PAT 2.1.3

குழலூதும் வித்தகன்

120 காயும்நீர்புக்குக் கடம்பேறி * காளியன்
தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி *
வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற *
ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
120 kāyum nīr pukkuk * kaṭampu eṟi * kāl̤iyaṉ
tīya paṇattil * cilampu ārkkap pāyntu āṭi **
veyiṉ kuzhal ūti * vittakaṉāy niṉṟa *
āyaṉ vantu appūcci kāṭṭukiṉṟāṉ * ammaṉe appūcci kāṭṭukiṉṟāṉ (3)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

120. Plunging into the water that was frothing with snake poison He climbed the Kadamba tree and jumped upon evil Kālingā's hood and danced fiercely as the bells on His anklets sounded and played melodious tune on His flute. Our lord, the clever one comes as a goblin and frightens us. That dear one comes as a goblin and frightens us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காயும் நீர் காளியனின் விஷாக்னியால் சூடாயிருக்கும்; புக்கு மடுவில் புகுந்து; கடம்பு பிறகு கரையோரம் இருந்த கடம்ப; ஏறி மரத்தில் ஏறி; காளியன் காளியனின்; தீய தீமை மிக்க; பணத்தில் அப்பாம்பின் படத்தில் குதித்து; சிலம்பு ஆர்க்க திருவடி சிலம்புகள் ஜலீர் என ஒலிக்க; பாய்ந்து ஆடி துள்ளி கூத்தாடி; வேயின் புல்லாங்குழலில்; குழல் ஊதி இசை எழுப்பி; வித்தகனாய் நின்ற வித்தகனாக நின்ற; ஆயன் வந்து ஆயர்குலக் கண்ணன் ஒடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்
pukku Kannan plunged into the water; kāyum nīr containing the poisonous venom of Kaliyan snake; eṟi and then climbed on the tree called; kaṭampu kadamba on the shore; paṇattil and jumped on the hood of; tīya the cruel; kāl̤iyaṉ Kaliyan snake; pāyntu āṭi He danced fiercely; cilampu ārkka and His anklets made sounds; kuḻal ūti He played melodious music; veyiṉ with His flute; vittakaṉāy niṉṟa the clever One; āyaṉ vantu Kannan of Ayarpadi, who come; appūcci kāṭṭukiṉṟāṉ as a goblin and frightens us; ammaṉe! oh my god! to say that I am scared; appūcci kāṭṭukiṉṟāṉ He comes as a goblin and frightens us