வல் ஆள் இலங்கை மலங்க சரம் துரந்த வில் ஆளானை விட்டு சித்தன் விரித்த சொல் ஆர்ந்த அப் பூச்சி பாடல் இவை பத்தும் வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே -2-1-10– –
பதவுரை
வல்லாள்–பலசாலிகளான வீரர்களை யுடைய இலங்கை–லங்கையானது மலங்க–பாழாம்படி சரம் துரந்த–அம்பைச் செலுத்திய வில் ஆளனை–வில்லையேந்தி ஸ்ரீராமனாக (முன்பு) திருவவதரித்த கண்ணனைப் பற்றி விட்டு சித்தன்–பெரியாழ்வார் விரித்த–பரக்க