PAT 3.7.1

திருமாலிடம் ஈடுபட்ட மகளின் இளமை கண்டு நற்றாய் இரங்குதல் அரவணைப் பள்ளியான்

286 ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய் *
செய்யநூலின்சிற்றாடை செப்பனுடுக்கவும்வல்லளல்லள் *
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள் *
பையரவணைப்பள்ளியானொடு கைவைத்துஇவள்வருமே. (2)
286 ## aiya puzhuti uṭampu al̤aintu * ival̤ peccum alantalaiyāy *
cĕyya nūliṉ ciṟṟāṭai * cĕppaṉ uṭukkavum vallal̤ allal̤ **
kaiyiṉil ciṟutūtai yoṭu * ival̤ muṟṟil pirintum ilal̤ *
pai aravaṇaip pal̤l̤iyāṉŏṭu * kaivaittu ival̤varume (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

286. She plays on the sand and makes herself dirty. She prattles like a baby. She doesn’t know how to wear her lovely dress made with fine thread. She has never gone out of our front yard with a small play pot in her hands, Yet she comes home, holding the hands of the one who rests on the snake Adishesha,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஐயபுழுதி உடம்பு உடம்பெல்லாம் புழுதியாயிருக்க; அளைந்து இவள் மண்ணில் அளைந்து விளையாடிய இவள்; பேச்சும் அலந்தலையாய் புரியும்படியான பேச்சுமிலாதவளாய்; செய்ய நூலின் சிற்றாடை சிவந்த சிற்றாடையை; செப்பன் உடுக்கவும் சரியாக உடுத்திடவும்; வல்லளல்லள் தெரியாதவளாய்; கையினில் கையிலுள்ள; சிறுதூதையோடு சிறிய மர சொப்புகளை; இவள் முற்றில் சுளககையும் (முறம்) பிரிய; பிரிந்தும் இலள் மனமில்லாத இவள்; பை அரவணை படம் உடைய அரவு மீது சயனம்; பள்ளியானொடு செய்பவனோடு; கைவைத்து கைகோர்த்து; இவள் வருமே வருகிறாளே! இது என்னே!
al̤aintu ival̤ she plays on the sand and; aiyapuḻuti uṭampu makes herself dirty; peccum alantalaiyāy she prattles like a baby; vallal̤allal̤ She doesn’t know; cĕppaṉ uṭukkavum how to wear her; cĕyya nūliṉ ciṟṟāṭai lovely dress made with fine thread; pirintum ilal̤ she never likes to; ival̤ muṟṟil part with; ciṟutūtaiyoṭu small wooden toys; kaiyiṉil that is in her hands; ival̤ varume but here she comes; kaivaittu holding the hands of; pal̤l̤iyāṉoṭu the One; pai aravaṇai who rests on the snake Adishesha