PAT 3.7.6

பூவைப்பூ வண்ணன்

291 பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும் *
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள் *
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும் *
வட்டவார்குழல்மங்கைமீர்! இவள்மாலுறுகின்றாளே.
291 paṭṭam kaṭṭip pŏṟṟoṭu pĕytu * ival̤ pāṭakamum cilampum *
iṭṭa māka val̤arttu ĕṭutteṉukku * ĕṉṉoṭu irukkaluṟāl̤ **
pŏṭṭap poyp puṟappaṭṭu niṉṟu * ival̤ pūvaip pūvaṇṇā ĕṉṉum *
vaṭṭa vār kuzhal maṅkaimīr * ival̤ māl uṟukiṉṟāl̤e (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

291. I decorated her with a forehead ornament, golden ear rings, a padagam ornament and anklets and raised her with love, but she doesn’t want to stay with me now. She has left me and just keeps saying, “Puvai puvanna!” O girls with long thick hair, see, she is in love with him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வட்ட வார் குழல் சுருண்ட நீண்ட தலைமுடியுள்ள; மங்கைமீர்! பெண்களே!; பட்டம் கட்டி நெற்றிக்குப் பட்டம் கட்டி; பொற்றோடு பெய்து இவள் காதுக்கு தோடு போட்டு; பாடகமும் காலுக்கு கொலுசும்; சிலம்பும் சிலம்பும் அணிவித்து; இட்டமாக வளர்த்து இவளை ஆசைஆசையாய் வளர்த்து; எடுத்தேனுக்கு இப்படி சீராட்டி வளர்த்த எனக்கு; என்னோடு என்னோடு; இருக்கலுறாள் இருக்க மாட்டேன் என்கிறாள்; பொட்டப் போய் திடீரென்று என்னை விட்டு அகன்று; புறப்பட்டு நின்று இவள் வெளியிலே போய் நின்று; பூவைப் பூவண்ணா! கண்ணபிரானே; என்னும் என்று கூக்குரலிடுகிறாள்; இவள் இவள்; மால் உறுகின்றாளே மோகமடைந்தவள் போல் உள்ளாளே!
maṅkaimīr! o girls!; vaṭṭa vār kuḻal with long curly hair; iṭṭamāka val̤arttu with love I decorated may daughter with; paṭṭam kaṭṭi forehead ornament; pŏṟṟoṭu pĕytu ival̤ golden ear rings; pāṭakamum anklets; cilampum fitted with bells; ĕṭutteṉukku inspite of raising her with care; irukkaluṟāl̤ she says she will not stay; ĕṉṉoṭu with me; pŏṭṭap poy suddenly, she leaves me; puṟappaṭṭu niṉṟu ival̤ and steps outside; ĕṉṉum crying out; pūvaip pūvaṇṇā! o Kannan; ival̤ she seems; māl uṟukiṉṟāl̤e to be deeply infatuated!