தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ சித்தம் அனையாள் அசோதை இளம் சிங்கம் கொத்தார் கரும் குழல் கோபாலர் கோளரி அத்தன் வந்து என்னை அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் –2-1-7- –
பதவுரை
(இந்தப் பிள்ளையை யசோதை) தத்து கொண்டாள் கொல் ஓ–தத்த-ஸ்வீ க்ருத – புத்ரனாக வளர்த்துக் கொண்டாளோ! (அல்லது) தானே பெற்றாள் கொலோ–ஸ்வயமாகவே மெய் நொந்து பெற்றெடுத்தாளோ! சித்தம்