Chapter 3

Yashoda's lullaby for Kannan - (மாணிக்கம் கட்டி)

தாலப் பருவம்
Yashoda's lullaby for Kannan - (மாணிக்கம் கட்டி)
These hymns are a good guide for women of today who’ve borne and raised children! Shouldn’t lullabies be all about Him as well!
Songs on Him can be sung as lullabies as well! It is for sure that those children who grow up listening to such lullabies will receive His blessings. Divine Mother Yashoda says that those children will never experience pain and suffering in their life.
மக்கட் பேறு பெற்று மகிழும் இக்காலப் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி! தாலாட்டுப் பாடலிலும் பகவத் விஷயம் கலந்திருக்க வேண்டாமா!
இப்பாடல்களையே தாலாட்டுப் பாடல்களாகப் பாடலாமே! இப்பாடல்களைக் கேட்டுப் பழகும் குழந்தைகள் பகவானின் திருவருளைப் பெருவது திண்ணம். அவர்களுக்கு வாழ்வில் துன்பமே ஏற்படாது என்கிறாள் தெய்வ நங்கை யசோதை!
Verses: 44 to 53
Grammar: Kaliththāḻisai, Taravu Kocchakakkalippā / கலித்தாழிசை, தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Getting freed from all hurdles
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.3.1

44 மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி *
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் *
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான் *
மாணிக்குறளனே! தாலேலோ வையமளந்தானே! தாலேலோ. (2)
44 ## மாணிக்கம் கட்டி * வயிரம் இடை கட்டி *
ஆணிப் பொன்னால் செய்த * வண்ணச் சிறுத்தொட்டில் **
பேணி உனக்குப் * பிரமன் விடுதந்தான் *
மாணிக் குறளனே தாலேலோ * வையம் அளந்தானே தாலேலோ (1)
44 ## māṇikkam kaṭṭi * vayiram iṭai kaṭṭi *
āṇip pŏṉṉāl cĕyta * vaṇṇac ciṟuttŏṭṭil **
peṇi uṉakkup * piramaṉ viṭutantāṉ *
māṇik kuṟal̤aṉe tālelo * vaiyam al̤antāṉe tālelo (1)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.1

Simple Translation

44. O lord! a beautiful, tiny golden cradle studded with rubies and diamonds Nānmuhan (Brahmā) made and sent it to you with his love. (It's surprising to see a son, petting his father, who is in his cradle. ) Thālelo (sleep peacefully), you took the form of a dwarf (Vāmanā) and scaled the earth and the sky, (as ThrivikRāman) thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாணிக்கம் கட்டி மாணிக்கங்களைக் கட்டி; வயிரம் இடைகட்டி இடையே வைரத்தைப் பொருத்தி; ஆணிப் பொன்னால் செய்த தூய தங்கத்தால் செய்த; வண்ணச் சிறுத்தொட்டில் அழகிய சிறுத்தொட்டிலை; பேணி உனக்கு ஆசையுடன் உனக்கு; பிரமன் விடுதந்தான் பிரம்மா அனுப்பி வைத்தான்; மாணிக் குறளனே! மிகச்சிறு உருவமெடுத்த வாமனனே!; தாலேலோ! கண் வளராய்!; வையம் அளந்தானே! உலகளந்த திருவிக்கிரமனே!; தாலேலோ! கண் வளராய்!
vaṇṇac ciṟuttŏṭṭil small beautiful cradle; āṇip pŏṉṉāl cĕyta made with pure gold; māṇikkam kaṭṭi studded with rubies; vayiram iṭaikaṭṭi with diamonds placed in between; piramaṉ viṭutantāṉ sent by Brahma; peṇi uṉakku with affection for you; māṇik kuṟal̤aṉe! o Vamana who took a tiny form!; tālelo! close your eyes!; vaiyam al̤antāṉe! o Tiruvikrama who encompassed the world!; tālelo! close your eyes!

PAT 1.3.2

45 உடையார்கனமணியோடு ஒண்மாதுளம்பூ *
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு *
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் *
உடையாய்! அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே! தாலேலோ.
45 உடையார் கனமணியோடு * ஒண் மாதுளம்பூ *
இடை விரவிக் கோத்த * எழில் தெழ்கினோடும் **
விடை ஏறு காபாலி * ஈசன் விடுதந்தான் *
உடையாய் அழேல் அழேல் தாலேலோ * உலகம் அளந்தானே தாலேலோ (2)
45 uṭaiyār kaṉamaṇiyoṭu * ŏṇ mātul̤ampū *
iṭai viravik kotta * ĕzhil tĕzhkiṉoṭum **
viṭai eṟu kāpāli * īcaṉ viṭutantāṉ *
uṭaiyāy azhel azhel tālelo * ulakam al̤antāṉe tālelo (2)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.2

Simple Translation

45. Kabāli, Shivā (His grandson) the bull-rider sent you this girdle of golden beads alternating with beautiful pear-shaped drops, perfectly befitting your waist, as a gratitude for removing his curse. Do not cry, do not cry. Sleep (thālelo), You measured the world (as ThrivikRaman) for Mahābali, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உடையார் இடுப்புக்குத்தகுந்த; கனமணியோடு பொன்மணியோடு; இடை விரவிக் இடை இடையே கலந்து; கோத்த கோர்க்கப்பட்ட; எழில் தெழ்கினோடு எழில் மிக்க சரிகையோடு; ஒண் அழகிய; மாதுளம்பூ மாதுளம்பூ போன்ற சங்கிலியையும்; விடை ஏறு காபாலி ரிஷப வாகன காபாலியான; ஈசன் விடுதந்தான் ருத்ரன் உனக்கு அனுப்பி வைத்தான்; உடையாய்! அனைத்தையும் உடையவனே!; அழேல் அழேல் அழாதே அழாதே!; தாலேலோ! கண் வளராய்!; உலகம் அளந்தானே! உலகளந்த திருவிக்கிரமனே!; தாலேலோ! கண் வளராய்!
viṭai eṟu kāpāli Kabali on a Rishaba vahana; īcaṉ viṭutantāṉ Rudra sent you this; ŏṇ beautiful; iṭai viravik girdle; kotta adorned; kaṉamaṇiyoṭu with a golden bell; ĕḻil tĕḻkiṉoṭu with elegant lace; uṭaiyār for His broad waist; mātul̤ampū like the garland of the Maathulampoo flower; uṭaiyāy! o possessor of everything!; aḻel aḻel do not cry, do not cry!; tālelo! close your eyes!; ulakam al̤antāṉe! o Tiruvikrama who encompassed the world!; tālelo! close your eyes!

PAT 1.3.3

46 என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்கு *
சந்தமழகிய தாமரைத்தாளர்க்கு *
இந்திரன்தானும் எழிலுடைக்கிண்கிணி *
தந்துஉவனாய்நின்றான்தாலேலோ தாமரைக்கண்ணனே! தாலேலோ.
46 என் தம்பிரானார் * எழில் திருமார்வர்க்கு *
சந்தம் அழகிய * தாமரைத் தாளர்க்கு **
இந்திரன் தானும் * எழில் உடைக் கிண்கிணி *
தந்து உவனாய் நின்றான் தாலேலோ * தாமரைக் கண்ணனே தாலேலோ (3)
46 ĕṉ tampirāṉār * ĕzhil tirumārvarkku *
cantam azhakiya * tāmarait tāl̤arkku **
intiraṉ tāṉum * ĕzhil uṭaik kiṇkiṇi *
tantu uvaṉāy niṉṟāṉ tālelo * tāmaraik kaṇṇaṉe tālelo (3)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.3

Simple Translation

46. O dear lord with the goddess Lakshmi on your handsome chest, For You, Indra, the king of the gods brought musical anklets for your lovely fragrant lotus feet, gave them to you and stood at a respectable distance, thālelo. Your eyes are as beautiful as lotuses, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் தம் பிரானார் எங்களின் பிரானே!; எழில் திருமார்வர்க்குச் அழகிய திருமார்பையுடைய; சந்தம் அழகிய அழகிய நிறத்தையுடைய; தாமரை தாமரைமலர்ப்; தாளர்க்கு பாதங்களையுடைய எம்பிரானே!; இந்திரன் தானும் தேவேந்திரனும் தன் பங்கிற்கு; எழில் உடைக் கிண்கிணி எழிலார்ந்த கிண்கிணியை; தந்து உவனாய் கொண்டு வந்துகொடுத்த அவன்; நின்றான் தாலேலோ பணிவன்புடன் நின்றான்; தாலேலோ கண் வளராய்; தாமரைக் கண்ணனே! தாமரை போன்ற கண்ணழகனே!; தாலேலோ! கண் வளராய்!
intiraṉ tāṉum Indra, the king of gods for his share; tantu uvaṉāy has brougth with him; ĕḻil uṭaik kiṇkiṇi musical anklets; tāmarai for His lotus-like; tāl̤arkku feet; ĕṉ tam pirāṉār our Lord!; ĕḻil tirumārvarkkuc One with beautiful chest; cantam aḻakiya One with beatiful complexion; niṉṟāṉ tālelo Indra stood with respect and reverance; tālelo close your eyes!; tāmaraik kaṇṇaṉe! One with eyes as beautiful as the lotus!; tālelo! close your eyes!

PAT 1.3.4

47 சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் *
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் *
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் *
செங்கண்கருமுகிலே! தாலேலோ தேவகிசிங்கமே! தாலேலோ.
47 சங்கின் வலம்புரியும் * சேவடிக் கிண்கிணியும் *
அங்கைச் சரிவளையும் * நாணும் அரைத்தொடரும் **
அங்கண் விசும்பில் * அமரர்கள் போத்தந்தார் *
செங்கண் கருமுகிலே தாலேலோ * தேவகி சிங்கமே தாலேலோ (4)
47 caṅkiṉ valampuriyum * cevaṭik kiṇkiṇiyum *
aṅkaic carival̤aiyum * nāṇum araittŏṭarum **
aṅkaṇ vicumpil * amararkal̤ pottantār *
cĕṅkaṇ karumukile tālelo * tevaki ciṅkame tālelo (4)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.4

Simple Translation

47. The gods in the sky (Devās) came and gave a valampuri conch, a musical anklet (kolusu) for your divine feet, round bangles for your beautiful hands, a sacred thread for your chest, and a waistband. Your eyes are lovely red and your body is dark as a cloud. O lion-like son of Devaki, thālelo, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கின் சங்குகளில் சிறந்த; வலம்புரியும் வலம்புரிச் சங்கையும்; சேவடிக் கிண்கிணியும் சிவந்த திருவடி சதங்கையும்; அங்கைச் சரிவளையும் அழகிய கைவளையல்களும்; நாணும் திருமார்வில் நாணையும்; அரைத்தொடரும் அரையில்அரைஞாணும்; அமரர்கள் போத்தந்தார் தேவர்கள் அனுப்பினார்கள்; செங்கண் சிவந்த கண்களையுடைய; கருமுகிலே! கருத்த திருமேனி அழகனே!; தாலேலோ! கண் வளராய்!; தேவகி சிங்கமே! தேவகி பெற்ற சிங்கக்குட்டியே!; தாலேலோ கண் வளராய்!
amararkal̤ pottantār Devas gifted; caṅkiṉ the best among conch shells; valampuriyum Valamburi conch; cevaṭik kiṇkiṇiyum anklets for His red sacred feet; aṅkaic carival̤aiyum beautiful bangles; nāṇum sacred thread for His divine chest; araittŏṭarum a waistband; cĕṅkaṇ One with divine eyes; karumukile! O Beautiful, dark-skinned One; tālelo! close your eyes!; tevaki ciṅkame! Devaki's lion cub!; tālelo close your eyes!

PAT 1.3.5

48 எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்று *
அழகியஐம்படையும் ஆரமும்கொண்டு *
வழுவில்கொடையான் வயிச்சிராவணன் *
தொழுதுஉவனாய்நின்றான்தாலேலோ தூமணிவண்ணனே! தாலேலோ.
48 எழில் ஆர் திருமார்வுக்கு * ஏற்கும் இவை என்று *
அழகிய ஐம்படையும் * ஆரமும் கொண்டு **
வழு இல் கொடையான் * வயிச்சிராவணன் *
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ * தூமணி வண்ணனே தாலேலோ (5)
48 ĕzhil ār tirumārvukku * eṟkum ivai ĕṉṟu *
azhakiya aimpaṭaiyum * āramum kŏṇṭu **
vazhu il kŏṭaiyāṉ * vayiccirāvaṇaṉ *
tŏzhutu uvaṉāy niṉṟāṉ tālelo * tūmaṇi vaṇṇaṉe tālelo (5)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.5

Simple Translation

48. Kuberan, VaishRavanan (who signifies riches), the faultless and bounteous brought You a necklace and aimbadaithali (an ornament worn on the chest) that would fit your beautiful chest where Lakshmi resides. He offered them to You with worshipful reverence. Sleep! (Thālelo) Your body is as beautiful as a blue sapphire, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எழில் ஆர் திருமார்வுக்கு அழகிய திருமார்புக்கு; ஏற்கும் இவை என்று ஏற்றவை இவை என்று; அழகிய ஐம்படையும் அழகிய பஞ்சாயுதங்களையும்; ஆரமும் கொண்டு சங்கிலியும்; வழு இல் கொடையான் குற்றமற்ற தானத்தில் சிறந்த; வயிச்சிராவணன் குபேரன் கொண்டு வந்து கொடுத்து; தொழுது உவனாய் நின்றான் பணிவன்புடன் நின்றான்; தாலேலோ! கண் வளராய்!; தூமணி வண்ணனே! தூய நீலமணி போன்றவனே!; தாலேலோ! கண் வளராய்!
vaḻu il kŏṭaiyāṉ faultless and a great donor; vayicciravaṇaṉ Kubera brought and gave; āramum kŏṇṭu a necklace; eṟkum ivai ĕṉṟu suited for; ĕḻil ār tirumārvukku for that divine chest; aḻakiya aimpaṭaiyum and beautiful five weapons; tŏḻutu uvaṉāy niṉṟāṉ and stood with reverence and respect; tālelo! close your eyes!; tūmaṇi vaṇṇaṉe! o pure blue gem!; tālelo! close your eyes!

PAT 1.3.6

49 ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும் *
சாதிப்பவளமும் சந்தச்சரிவளையும் *
மாதக்கவென்று வருணன்விடுதந்தான் *
சோதிச்சுடர்முடியாய்! தாலேலோ சுந்தரத்தோளனே! தாலேலோ.
49 ஓதக் கடலின் * ஒளிமுத்தின் ஆரமும் *
சாதிப் பவளமும் * சந்தச் சரிவளையும் **
மா தக்க என்று * வருணன் விடுதந்தான் *
சோதிச் சுடர் முடியாய் தாலேலோ * சுந்தரத் தோளனே தாலேலோ (6)
49 otak kaṭaliṉ * ŏl̤imuttiṉ āramum *
cātip paval̤amum * cantac carival̤aiyum **
mā takka ĕṉṟu * varuṇaṉ viṭutantāṉ *
cotic cuṭar muṭiyāy tālelo * cuntarat tol̤aṉe tālelo (6)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.6

Simple Translation

49. Varunan sent You a shining pearl necklace, precious quality coral and beautiful bangles made of conches, from the roaring ocean, thinking these would suit You. You wear a shining crown (Thālelo) You have handsome arms, sleep! (Thālelo)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓதக் கடலின் அலைவீசும் கடலில் உண்டான; ஒளி முத்தின் ஆரமும் அழகிய முத்தாரமும்; சாதிப் பவளமும் சிறந்த பவழமும்; சந்தச் சரிவளையும் அழகிய கை வளையல்களையும்; மா தக்க என்று விலைமதிக்கத்தக்கவை என்று; வருணன் விடுதந்தான் வருணன் அனுப்பினான்; சோதிச் சுடர் ஒளி மிகுந்த; முடியாய்! கிரீடத்தையுடைய; கண்ணனே தாலேலோ! கண்ணனே கண் வளராய்!; சுந்தரத் தோளனே! அழகிய தோள்களையுடையவனே!; தாலேலோ! கண் வளராய்!
varuṇaṉ viṭutantāṉ Varuna sent; cantac carival̤aiyum the beautiful armlets that were; mā takka ĕṉṟu highly valued; cātip paval̤amum the finest coral; ŏl̤i muttiṉ āramum the exquisite pearl jewellry; otak kaṭaliṉ formed in the undulating sea; muṭiyāy! the one with the diadem; cotic cuṭar radiant with light; kaṇṇaṉe tālelo! o Kannan, close your eyes!; cuntarat tol̤aṉe! the one with graceful shoulders!; tālelo! close your eyes!

PAT 1.3.7

50 கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும் *
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் *
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள் *
கோனே! அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே! தாலேலோ.
50 கான் ஆர் நறுந்துழாய் * கைசெய்த கண்ணியும் *
வான் ஆர் செழுஞ்சோலைக் * கற்பகத்தின் வாசிகையும் **
தேன் ஆர் மலர்மேல் * திருமங்கை போத்தந்தாள் *
கோனே அழேல் அழேல் தாலேலோ * குடந்தைக் கிடந்தானே தாலேலோ (7)
50 kāṉ ār naṟuntuzhāy * kaicĕyta kaṇṇiyum *
vāṉ ār cĕzhuñcolaik * kaṟpakattiṉ vācikaiyum **
teṉ ār malarmel * tirumaṅkai pottantāl̤ *
koṉe azhel azhel tālelo * kuṭantaik kiṭantāṉe tālelo (7)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.7

Divya Desam

Simple Translation

50. The divine Lakshmi seated on a lotus that drips honey sent you a garland of forest thulasi and a garland of karpaga flowers that bloomed in the fertile grove in the sky to decorate your forehead. O king, do not cry, do not cry, thālelo, you rest on Adishesha in Kudandai (Kumbakonam), thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் ஆர் மலர் மேல் தேன் நிறைந்த மலர்மேல்; திருமங்கை உறைகின்ற பெரிய பிராட்டியார்; கான் ஆர் காட்டில் வளர்ந்துள்ள; நறுந்துழாய் மணம்மிக்க துளசியால்; கைசெய்த கண்ணியும் தொடுக்கப்பட்ட மாலையும்; வான் ஆர் செழுஞ்சோலை வான் உலகத்தில்; செழுஞ்சோலை நிறைந்து வளர்ந்துள்ள; கற்பகத்தின் கற்பக மரத்தின்; வாசிகையும் பூக்களால் தொடுத்த; மாலையும் மாலையும்; போத்தந்தாள் அனுப்பினாள்; கோனே! அழேல் அழேல் கோமானே அழாதே; தாலேலோ! கண் வளராய்!; குடந்தை திருக்குடந்தையில்; கிடந்தானே! உறங்கும் பிரானே!; தாலேலோ! கண் வளராய்!
tirumaṅkai Goddess Laskhmi who lives; teṉ ār malar mel on the flower filled with honey; pottantāl̤ sent; kaicĕyta kaṇṇiyum garland made of; naṟuntuḻāy Tulasi with its fragrance; kāṉ ār grown in the forest; mālaiyum garland; vācikaiyum made with flowers; kaṟpakattiṉ from the tree of wishes; cĕḻuñcolai grown; vāṉ ār cĕḻuñcolai in the heavenly realm; koṉe! aḻel aḻel o Lord, don’t cry; tālelo! o eye-opener!; kiṭantāṉe! the One who is sleeping; kuṭantai in Thirukkudanthai; tālelo! o eye-opener!

PAT 1.3.8

51 கச்சொடுபொற்சுரிகை காம்பு கனகவளை *
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ *
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் *
நச்சுமுலையுண்டாய்! தாலேலோ நாராயணா! அழேல்தாலேலோ.
51 கச்சொடு பொற்சுரிகை * காம்பு கனகவளை *
உச்சி மணிச்சுட்டி * ஒண்தாள் நிரைப் பொற்பூ **
அச்சுதனுக்கு என்று * அவனியாள் போத்தந்தாள் *
நச்சுமுலை உண்டாய் தாலேலோ * நாராயணா அழேல் தாலேலோ (8)
51 kaccŏṭu pŏṟcurikai * kāmpu kaṉakaval̤ai *
ucci maṇiccuṭṭi * ŏṇtāl̤ niraip pŏṟpū **
accutaṉukku ĕṉṟu * avaṉiyāl̤ pottantāl̤ *
naccumulai uṇṭāy tālelo * nārāyaṇā azhel tālelo (8)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.8

Simple Translation

51. O Achuda! The earth goddess sent a dress, a small golden sword with a handle, golden bangles, a diamond ornament for your forehead and a shining golden flower on a stalk for you. You drank the poisonous milk from the breast of Putanā, thālelo. O Nārāyanā! Do not cry, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கச்சொடு இடுப்புப் பட்டையும்; பொற்சுரிகை பொன்னால் செய்த உடைவாளையும்; காம்பு கரையுடன் கூடின சேலையும்; கனகவளை கனகவளைகளும்; உச்சி மணிச்சுட்டி உச்சியில் மணிச் சுட்டியும்; ஒண்தாள் நிரைப்பொற்பூ அழகிய காம்புகளுடைய; பொற்பூ தங்கப்பூக்களையும்; அச்சுதனுக்கு என்று கண்ணாபிரானுக்குக் கொடுப்பீர் என்று; அவனியாள் போத்தந்தாள் பூமிப்பிராட்டி அனுப்பினாள்; நச்சுமுலை பூதனையின்; உண்டாய்! விஷப்பாலை அருந்தியவனே!; தாலேலோ! நாராயணா! கண் வளர்வாய் நாராயணா!; அழேல் தாலேலோ! அழாமல் கண் வளர்வாய்!
avaṉiyāl̤ pottantāl̤ the earth Goddess sent; pŏṟcurikai the golden sword; kaccŏṭu for the waist; kāmpu the garment with; kaṉakaval̤ai the golden threads; ucci maṇiccuṭṭi the jewel for His forehead; pŏṟpū golden flowers; ŏṇtāl̤ niraippŏṟpū with beautiful stalks; accutaṉukku ĕṉṟu to be given to the Kannan; uṇṭāy! o one who drank poison and killed; naccumulai Putanā; tālelo! nārāyaṇā! open your eyes, Narayana!; aḻel tālelo! open your eyes without crying!

PAT 1.3.9

52 மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும் *
செய்யதடங்கண்ணுக்கு அஞ்சனமும்சிந்துரமும் *
வெய்யகலைப்பாகி கொண்டுஉவளாய்நின்றாள் *
ஐயா! அழேல்அழேல்தாலேலோ அரங்கத்தணையானே! தாலேலோ.
52 மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும் *
செய்ய தடங்கண்ணுக்கு * அஞ்சனமும் சிந்துரமும் **
வெய்ய கலைப்பாகி * கொண்டு உவளாய் நின்றாள் *
ஐயா அழேல் அழேல் தாலேலோ * அரங்கத்து அணையானே தாலேலோ (9)
52 mĕy timirum nāṉap pŏṭiyŏṭu mañcal̤um *
cĕyya taṭaṅkaṇṇukku * añcaṉamum cinturamum **
vĕyya kalaippāki * kŏṇṭu uval̤āy niṉṟāl̤ *
aiyā azhel azhel tālelo * araṅkattu aṇaiyāṉe tālelo (9)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.9

Divya Desam

Simple Translation

52. Durga, the goddess riding on a heroic deer sent you soft, fragrant powder with turmeric to bathe, kohl for your beautiful, large eyes and red kumkum to adorn Your forehead. O dear child, do not cry, do not cry. Thālelo, you rest on a snake bed in Srirangam, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெய்திமிரும் திருமேனியில் பூசத்தகுந்த; நான பொடியோடு கஸ்தூரி சந்தனம் போன்ற; பொடியோடு வாசனைப் பொடியோடு; மஞ்சளும் மஞ்சளும்; செய்ய தடம் சிவந்த விசாலமான; கண்ணுக்கு கண்களுக்கு; அஞ்சனமும் மையும்; சிந்தூரமும் நெற்றிக்கு சிந்தூரமும்; வெய்ய வெவ்விய; கலைப்பாகி ஆண்மானை வாகனமாக உடைய துர்க்கை; கொண்டு எடுத்துக் கொண்டு வந்து; உவளாய் நின்றாள் பணிவன்புடன் நின்றாள்; ஐயா! அழேல் அழேல் ஸ்வாமியே அழாதே; தாலேலோ! கண் வளராய்!; அரங்கத்து திருவரங்கத்தில்; அணையானே! அரவணையானே!; தாலேலோ! கண் வளராய்!
kalaippāki Durga with her male deer as her consort; pŏṭiyoṭu brought fragrant powder; nāṉa pŏṭiyoṭu like musk and sandalwood; mañcal̤um with turmeric; mĕytimirum worthy of applying in the divine chest; añcaṉamum brought kajal; kaṇṇukku for eyes; cĕyya taṭam that are beautiful and wide; cintūramum brought vermilion for the forehead; vĕyya on a hot day; kŏṇṭu placed them before You and; uval̤āy niṉṟāl̤ stood with respect and reverance; aiyā! aḻel aḻel o Lord, do not cry!; tālelo! close your eyes!; aṇaiyāṉe! One who dwells !; araṅkattu in Thiruvārangam; tālelo! close your eyes!

PAT 1.3.10

53 வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட *
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய *
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் *
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2)
53 ## வஞ்சனையால் வந்த * பேய்ச்சி முலை உண்ட *
அஞ்சன வண்ணனை * ஆய்ச்சி தாலாட்டிய **
செஞ்சொல் மறையவர் சேர் * புதுவைப் பட்டன் சொல் *
எஞ்சாமை வல்லவர்க்கு * இல்லை இடர்தானே (10)
53 ## vañcaṉaiyāl vanta * peycci mulai uṇṭa *
añcaṉa vaṇṇaṉai * āycci tālāṭṭiya **
cĕñcŏl maṟaiyavar cer * putuvaip paṭṭaṉ cŏl *
ĕñcāmai vallavarkku * illai iṭartāṉe (10)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.10

Simple Translation

53. Yashodā sang lullaby for the kohl-colored Kannan, who drank milk from the cunning Poothana's breasts when she came to kill Him. The Pattan of Puduvai (Periyazhwar) has composed songs she sang. Those who recite these hymns fully, will be free of all difficulties.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வஞ்சனையால் வஞ்சனையாக; வந்த தாய்வேடத்தில் வந்த; பேய்ச்சி பேயான பூதனையிடம்; முலை உண்ட தாய்ப்பாலை உண்ட; அஞ்சன வண்ணனை கருநிறக்கண்ணனை; ஆய்ச்சி யசோதைப்பிராட்டி; தாலாட்டிய தாலாட்டிய விதத்தை; செஞ்சொல் சிறந்த சொற்களையுடைய; மறையவர் சேர் வேத விற்பன்னர்களின் வர்த்திக்கிற; புதுவைப்பட்டன் ஸ்ரீவில்லிபுத்தூரார் அருளிச்செய்த; சொல் பாசுரங்களை; எஞ்சாமை வல்லவர்க்கு குறைவில்லாமல் ஓதுபவர்களுக்கு; இல்லை இடர் தானே துன்பம் இல்லையே!
āycci mother Yashoda; tālāṭṭiya sang lullaby to; añcaṉa vaṇṇaṉai Kannan, who has black complexion; mulai uṇṭa He drank the breastmilk of; peycci putanā; vanta who came as a mother; vañcaṉaiyāl and tried to deceit Him; ĕñcāmai vallavarkku those who recite without fail; cŏl these pasurams (poems); putuvaippaṭṭaṉ written by Śrīvilliputtūrār (Periyāzhvār); cĕñcŏl with excellent words; maṟaiyavar cer in line with Vedic scholars; illai iṭar tāṉe there is no suffering