Chapter 1

Kannan threatens the cowherd girls as a goblin - (மெச்சு ஊது)

கண்ணன் அப்பூச்சி காட்டுதல்
Kannan threatens the cowherd girls as a goblin - (மெச்சு ஊது)
One of the activities of young children is to play ‘poochchi kaattuthal’. ‘poochchi kaattuthal or ‘apoochchi kaattuthal’ is when a child tries to scare another by inverting his/her eyelids to pose as a goblin/monster. Kannan enjoys playing ‘poochchi kaattuthal’ as well. The Gopis are amused by His action. Similar to the Gopis, Āzhvār, with his deep devotion, envisions and enjoys Kannan’s ‘poochchi kaattuthal’.
சிறு குழந்தைகளின் செயல்களுள் பூச்சி காட்டுதல் ஒன்று. அவ்வாறு கண்ணனும் பூச்சி காட்டி விளையாடுகிறான். கோபியர்கள் குழந்தையின் செயலைக் கண்டு களிக்கிறார்கள். ஆழ்வாரும் பக்தியின் மேலீட்டால் அவ்விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதுபோல் அனுபவித்து இன்பமடைகிறார்.
Verses: 118 to 127
Grammar: கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 2.1.1

118 மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி *
பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய் *
பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த *
அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான். (2)
118 ## மெச்சு ஊது சங்கம் இடத்தான் * நல் வேய் ஊதி *
பொய்ச் சூதில் தோற்ற * பொறை உடை மன்னர்க்காய் **
பத்து ஊர் பெறாது அன்று * பாரதம் கைசெய்த *
அத் தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (1)
118. ##
mechchoodhu shankam idaththān * nalvEyoodhi *
poychchoodhil thORRa * poRaiyudai mannarkkāy *
paththoor peRādhu anRu * bhāratham kai seytha *
aththoodhan appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. (2) 1.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

118. The lord with a conch in his left hand that sounds in victory and plays delightful music on his flute went as a messenger for the Pāndavās when they had lost everything to the dishonest gambling of Sakuni and unable to keep even ten cities, had to fight the Bhārathā war to get their land back. Oh! He comes as a goblin and frightens us. That dear one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெச்சு அனைவரும் மெச்சும்படி; ஊது சங்கம் ஊதும் பாஞ்ச ஜன்னியத்தை; இடத்தான் இடது கரத்தில் வைத்துள்ளவன்; நல் வேய் ஊதி நல்ல வேய்ங்குழலை ஊதி; பொய்ச் சூதில் தோற்ற அனைத்தையும் இழந்த; பொறை உடை பொறுமைமிக்க; மன்னர்க்காய் பாண்டவர்களுக்காக; பத்து ஊர் பத்து ஊரைப்; பெறாது அன்று பெற முடியாத சமயம்; பாரதம் கைசெய்த பாரதப் போரில் கை கொடுத்த; அத் தூதன் அந்த தூதுவன் கண்ணன்; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.2

119 மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும் *
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய * பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற * செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
119 மலை புரை தோள் மன்னவரும் * மாரதரும் மற்றும் *
பலர் குலைய * நூற்றுவரும் பட்டழிய ** பார்த்தன்
சிலை வளையத் * திண்தேர்மேல் முன்நின்ற * செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (2)
119
malaipurai thOL mannavarum * māradharum maRRum *
palar kulaiya * nooRRuvarum pattazhiya *
pārththan silai vaLaiyath * thiNthErmEl munninRa *
seNGgaN alavalai vandhu appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 2.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

119. He is the One who made many kings and warriors with arms strong as mountains tremble and destroyed the hundred Kauravās foes. When Arjunā bent his bow, He stood with him in front as the charioteer in the Bhārathā war. He is Kannan, who made the red- eyed Parthā (Arjunā) triumph. He comes as a goblin and frightens us, That dear mischievous one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலை புரை மலை போன்ற; தோள் தோள்களை உடைய; மன்னவரும் மன்னவர்களும்; மாரதரும் பீஷ்மர் போன்ற மஹா ரதர்களும்; மற்றும் பலர் மற்றும் பலரும்; குலைய நடுங்கிப் போகும்படி செய்து; நூற்றுவரும் கௌரவர்கள் நூறு பேரும்; பட்டழிய வேரற்ற மரம்போல் அழிந்திட; பார்த்தன் அர்ஜுனனின்; சிலை வளைய வில் வளைந்திட; திண் தேர்மேல் திண்மையான தேரின்மேல்; முன்நின்ற முன்னே சாரதியாக நின்று; செங்கண் சிவந்த கண்களையுடைய பார்த்தனின்; அலவலை வெற்றியை போற்றியவனான கண்ணன்; வந்து என்னிடம் வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.3

120 காயும்நீர்புக்குக் கடம்பேறி * காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி *
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற *
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
120 காயும் நீர் புக்குக் * கடம்பு ஏறி * காளியன்
தீய பணத்தில் * சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி **
வேயின் குழல் ஊதி * வித்தகனாய் நின்ற *
ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (3)
120
kāyum n^eer pukku * kadambERi *
kāLiyan theeya paNaththil * silambārkka pāyndhādi *
vEyin kuzhaloodhi * viththakanāy n^inRa *
āyanvandhu appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 3.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

120. Plunging into the water that was frothing with snake poison He climbed the Kadamba tree and jumped upon evil Kālingā's hood and danced fiercely as the bells on His anklets sounded and played melodious tune on His flute. Our lord, the clever one comes as a goblin and frightens us. That dear one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காயும் நீர் காளியனின் விஷாக்னியால் சூடாயிருக்கும்; புக்கு மடுவில் புகுந்து; கடம்பு பிறகு கரையோரம் இருந்த கடம்ப; ஏறி மரத்தில் ஏறி; காளியன் காளியனின்; தீய தீமை மிக்க; பணத்தில் அப்பாம்பின் படத்தில் குதித்து; சிலம்பு ஆர்க்க திருவடி சிலம்புகள் ஜலீர் என ஒலிக்க; பாய்ந்து ஆடி துள்ளி கூத்தாடி; வேயின் புல்லாங்குழலில்; குழல் ஊதி இசை எழுப்பி; வித்தகனாய் நின்ற வித்தகனாக நின்ற; ஆயன் வந்து ஆயர்குலக் கண்ணன் ஒடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.4

121 இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் *
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி * அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட *
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
121 இருட்டிற் பிறந்து போய் * ஏழை வல் ஆயர் *
மருட்டைத் தவிர்ப்பித்து * வன் கஞ்சன் மாளப் **
புரட்டி அந்நாள் எங்கள் * பூம்பட்டுக் கொண்ட *
அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (4)
121
iruttil piRandhupOy * Ezhai vallāyar *
maruttaith thavirppiththu * van_kaNYchanmāLap-
puratti * an^n^āL eNGgaL * poompattuk koNda *
arattan vandhu appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 4.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

121. The lord Kannan was born in the night and raised in a poor cowherd village. He killed the evil king Kamsan and destroyed the suffering of the cowherds. He stole our pretty silk dresses. He comes mischievously as a goblin and frightens us, That dear one comes and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருட்டில் பிறந்து இருள் மிக்க இரவு நேரத்தில் பிறந்து; போய் அப்போதே வேறிடம் போய்; ஏழை எளிமையான; வல் ஆயர் வல்லமையுடைய யாதவர்களின்; மருட்டைத் தவிர்ப்பித்து மருட்சியை அகற்றிய; வன் கஞ்சன் மாள கொடிய கம்சன் மாண்டிட; புரட்டி அவனை புரட்டிய; அந்நாள் அந்த நாளில்; எங்கள் எங்கள்; பூம்பட்டுக் கொண்ட பட்டாடைகளைக் கவர்ந்த; அரட்டன் வந்து குறும்புக்காரன் ஓடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.5

122 சேப்பூண்ட சாடுசிதறி * திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைத்தாம்பால் *
சோப்பூண்டு துள்ளித்துடிக்கத்துடிக்க * அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
122 சேப் பூண்ட * சாடு சிதறித் திருடி * நெய்க்கு
ஆப்பூண்டு * நந்தன் மனைவி கடைத் தாம்பால் **
சோப்பூண்டு துள்ளித் * துடிக்கத் துடிக்க * அன்று
ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (5)
122
sEppooNda * sādu sidhaRi *
thirudi n^eykku āppooNdu * nandhan manaivi kadai thāmbāl *
sOppooNdu thuLLi * thudikkath thudikka *
anRu āppooNdān appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 5.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

122. He kicked Sakatāsuran who came as a cart yoked to bulls and killed him. The cowherd women tied the dear child by a rope used to churn yogurt. Nanda's wife Yashodā beat him for stealing butter and tied him to a mortar. He comes as a goblin and frightens us, that dear one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேப் பூண்ட எருதுகள் பூட்டிய சகடத்தை; சாடு சிதறி சக்கரம் சிதறிபோகும்படி உதைத்து; திருடி நெய்க்கு நெய்க்கு ஆசைப்பட்டு திருடியதால்; ஆப்பூண்டு ஆய்ச்சியரால் கட்டப்பட்டு; நந்தன் மனைவி நந்தகோபன் தேவியான யசோதை; கடை தாம்பால் தயிர் கடையும் தாம்புக் கயிறால்; சோப்பூண்டு அடிவாங்கி; துள்ளித் துடிக்க துடிக்க வலியினால் துள்ளித் துடித்த; அன்று அந்த பிள்ளைப்பருவதிலே; ஆப்பூண்டான் கட்டுண்டிருந்தவன்; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.6

123 செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு *
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த *
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய *
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
123 செப்பு இள மென்முலைத் * தேவகி நங்கைக்கு *
சொப்படத் தோன்றி * தொறுப்பாடியோம் வைத்த **
துப்பமும் பாலும் * தயிரும் விழுங்கிய *
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (6)
123
seppiLa menmulaith * dhEvaki n^aNGgaikku *
soppadath thOnRith * thoRuppādiyOm vaiththa *
thuppamum pālum * thayirum vizhuNGgiya *
appan vandhu appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 6.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

123. He was born as the dear child to Devaki with young soft small breasts. He stole and swallowed ghee, milk and yogurt that we, the cowherd women kept. He comes as a goblin and frightens us, that dear one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செப்பு செப்பு போன்ற; இள மென்முலைத் இளமைத் தோற்றமுடைய; தேவகி நங்கைக்குச் தேவகி பிராட்டிக்கு மகனாக; சொப்படத் தோன்றித் சிறப்பாகப் பிறந்து; தொறுப்பாடியோம் ஆயர்பாடியில் உள்ள நாங்கள்; வைத்த சேர்த்து வைத்திருந்த; துப்பமும் பாலும் நெய்யையும் பாலையும்; தயிரும் விழுங்கிய தயிரையும் களவாடி விழுங்கிய; அப்பன் வந்து பெருமான் ஓடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.7

124 தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ? *
சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம் *
கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி *
அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
124 தத்துக் கொண்டாள் கொலோ? * தானே பெற்றாள் கொலோ? *
சித்தம் அனையாள் * அசோதை இளஞ்சிங்கம் **
கொத்து ஆர் கருங்குழல் * கோபால கோளரி *
அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (7)
124
thaththuk koNdāLkolO? * thānE peRRāL kolO? *
siththa manaiyāL * asOthai iLaNYchiNGgam *
koththār karuNGkuzhal * gOpāla kOLari *
aththan vandhu appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 7.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

124. Did Yashodā adopt this child? Or did she give birth to him? She loves him no matter what. That dark-haired child, decorated with bunches of flowers, dear Gopalan, the young lion-like son of Yashodā, comes as a goblin and frightens us, that dear one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தத்துக்கொண்டாள் கொலோ? தத்தெடுத்த மகனாகவோ; தானே பெற்றாள் கொலோ? தானே பெற்ற மகனாகவோ; சித்தம் எப்படி இருப்பினும்; அனையாள் ஒத்த மனமுடையவளான; அசோதை இளஞ் சிங்கம் யசோதையின் புதல்வன்; கொத்து ஆர் மலர் கொத்து அணிந்த; கருங்குழல் கரிய கூந்தலை யுடையவனும்; கோபால கோளரி இடையர்களுக்கு சிங்கம் போன்ற; அத்தன் வந்து மிடுக்கையுடைய பெருமான் ஓடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.8

125 கொங்கை வன்கூனிசொற்கொண்டு * குவலயத்
துங்கக்கரியும் பரியும்இராச்சியமும் *
எங்கும்பரதற்கருளி வன்கானடை *
அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
125 கொங்கை வன் * கூனிசொற் கொண்டு * குவலயத்
துங்கக் கரியும் * பரியும் இராச்சியமும் **
எங்கும் பரதற்கு அருளி * வன்கான் அடை *
அங் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (8)
125
koNGgaivan * kooni soRkoNdu *
kuvalayath thuNGgak kariyum * pariyum irāchchiyamum *
eNGgum paradhaRku aruLi * van_kānadai *
aNGkaNNan appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 8.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

125. As Rāma our lord obeyed his stepmother, after she heard the cruel words of Manthara, whose back was bent like breasts. He gave away his precious elephants, horses and his earthly kingdom to his brother Bharathan and went to the terrible forest. That dear one with lovely eyes frightens us, He comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கை மார்பகம் போன்ற; வன் கூனி முதுகை உடைய கூனியின்; சொற் கொண்டு கடும் வார்த்தைகளைக் கேட்டு; குவலய பூவுலகில் உள்ள; துங்கக் கரியும் பெரிய யானைகளையும்; பரியும் குதிரைகளையும்; இராச்சியமும் ராஜ்ஜியத்தையும்; எங்கும் எல்லாவற்றையும்; பரதற்கு அருளி பரதனுக்குத் தந்து; வன் கான் நுழையவே முடியாத; அடை அடர்ந்த காட்டிற்கு சென்ற; அங் கண்ணன் கண் அழகன்; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.9

126 பதகமுதலைவாய்ப் பட்டகளிறு *
கதறிக்கைகூப்பி என்கண்ணா! கண்ணா! என்ன
உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த *
அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
126 பதக முதலைவாய்ப் * பட்ட களிறு *
கதறிக் கைகூப்பி * என் கண்ணா கண்ணா என்ன **
உதவப் புள் ஊர்ந்து * அங்கு உறுதுயர் தீர்த்த *
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் * அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான் (9)
126
padhaha mudhalai * vāyppatta kaLiRu *
kadhaRik kaikooppi * en_kaNNā! kaNNā! enna *
udhavap puLLoorndhu * aNGgu uRuthuyar theerththa *
adhakan vandhu appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 9.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

126. Caught by a terrible crocodile, when Gajendra the elephant cried out in distress, “O my Kannā, my Kannā!”, the majestic lord came on Garudā and saved him. He, the protector of his devotees, comes as a goblin and frightens us, That dear one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பதக தாக்கும் தன்மையுடைய; முதலைவாய் முதலை வாயில்; பட்ட களிறு அகப்பட்டுகொண்ட கஜேந்திரன்; கதறிக் கைகூப்பி கதறிக்கொண்டே கை கூப்பி; என் கண்ணா! என் கண்ணனே!; கண்ணா! ஆதிமூலமே!; என்ன என்றழைக்க; உதவ அதற்கு உதவுவதற்காக; புள் ஊர்ந்து கருடன் மீது சென்று; அங்கு யானையின்; உறு துயர் கடும் துயரத்தைத்; தீர்த்த தீர்த்த; அதகன் வந்து கம்பீரமானவன் ஓடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்

PAT 2.1.10

127 வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த *
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த *
சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்
வல்லார்போய் * வைகுந்தம் மன்னியிருப்பரே. (2)
127 ## வல்லாள் இலங்கை மலங்கச் * சரந் துரந்த *
வில்லாளனை * விட்டுசித்தன் விரித்த **
சொல் ஆர்ந்த அப்பூச்சிப் * பாடல் இவை பத்தும்
வல்லார் போய் * வைகுந்தம் மன்னி இருப்பரே (10)
127. ##
vallāLi ilaNGgai malaNGgach * charandhurandha *
villāLanai * vishNu chiththan viriththa *
sollārndha appoochchi * pādal ivaipaththum vallār_pOy *
vaikuntham manni irupparE. (2) 10.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

127. Vishnuchithan composed ten pāsurams, escribing how as Rāma, our god destroyed the strong Rakshasās of Lankā with his bow and how he came as a goblin and frightened the cowherd women in the cowherd village. Those who can recite the ten beautiful “appuchi kāttal” pāsurams, will go to Vaikuntam (the abode of God) and stay there forever.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்லாள் பலம் மிக்க வீரர்களை உடைய; இலங்கை மலங்க இலங்கைஅழிந்திட; சரம் துரந்த அம்புகளை எய்த; வில்லாளனை வில்லேந்திய வீரனான ராமபிரானை; விட்டுசித்தன் விரித்த பெரியாழ்வார் விரித்துரைத்த; சொல் ஆர்ந்த சொல் வளம் மிக்க; அப்பூச்சிப் பாடல் பூச்சி காட்டும் பாடல்கள்; இவை பத்தும் வல்லார் இந்த பத்தையும் ஓத வல்லவர்கள்; போய் மேலுலகம் போய்; வைகுந்தம் வைகுந்தத்தில்; மன்னி இருப்பரே என்றும் வசிப்பார்கள்