(ராமன் -கமல பத்ராஜன் -கண் அழகு உடையவன் -கண்ணன் என்னலாமே )
கொங்கை வன் கூனி சொல் கொண்டு குவலயத் துங்க கரியும் பரியும் இராச்சியமும் எங்கும் பரதற்கு அருளி வான் கானடை அம் கண்ணன் அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1-8–
பதவுரை
கொங்கை–(முதுகில்) முலை யெழும்பினாற் போன்ற வல்–பலிஷ்டமான கூனி–கூனை யுடையளான மந்தரையினுடைய சொல்–சொல்லை கொண்டு–அங்கீகரித்து