PAT 2.1.2

பார்த்தன் தேர்மேல் நின்ற கண்ணன்

119 மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும் *
பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய * பார்த்தன்
சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற * செங்கண்
அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
119
malaipurai thOL mannavarum * māradharum maRRum *
palar kulaiya * nooRRuvarum pattazhiya *
pārththan silai vaLaiyath * thiNthErmEl munninRa *
seNGgaN alavalai vandhu appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 2.

Ragam

பந்துவராளி

Thalam

ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

119. He is the One who made many kings and warriors with arms strong as mountains tremble and destroyed the hundred Kauravās foes. When Arjunā bent his bow, He stood with him in front as the charioteer in the Bhārathā war. He is Kannan, who made the red- eyed Parthā (Arjunā) triumph. He comes as a goblin and frightens us, That dear mischievous one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலை புரை மலை போன்ற; தோள் தோள்களை உடைய; மன்னவரும் மன்னவர்களும்; மாரதரும் பீஷ்மர் போன்ற மஹா ரதர்களும்; மற்றும் பலர் மற்றும் பலரும்; குலைய நடுங்கிப் போகும்படி செய்து; நூற்றுவரும் கௌரவர்கள் நூறு பேரும்; பட்டழிய வேரற்ற மரம்போல் அழிந்திட; பார்த்தன் அர்ஜுனனின்; சிலை வளைய வில் வளைந்திட; திண் தேர்மேல் திண்மையான தேரின்மேல்; முன்நின்ற முன்னே சாரதியாக நின்று; செங்கண் சிவந்த கண்களையுடைய பார்த்தனின்; அலவலை வெற்றியை போற்றியவனான கண்ணன்; வந்து என்னிடம் வந்து; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்