PAT 3.7.8

பருவப் பெண்ணின் இயல்பு

293 காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும் *
கூறையுடுக்கும்அயர்க்கும் தன்கொவ்வைச்செவ்வாய்திருத்தும் *
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும் *
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே.
293 kāṟai pūṇum kaṇṇāṭi kāṇum * taṉ kaiyil val̤ai kulukkum *
kūṟai uṭukkum ayarkkum * taṉ kŏvvaic cĕvvāy tiruttum **
teṟit teṟi niṉṟu āyiram pert * tevaṉ tiṟam pitaṟṟum *
māṟil mā maṇivaṇṇaṉmel * ival̤ māl uṟukiṉṟāl̤e (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

293. She wears pretty clothes and looks at herself in the mirror. The bangles on her hand jingle as she moves her hands She wears a new sari and sighs. She decorates her red mouth as sweet as a kovvai fruit. She does the same thing again and again. She raves about Him who has a thousand names and His omnipotence. She is in love with the sapphire-colored lord who has no hatred for anyone.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காறை பூணும் கழுத்திலணியும் நகை அணிகிறாள்; கண்ணாடி காணும் கண்ணாடியின் முன் நின்று ரசிக்கிறாள்; தன் கையில் தன் கை வளையல்களை; வளை குலுக்கும் குலுக்குகிறாள்; கூறை உடுக்கும் சேலை கட்டிக்கொள்கிறாள்; அயர்க்கும் பிரான் வராததால் சோர்ந்து விடுகிறாள்; தன் கொவ்வை மேலும் அலங்கரித்துக்கொள்ள தன் கொவ்வைக் கனி போன்ற; செவ்வாய் திருத்தும் தன் உதடுகளை சிவப்பாக்கினாள்; தேறித் தேறி நின்று அவன் வருவான் என்ற நம்பிக்கையில் தெளிவடைந்து; ஆயிரம் பேர் ஆயிரம் பெயருடைய ஸஹஸ்ர நாமம்; தேவன் திறம் பிதற்றும் திருமாலின் பெயரை பிதற்றுகிறாள்; மாறில் மா ஒப்பற்றவனும்; மணிவண்ணன் நீலமணி போன்ற; மேல் இவள் இவன் மேல்; மால் உறுகின்றாளே மோகமடைந்ததவள் போல் உள்ளாளே!
kāṟai pūṇum she wears jewels; kaṇṇāṭi kāṇum and looks at herself in the mirror; val̤ai kulukkum she jingles; taṉ kaiyil the bangles on her hand; kūṟai uṭukkum she wears saree too; ayarkkum since He doesnt come, she gets frustrated; taṉ kŏvvai additionally, for her kovvai fruit like; cĕvvāy tiruttum taṉ lips, she makes it look red; teṟit teṟi niṉṟu believing that He will come; tevaṉ tiṟam pitaṟṟum she mutters; āyiram per His thousand names; mel ival̤ towards Him; māṟil mā who is incomparable; maṇivaṇṇaṉ and is blue complexioned; māl uṟukiṉṟāl̤e she is deeply infatuated!