PAT 2.1.5

கடைதாம்புக்கு ஆப்புண்டவன்

122 சேப்பூண்ட சாடுசிதறி * திருடிநெய்க்கு
ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைத்தாம்பால் *
சோப்பூண்டு துள்ளித்துடிக்கத்துடிக்க * அன்று
ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சிகாட்டுகின்றான்.
122
sEppooNda * sādu sidhaRi *
thirudi n^eykku āppooNdu * nandhan manaivi kadai thāmbāl *
sOppooNdu thuLLi * thudikkath thudikka *
anRu āppooNdān appoochchi kāttukinRān *
ammanE! appoochchi kāttukinRān. 5.

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

122. He kicked Sakatāsuran who came as a cart yoked to bulls and killed him. The cowherd women tied the dear child by a rope used to churn yogurt. Nanda's wife Yashodā beat him for stealing butter and tied him to a mortar. He comes as a goblin and frightens us, that dear one comes as a goblin and frightens us.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேப் பூண்ட எருதுகள் பூட்டிய சகடத்தை; சாடு சிதறி சக்கரம் சிதறிபோகும்படி உதைத்து; திருடி நெய்க்கு நெய்க்கு ஆசைப்பட்டு திருடியதால்; ஆப்பூண்டு ஆய்ச்சியரால் கட்டப்பட்டு; நந்தன் மனைவி நந்தகோபன் தேவியான யசோதை; கடை தாம்பால் தயிர் கடையும் தாம்புக் கயிறால்; சோப்பூண்டு அடிவாங்கி; துள்ளித் துடிக்க துடிக்க வலியினால் துள்ளித் துடித்த; அன்று அந்த பிள்ளைப்பருவதிலே; ஆப்பூண்டான் கட்டுண்டிருந்தவன்; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்; அம்மனே! அம்மாடி! எனக்கு பயமா இருக்கே என்று சொல்ல; அப்பூச்சி காட்டுகின்றான் பூச்சி காட்டி விளயாடுகிறான்