PAT 1.3.4

அமரர் தந்த அரைஞாண்

47 சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும் *
அங்கைச்சரிவளையும் நாணும்அரைத்தொடரும் *
அங்கண்விசும்பில் அமரர்கள்போத்தந்தார் *
செங்கண்கருமுகிலே! தாலேலோ தேவகிசிங்கமே! தாலேலோ.
47 caṅkiṉ valampuriyum * cevaṭik kiṇkiṇiyum *
aṅkaic carival̤aiyum * nāṇum araittŏṭarum **
aṅkaṇ vicumpil * amararkal̤ pottantār *
cĕṅkaṇ karumukile tālelo * tevaki ciṅkame tālelo (4)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.4

Simple Translation

47. The gods in the sky (Devās) came and gave a valampuri conch, a musical anklet (kolusu) for your divine feet, round bangles for your beautiful hands, a sacred thread for your chest, and a waistband. Your eyes are lovely red and your body is dark as a cloud. O lion-like son of Devaki, thālelo, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சங்கின் சங்குகளில் சிறந்த; வலம்புரியும் வலம்புரிச் சங்கையும்; சேவடிக் கிண்கிணியும் சிவந்த திருவடி சதங்கையும்; அங்கைச் சரிவளையும் அழகிய கைவளையல்களும்; நாணும் திருமார்வில் நாணையும்; அரைத்தொடரும் அரையில்அரைஞாணும்; அமரர்கள் போத்தந்தார் தேவர்கள் அனுப்பினார்கள்; செங்கண் சிவந்த கண்களையுடைய; கருமுகிலே! கருத்த திருமேனி அழகனே!; தாலேலோ! கண் வளராய்!; தேவகி சிங்கமே! தேவகி பெற்ற சிங்கக்குட்டியே!; தாலேலோ கண் வளராய்!
amararkal̤ pottantār Devas gifted; caṅkiṉ the best among conch shells; valampuriyum Valamburi conch; cevaṭik kiṇkiṇiyum anklets for His red sacred feet; aṅkaic carival̤aiyum beautiful bangles; nāṇum sacred thread for His divine chest; araittŏṭarum a waistband; cĕṅkaṇ One with divine eyes; karumukile! O Beautiful, dark-skinned One; tālelo! close your eyes!; tevaki ciṅkame! Devaki's lion cub!; tālelo close your eyes!