PAT 3.7.2

மாயன் மாமணிவண்ணன்

287 வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில *
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி *
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி *
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
287 vāyil pallum ĕzhuntila * mayi rum muṭi kūṭiṟṟila *
cāyvu ilāta kuṟuntalaic * cila pil̤l̤aikal̤oṭu iṇaṅki **
tī iṇakku iṇaṅku āṭi vantu * ival̤ taṉ aṉṉa cĕmmai cŏlli *
māyaṉ mā maṇivaṇṇaṉ mel * ival̤ māl uṟukiṉṟāl̤e (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

287. Her teeth have not grown out yet, her hair is not yet thick enough to plait, and she plays with sparse-haired still innocent children. But now she has made friends with naughty girls and says that they are good children like her. She has fallen in love with Māyan, the beautiful sapphire-colored lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாயில் பல்லும் இவள் வாயில் எல்லா பற்களும்; எழுந்தில முளைத்தபாடில்லை; மயிரும் முடி தலை முடியும் பின்னும் அளவுக்கு; கூடிற்றில வளரவில்லை; சாய்வு இலாத பணிவில்லாத; குறுந்தலைச் சில கர்வமாயிருக்கும் சில; பிள்ளைகளோடு இணங்கி பெண்களோடு சேர்ந்து; தீ இணக்கு இணங்கு பொல்லாத நட்பு கொண்டு; ஆடி வந்து இவள் அவர்களுடன் விளையாடுகிறாள்; தன் அன்ன தனக்கு இணக்கமான வார்த்தைகளால்; செம்மை தன் செய்கையை நேர்மை போல; சொல்லி சாமர்த்தியமாகச் சொல்லிக் கொண்டு; மாயன் மா அற்புதங்கள் செய்யும்; மணி வண்ணன் மேல் மணி போன்ற கண்ணனிடம் காதல் கொண்டு; இவள் மால் உறுகின்றாளே இவள் மயங்குகிறாளே!
vāyil pallum her teeth have; ĕḻuntila not erupted yet; kūṭiṟṟila her hair is not yet thick enough; mayirum muṭi to plait; āṭi vantu ival̤ she plays with girls; pil̤l̤aikal̤oṭu iṇaṅki she befriended; tī iṇakku iṇaṅku who are naughty,; cāyvu ilāta irresponsible,; kuṟuntalaic cila and proud,; maṇi vaṇṇaṉ mel Kannan; taṉ aṉṉa with words that suit Him; cĕmmai justifies His actions; cŏlli by saying it cleverly; māyaṉ mā and works wonders; ival̤ māl uṟukiṉṟāl̤e and she is falling in Love with Him!