பதக முதலை வாய்ப் பட்ட களிறு கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன உதவப் புள்ளூர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப் பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப் பூச்சி காட்டுகின்றான் -2-1-9– –
பதவுரை
பதகம்–பாதிக்குந் தன்மையை யுடைய முதலை–முதலையின் வாய்–வாயிலே பட்ட–அகப்பட்ட களிறு–ஸ்ரீகஜேந்த்ராழ்வான் கதறி–(தன் வருத்தந்தோன்றக்) கூப்பிட்டு கை கூப்பி–கையைக் குவித்துக் கொண்டு