நாள்தொறும் என்று மனம் ஒவ்வொரு நாளும்; தட்டுளுப்பு ஆகின்றதே சந்தேகித்துத் தடுமாறுகிறதே
iḻaikkaluṟil even when she; ciṟṟilum starts building a play house; muṟṟattu in the front yard of her house; pŏṅku vĕṇ on the white; maṇal kŏṇṭu sand; iḻaikkaluṟāl̤ she cannot make it; allatu without drawing pictures of; taṇṭu vāl̤ villum a club, a sword and a bow; caṅku cakkaram a conch, a wheel,; kŏṅkai iṉṉam she is not; kuvintu ĕḻuntila fully grown up; ĕṉ ul̤l̤am nāl̤tŏṟum but I am worried; taṭṭul̤uppu ākiṉṟate and doubtful; caṅkai yāki that she is in relationship; kovintaṉoṭu ival̤ai with Kannan

PAT 3.7.4

289 ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி *
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்? *
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி *
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே.
289 ஏழை பேதை ஓர் பாலகன் வந்து * என் பெண்மகளை எள்கி *
தோழிமார் பலர் கொண்டுபோய்ச் செய்த * சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் **
ஆழியான் என்னும் ஆழ மோழையில் * பாய்ச்சி அகப்படுத்தி *
மூழை உப்பு அறியாது என்னும் * மூதுரையும் இலளே (4)
289 ezhai petai or pālakaṉ vantu * ĕṉ pĕṇmakal̤ai ĕl̤ki *
tozhimār palar kŏṇṭupoyc cĕyta * cūzhcciyai yārkku uraikkeṉ **
āzhiyāṉ ĕṉṉum āzha mozhaiyil * pāycci akappaṭutti *
mūzhai uppu aṟiyātu ĕṉṉum * mūturaiyum ilal̤e (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

289. Oh! what shall I say!! My innocent daughter has been tricked by her friends, who have taken her away. To whom shall I say about Kannan? By his mischief, the lord who holds a discus(chakra) in His hands, has pushed my daughter into the deep water of love. Oh! the saying is that the spoon that scoops the porridge doesn’t know how much salt is in the porridge. My daughter is an example for this.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏழை சபலையாய்; பேதை விளைவை அறியாத பேதையாய்; ஓர் பாலகன் வந்து இளம்பருவத்தையுடையவளுமான; என் பெண் மகளை என் மகளை; தோழிமார் பலர் பல தோழிகள் நேராக வந்து; கொண்டு போய்ச் செய்த அழைத்துக் கொண்டுபோய்; செய்த சூழ்ச்சியை செய்த சூழ்ச்சியை; ஆழியான் என்னும் சக்கரக்கையனான கண்ணனின்; ஆழ மோழையில் காதலில் ஆழமான ஆற்றின் அடியில்; அகப்படுத்தி அமுத்தித் தள்ளி; எள்கி வஞ்சித்து ஈடுபடுத்திய கபடத்தொழிலை; யார்க்கு யாரிடம்; உரைக்கேன்? சொல்லுவேன்?; மூழை உப்பு அகப்பையானது உப்பின் சுவையை; அறியாது என்னும் அறியாது என்கிற; மூதுரையும் இவளே பழமொழியும் இவள்தான்!
ĕṉ pĕṇ makal̤ai my daughter; or pālakaṉ vantu is young; eḻai innocent; petai and doesnt think about the consequences; toḻimār palar her friends came and; kŏṇṭu poyc cĕyta took her; cĕyta cūḻcciyai and by their conspiracy; akappaṭutti and pushed her; āḻa moḻaiyil deep into the river of love; āḻiyāṉ ĕṉṉum for Kannan; yārkku to whom; uraikkeṉ? will I talk about; ĕl̤ki this deceiving act; mūturaiyum ival̤e my daughter is an example for the saying that; mūḻai uppu the spoon that scoops the porridge; aṟiyātu ĕṉṉum doesn’t know how much salt is in the porridge

PAT 3.7.5

290 நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கல்
சூடி * நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள் *
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடிவளை *
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே.
290 நாடும் ஊரும் அறியவே போய் * நல்ல துழாய் அலங்கல்
சூடி * நாரணன் போம் இடம் எல்லாம் * சோதித்து உழி தருகின்றாள் **
கேடு வேண்டுகின்றார் பலர் உளர் * கேசவனோடு இவளை *
பாடிகாவல் இடுமின் என்று என்று * பார் தடுமாறினதே (5)
290 nāṭum ūrum aṟiyave poy * nalla tuzhāy alaṅkal
cūṭi * nāraṇaṉ pom iṭam ĕllām * cotittu uzhi tarukiṉṟāl̤ **
keṭu veṇṭukiṉṟār palar ul̤ar * kecavaṉoṭu ival̤ai *
pāṭikāval iṭumiṉ ĕṉṟu ĕṉṟu * pār taṭumāṟiṉate (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

290. She wears fragrant thulasi garlands and goes to all the cities and lands where Nārāyanān stays and searches for him. There are many who entertain bad thoughts Confused, they say, “ She is close to Kesavan. Keep her in a guarded place, under watch” Why is the world like this?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாடும் ஊரும் நாட்டிலுள்ளோரும் ஊரிலுள்ளோரும்; அறியவே போய் அறியும்படியாக; நல்ல துழாய் அலங்கல் சூடி திருத்துழாய் மாலை சூடிக்கொண்டு; நாரணன் கண்ணன்; போம் இடம் எல்லாம் போகும் இடமெல்லாம்; சோதித்து உழிதருகின்றாள் தேடித்தேடி திரிகிறாள்; கேடு எங்களுக்கு கேடு; வேண்டுகின்றார் வர வேண்டுமென நினைப்பவர்கள்; பலர் உளர் பலபேர் உள்ளனர்; கேசவனோடு கண்ணனோடு; இவளை திரிகிற இவளை; பாடுகாவல் நெருக்கமாகக் காவலில்; இடுமின் என்று என்று வையுங்கள் என்று; பார் தடுமாறினதே உலகோர் குழப்புகின்றனர்
nalla tuḻāy alaṅkal cūṭi she wears tulasi garland; aṟiyave poy in such a way that; nāṭum ūrum those in the country would know; cotittu uḻitarukiṉṟāl̤ she goes to places where; nāraṇaṉ Kannan; pom iṭam ĕllām goes; palar ul̤ar there are many; veṇṭukiṉṟār who desire; keṭu harm to come to us; pār taṭumāṟiṉate the people confuse things; iṭumiṉ ĕṉṟu ĕṉṟu by saying; ival̤ai that the one who roams; kecavaṉoṭu with Kannan; pāṭukāval should be kept closely in custody

PAT 3.7.6

291 பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் *
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் *
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் *
வட்டவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
291 பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து * இவள் பாடகமும் சிலம்பும் *
இட்ட மாக வளர்த்து எடுத்தேனுக்கு * என்னோடு இருக்கலுறாள் **
பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று * இவள் பூவைப் பூவண்ணா என்னும் *
வட்ட வார் குழல் மங்கைமீர் * இவள் மால் உறுகின்றாளே (6)
291 paṭṭam kaṭṭip pŏṟṟoṭu pĕytu * ival̤ pāṭakamum cilampum *
iṭṭa māka val̤arttu ĕṭutteṉukku * ĕṉṉoṭu irukkaluṟāl̤ **
pŏṭṭap poyp puṟappaṭṭu niṉṟu * ival̤ pūvaip pūvaṇṇā ĕṉṉum *
vaṭṭa vār kuzhal maṅkaimīr * ival̤ māl uṟukiṉṟāl̤e (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

291. I decorated her with a forehead ornament, golden ear rings, a padagam ornament and anklets and raised her with love, but she doesn’t want to stay with me now. She has left me and just keeps saying, “Puvai puvanna!” O girls with long thick hair, see, she is in love with him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வட்ட வார் குழல் சுருண்ட நீண்ட தலைமுடியுள்ள; மங்கைமீர்! பெண்களே!; பட்டம் கட்டி நெற்றிக்குப் பட்டம் கட்டி; பொற்றோடு பெய்து இவள் காதுக்கு தோடு போட்டு; பாடகமும் காலுக்கு கொலுசும்; சிலம்பும் சிலம்பும் அணிவித்து; இட்டமாக வளர்த்து இவளை ஆசைஆசையாய் வளர்த்து; எடுத்தேனுக்கு இப்படி சீராட்டி வளர்த்த எனக்கு; என்னோடு என்னோடு; இருக்கலுறாள் இருக்க மாட்டேன் என்கிறாள்; பொட்டப் போய் திடீரென்று என்னை விட்டு அகன்று; புறப்பட்டு நின்று இவள் வெளியிலே போய் நின்று; பூவைப் பூவண்ணா! கண்ணபிரானே; என்னும் என்று கூக்குரலிடுகிறாள்; இவள் இவள்; மால் உறுகின்றாளே மோகமடைந்தவள் போல் உள்ளாளே!
maṅkaimīr! o girls!; vaṭṭa vār kuḻal with long curly hair; iṭṭamāka val̤arttu with love I decorated may daughter with; paṭṭam kaṭṭi forehead ornament; pŏṟṟoṭu pĕytu ival̤ golden ear rings; pāṭakamum anklets; cilampum fitted with bells; ĕṭutteṉukku inspite of raising her with care; irukkaluṟāl̤ she says she will not stay; ĕṉṉoṭu with me; pŏṭṭap poy suddenly, she leaves me; puṟappaṭṭu niṉṟu ival̤ and steps outside; ĕṉṉum crying out; pūvaip pūvaṇṇā! o Kannan; ival̤ she seems; māl uṟukiṉṟāl̤e to be deeply infatuated!

PAT 3.7.7

292 பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள் *
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய் *
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள் *
வாசவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
292 பேசவும் தரியாத பெண்மையின் * பேதையேன் பேதை இவள் *
கூசமின்றி நின்றார்கள் * தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் **
கேசவா என்றும் கேடிலீ என்றும் * கிஞ்சுக வாய் மொழியாள் *
வாச வார்குழல் மங்கைமீர் * இவள் மால் உறுகின்றாளே 7
292 pecavum tariyāta pĕṇmaiyiṉ * petaiyeṉ petai ival̤ *
kūcamiṉṟi niṉṟārkal̤ * tam ĕtir kol kazhintāṉ mūzhaiyāy **
kecavā ĕṉṟum keṭilī ĕṉṟum * kiñcuka vāy mŏzhiyāl̤ *
vāca vārkuzhal maṅkaimīr * ival̤ māl uṟukiṉṟāl̤e 7

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

292. I am an innocent mother and she is my innocent daughter who doesn't know to disobey. Now she lacks shame and is like a spoon that gets loose from its hold and spills food everywhere without knowing what it is doing. Shameless, she mutters like a parrot saying, “Kesava, you are faultless!” O girls with long fragrant hair, she is fascinated with him and has fallen in love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாச வார் வாசனைமிக்க நீண்ட; குழல் தலைமுடியை உடைய; மங்கைமீர்! பெண்களே!; பேதையேன் பேதையான நான் வளர்த்த; பேதை இவள் பேதை மகளான இவள்; பேசவும் தரியாத எதிர்த்துப் பேசத்தெரியாதவளும்; பெண்மையின் பெண்மையின்; கூசமின்றி கூச்சமின்றி; நின்றார்கள் தம் எதிர் மரியாதைப் பட்டவர்கள் எதிரே; கோல் கழிந்தான் கைப்பிடியிலிருந்து விடுபட்ட; மூழையாய் அகப்பை போல்; கேசவா! என்றும் கேசவா! என்றும்; கேடிலீ! அப்பழுக்கற்றவனே!; என்றும் என்றும் சொல்கிறாள்; கிஞ்சுக வாய் கிளியைப் போன்று; மொழியாள் இவள் பேசுபவளான இவள்; மால் உறுகின்றாளே மோகமடைந்ததவள் போல் உள்ளாளே!
maṅkaimīr! o ladies!; vāca vār with long and fragrant; kuḻal hair; petaiyeṉ i am an innocent mother; petai ival̤ and she is my innocent daughter; pecavum tariyāta who doesn't know to disobey; pĕṇmaiyiṉ but now, being a woman; kūcamiṉṟi shamelessly; niṉṟārkal̤ tam ĕtir in front of respectful people; mūḻaiyāy like a spoon; kol kaḻintāṉ that gets loose from its hold; kiñcuka vāy like a parrot; ĕṉṟum she mutters; kecavā! ĕṉṟum Keshava and; keṭilī! You are faultless!; mŏḻiyāl̤ ival̤ she talks as though; māl uṟukiṉṟāl̤e she is deeply infatuated!

PAT 3.7.8

293 காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் *
கூறையுடுக்கும்அயர்க்கும் தன்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் *
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் *
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
293 காறை பூணும் கண்ணாடி காணும் * தன் கையில் வளை குலுக்கும் *
கூறை உடுக்கும் அயர்க்கும் * தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் **
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் * தேவன் திறம் பிதற்றும் *
மாறில் மா மணிவண்ணன்மேல் * இவள் மால் உறுகின்றாளே (8)
293 kāṟai pūṇum kaṇṇāṭi kāṇum * taṉ kaiyil val̤ai kulukkum *
kūṟai uṭukkum ayarkkum * taṉ kŏvvaic cĕvvāy tiruttum **
teṟit teṟi niṉṟu āyiram pert * tevaṉ tiṟam pitaṟṟum *
māṟil mā maṇivaṇṇaṉmel * ival̤ māl uṟukiṉṟāl̤e (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

293. She wears pretty clothes and looks at herself in the mirror. The bangles on her hand jingle as she moves her hands She wears a new sari and sighs. She decorates her red mouth as sweet as a kovvai fruit. She does the same thing again and again. She raves about Him who has a thousand names and His omnipotence. She is in love with the sapphire-colored lord who has no hatred for anyone.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காறை பூணும் கழுத்திலணியும் நகை அணிகிறாள்; கண்ணாடி காணும் கண்ணாடியின் முன் நின்று ரசிக்கிறாள்; தன் கையில் தன் கை வளையல்களை; வளை குலுக்கும் குலுக்குகிறாள்; கூறை உடுக்கும் சேலை கட்டிக்கொள்கிறாள்; அயர்க்கும் பிரான் வராததால் சோர்ந்து விடுகிறாள்; தன் கொவ்வை மேலும் அலங்கரித்துக்கொள்ள தன் கொவ்வைக் கனி போன்ற; செவ்வாய் திருத்தும் தன் உதடுகளை சிவப்பாக்கினாள்; தேறித் தேறி நின்று அவன் வருவான் என்ற நம்பிக்கையில் தெளிவடைந்து; ஆயிரம் பேர் ஆயிரம் பெயருடைய ஸஹஸ்ர நாமம்; தேவன் திறம் பிதற்றும் திருமாலின் பெயரை பிதற்றுகிறாள்; மாறில் மா ஒப்பற்றவனும்; மணிவண்ணன் நீலமணி போன்ற; மேல் இவள் இவன் மேல்; மால் உறுகின்றாளே மோகமடைந்ததவள் போல் உள்ளாளே!
kāṟai pūṇum she wears jewels; kaṇṇāṭi kāṇum and looks at herself in the mirror; val̤ai kulukkum she jingles; taṉ kaiyil the bangles on her hand; kūṟai uṭukkum she wears saree too; ayarkkum since He doesnt come, she gets frustrated; taṉ kŏvvai additionally, for her kovvai fruit like; cĕvvāy tiruttum taṉ lips, she makes it look red; teṟit teṟi niṉṟu believing that He will come; tevaṉ tiṟam pitaṟṟum she mutters; āyiram per His thousand names; mel ival̤ towards Him; māṟil mā who is incomparable; maṇivaṇṇaṉ and is blue complexioned; māl uṟukiṉṟāl̤e she is deeply infatuated!

PAT 3.7.9

294 கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து * இவளை
வைத்துவைத்துக்கொண்டு என்னவாணிபம்? நம்மை வடுப்படுத்தும் *
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள *
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே.
294 கைத்தலத்து உள்ள மாடு அழியக் * கண்ணாலங்கள் செய்து * இவளை
வைத்து வைத்துக்கொண்டு என்ன வாணிபம்? * நம்மை வடுப்படுத்தும் **
செய்த்தலை எழு நாற்றுப் போல் * அவன் செய்வன செய்துகொள்ள *
மைத் தடமுகில் வண்ணன் பக்கல் * வளர விடுமின்களே (9)
294 kaittalattu ul̤l̤a māṭu azhiyak * kaṇṇālaṅkal̤ cĕytu * ival̤ai-
vaittu vaittukkŏṇṭu ĕṉṉa vāṇipam? * nammai vaṭuppaṭuttum **
cĕyttalai ĕzhu nāṟṟup pol * avaṉ cĕyvaṉa cĕytukŏl̤l̤a *
mait taṭamukil vaṇṇaṉ pakkal * val̤ara viṭumiṉkal̤e (9)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

294. What is the use if I save abundant wealth and wish to spend it on her marriage? It only hurts me. She is like a tender shoot that grows on a field Like the owner of that land, He can do whatever he wants with her. Take her to the place of the beautiful one who has the color of the dark cloud and leave her there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைத்தலத்து உள்ள கையிலுள்ள; மாடு அழிய செல்வம் அழியும்படி; கண்ணாலங்கள் செய்து கல்யாணம் செய்து; இவளை வைத்து சொல்பேச்சைக் கேட்காத இவளை; வைத்துக் கொண்டு இவளுக்கு காவலிட்டு வைத்தும்; என்ன வாணிபம்? என்ன பயன்?; நம்மை நம் குடிக்கு; வடுப்படுத்தும் பழி உண்டாக்கும் இவள்; செய்த்தலை எழு கழனியிலே வளருகிற; நாற்றுப் போல் நாற்றை போல; அவன் செய்வன அவன் செய்வதை; செய்து கொள்ள தனக்கு வேண்டியபடி செய்து கொள்ள; மைத் தடமுகில் கருத்த பருத்த மேகம் போன்ற; வண்ணன் பக்கல் நிறமுடைய கண்ணனிடமே; வளர விடுமின்களே வளரும்படி சேர்த்து விடுங்கள்
māṭu aḻiya spending all the wealth; kaittalattu ul̤l̤a in hand; kaṇṇālaṅkal̤ cĕytu and make her wed; ival̤ai vaittu she does not listen to words,; ĕṉṉa vāṇipam? what the use; vaittuk kŏṇṭu of guarding her; vaṭuppaṭuttum she brings bad name; nammai to our family; nāṟṟup pol like a weed; cĕyttalai ĕḻu growing in the field; avaṉ cĕyvaṉa whatever He does; cĕytu kŏl̤l̤a let Him do as He pleases; val̤ara viṭumiṉkal̤e let her grow in the presence; vaṇṇaṉ pakkal of Kannan who is; mait taṭamukil dark as a storm cloud

PAT 3.7.10

295 பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே *
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் *
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் *
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே.
295 பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து * பேணி நம் இல்லத்துள்ளே *
இருத்துவான் எண்ணி நாம் இருக்க * இவளும் ஒன்று எண்ணுகின்றாள் **
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் * வார்த்தை படுவதன்முன் *
ஒருப்படுத்து இடுமின் இவளை * உலகளந்தான் இடைக்கே (10)
295 pĕrup pĕrutta kaṇṇālaṅkal̤ cĕytu * peṇi nam illattul̤l̤e *
iruttuvāṉ ĕṇṇi nām irukka * ival̤um ŏṉṟu ĕṇṇukiṉṟāl̤ **
maruttuvap patam nīṅkiṉāl̤ ĕṉṉum * vārttai paṭuvataṉmuṉ *
ŏruppaṭuttu iṭumiṉ ival̤ai * ulakal̤antāṉ iṭaikke (10)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

295. We did all the auspicious ceremonies that we were supposed to do for her and kept her in our home thinking that she would stay there, but she wants to do something else and is anxious to leave home. Before others think that parents haven't taken steps to treat her disease, let her go to Him who went to Mahābali as a dwarf and measured the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெருப் பெருத்த மிகச் சிறப்பாக; கண்ணாலங்கள் செய்து கல்யாணம் செய்து; பேணி நம் குல மரியாதையை காப்பாற்றி; நம் இல்லத்துள்ளே நம் வீட்டுக்குள்ளே; இருத்துவான் இவளை இருக்கச் செய்வதாக; எண்ணி என எண்ணி; நாம் இருக்க நாம் இருக்க; இவளும் ஒன்று இவளும் வேறு ஒன்று; எண்ணுகின்றாள் எண்ணுகின்றாள்; மருத்துவப் பதம் மருத்துவன் பதம் பார்த்து சிகிச்சை செய்யவிடாமல்; நீங்கினாள் என்னும் நீங்குவது போல் இவள் விலகினாள்; வார்த்தை படுவதன் முன் எனும் அவச்சொல் வருவதற்கு முன்; இவளை இவளை; உலகளந்தான் இடைக்கே உலகளந்தவனான கண்ணனிடமே; ஒருப்படுத்த இடுமின் சேர்த்து விடுங்கள்
ĕṇṇi we thought of; kaṇṇālaṅkal̤ cĕytu giving her in a wedding organized; pĕrup pĕrutta in a grand way; iruttuvāṉ and to keep her; nam illattul̤l̤e within our household; peṇi to preserve our family’s honor; nām irukka while we are thinking this way; ival̤um ŏṉṟu she had something entirely different; ĕṇṇukiṉṟāl̤ in mind; vārttai paṭuvataṉ muṉ before the harsh words could be spoken; nīṅkiṉāl̤ ĕṉṉum that parents haven't taken steps; maruttuvap patam to treat her disease; ival̤ai let her; ŏruppaṭutta iṭumiṉ go to Him; ulakal̤antāṉ iṭaikke who measured the world

PAT 3.7.11

296 ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு * இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை *
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன *
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2)
296 ## ஞாலம் முற்றும் உண்டு ஆலிலைத் துயில் * நாராயணனுக்கு * இவள்
மாலதாகி மகிழ்ந்தனள் என்று * தாய் உரை செய்ததனை **
கோலம் ஆர் பொழில் சூழ் புதுவையர்கோன் * விட்டுசித்தன் சொன்ன *
மாலை பத்தும் வல்லவர்கட்கு * இல்லை வரு துயரே (11)
296 ## ñālam muṟṟum uṇṭu ālilait tuyil * nārāyaṇaṉukku * ival̤
mālatāki makizhntaṉal̤ ĕṉṟu * tāy urai cĕytataṉai **
kolam ār pŏzhil cūzh putuvaiyarkoṉ * viṭṭucittaṉ cŏṉṉa *
mālai pattum vallavarkaṭku * illai varu tuyare (11)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

296. Vishnuchithan, the chief of Puduvai surrounded with beautiful flower gardens composed a garland of ten pāsurams about a mother who describes her daughter's love for Nārāyanān who swallowed the whole earth and rests on a banyan leaf. Those who recite these pāsurams will have no trouble in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஞாலம் முற்றும் உண்டு உலகமனைத்தையும் உண்டு; ஆலிலைத் துயில் ஆலிலைமேல் துயிலமர்ந்த; நாராயணனுக்கு நாராயணனிடத்தில்; இவள் மாலதாகி மோகித்து மதி மயங்கி; மகிழ்ந்தனள் என்று மகிழ்ந்தாள் என்று; தாயுரை செய்ததனை தாயார் சொன்னதை; கோலம் ஆர் அழகு மிகுந்த; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; புதுவையர்கோன் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும்; விட்டுசித்தன் சொன்ன பெரியாழ்வார் அருளிச்செய்த; மாலை பத்தும் பத்துப் பாசுரங்களையும்; வல்லவர்கட்கு அனுசந்திப்பவர்களுக்கு; இல்லை வரு துயரே துயரமே வராது
vallavarkaṭku to those who recite; mālai pattum these ten pasurams; viṭṭucittaṉ cŏṉṉa composed by Periazhwar of; putuvaiyarkoṉ Sri Villiputhur that is; pŏḻil cūḻ surrounded by gardens what were; kolam ār beautiful; tāyurai cĕytataṉai describing how the mother felt about her daughter; ival̤ mālatāki who was enchanted, dazed; makiḻntaṉal̤ ĕṉṟu and rejoiced thinking about; nārāyaṇaṉukku Narayanan who; ālilait tuyil rests on a leaf; ñālam muṟṟum uṇṭu after consuming all the worlds; illai varu tuyare sorrow will never come