PAT 2.1.4

கஞ்சனை மாளப் புரட்டியவன்

121 இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர் *
மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி * அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட *
அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
121 iruṭṭil piṟantu poy * ezhai val āyar *
maruṭṭait tavirppittu * vaṉ kañcaṉ māl̤ap **
puraṭṭi annāl̤ ĕṅkal̤ * pūmpaṭṭuk kŏṇṭa *
araṭṭaṉ vantu appūcci kāṭṭukiṉṟāṉ * ammaṉe appūcci kāṭṭukiṉṟāṉ (4)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

121. The lord Kannan was born in the night and raised in a poor cowherd village. He killed the evil king Kamsan and destroyed the suffering of the cowherds. He stole our pretty silk dresses. He comes mischievously as a goblin and frightens us, That dear one comes and frightens us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருட்டில் பிறந்து இருள் மிக்க இரவு நேரத்தில் பிறந்து; போய் அப்போதே வேறிடம் போய்; ஏழை எளிமையான; வல் ஆயர் வல்லமையுடைய யாதவர்களின்; மருட்டைத் தவிர்ப்பித்து மருட்சியை அகற்றிய; வன் கஞ்சன் மாள கொடிய கம்சன் மாண்டிட; புரட்டி அவனை புரட்டிய; அந்நாள் அந்த நாளில்; எங்கள் எங்கள்; பூம்பட்டுக் கொண்ட பட்டாடைகளைக் கவர்ந்த; அரட்டன் வந்து குறும்புக்காரன் ஓடி வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்
iruṭṭil piṟantu He was born on a dark night; poy and immediately moved to another place; val āyar He was raised among Yadavas who led a; eḻai simple life; puraṭṭi He tossed and; vaṉ kañcaṉ māl̤a killed the cruel Kamsan; maruṭṭait tavirppittu and removed Yadavas' suffering; annāl̤ once; pūmpaṭṭuk kŏṇṭa He stole pretty silk dresses of; ĕṅkal̤ ours; araṭṭaṉ vantu the mischievous One, please come; appūcci kāṭṭukiṉṟāṉ as a goblin and frightens us; ammaṉe! oh my god! to say that I am scared; appūcci kāṭṭukiṉṟāṉ He comes as a goblin and frightens us