PAT 2.1.6

தேவகியின் தோன்றல்

123 செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு *
சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த *
துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய *
அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
123 cĕppu il̤a mĕṉmulait * tevaki naṅkaikku *
cŏppaṭat toṉṟi * tŏṟuppāṭiyom vaitta **
tuppamum pālum * tayirum vizhuṅkiya *
appaṉ vantu appūcci kāṭṭukiṉṟāṉ * ammaṉe appūcci kāṭṭukiṉṟāṉ (6)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

123. He was born as the dear child to Devaki with young soft small breasts. He stole and swallowed ghee, milk and yogurt that we, the cowherd women kept. He comes as a goblin and frightens us, that dear one comes as a goblin and frightens us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செப்பு செப்பு போன்ற; இள மென்முலைத் இளமைத் தோற்றமுடைய; தேவகி நங்கைக்குச் தேவகி பிராட்டிக்கு மகனாக; சொப்படத் தோன்றித் சிறப்பாகப் பிறந்து; தொறுப்பாடியோம் ஆயர்பாடியில் உள்ள நாங்கள்; வைத்த சேர்த்து வைத்திருந்த; துப்பமும் பாலும் நெய்யையும் பாலையும்; தயிரும் விழுங்கிய தயிரையும் களவாடி விழுங்கிய; அப்பன் வந்து பெருமான் ஓடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்