PAT 3.7.10

உலகளந்தானிடம் ஒருப்படுத்திடுமின்

295 பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே *
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள் *
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன் *
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே.
295 pĕrup pĕrutta kaṇṇālaṅkal̤ cĕytu * peṇi nam illattul̤l̤e *
iruttuvāṉ ĕṇṇi nām irukka * ival̤um ŏṉṟu ĕṇṇukiṉṟāl̤ **
maruttuvap patam nīṅkiṉāl̤ ĕṉṉum * vārttai paṭuvataṉmuṉ *
ŏruppaṭuttu iṭumiṉ ival̤ai * ulakal̤antāṉ iṭaikke (10)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

295. We did all the auspicious ceremonies that we were supposed to do for her and kept her in our home thinking that she would stay there, but she wants to do something else and is anxious to leave home. Before others think that parents haven't taken steps to treat her disease, let her go to Him who went to Mahābali as a dwarf and measured the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெருப் பெருத்த மிகச் சிறப்பாக; கண்ணாலங்கள் செய்து கல்யாணம் செய்து; பேணி நம் குல மரியாதையை காப்பாற்றி; நம் இல்லத்துள்ளே நம் வீட்டுக்குள்ளே; இருத்துவான் இவளை இருக்கச் செய்வதாக; எண்ணி என எண்ணி; நாம் இருக்க நாம் இருக்க; இவளும் ஒன்று இவளும் வேறு ஒன்று; எண்ணுகின்றாள் எண்ணுகின்றாள்; மருத்துவப் பதம் மருத்துவன் பதம் பார்த்து சிகிச்சை செய்யவிடாமல்; நீங்கினாள் என்னும் நீங்குவது போல் இவள் விலகினாள்; வார்த்தை படுவதன் முன் எனும் அவச்சொல் வருவதற்கு முன்; இவளை இவளை; உலகளந்தான் இடைக்கே உலகளந்தவனான கண்ணனிடமே; ஒருப்படுத்த இடுமின் சேர்த்து விடுங்கள்
ĕṇṇi we thought of; kaṇṇālaṅkal̤ cĕytu giving her in a wedding organized; pĕrup pĕrutta in a grand way; iruttuvāṉ and to keep her; nam illattul̤l̤e within our household; peṇi to preserve our family’s honor; nām irukka while we are thinking this way; ival̤um ŏṉṟu she had something entirely different; ĕṇṇukiṉṟāl̤ in mind; vārttai paṭuvataṉ muṉ before the harsh words could be spoken; nīṅkiṉāl̤ ĕṉṉum that parents haven't taken steps; maruttuvap patam to treat her disease; ival̤ai let her; ŏruppaṭutta iṭumiṉ go to Him; ulakal̤antāṉ iṭaikke who measured the world