PAT 1.3.7

திருமங்கை அனுப்பிய திருத்துழாய் மாலை

50 கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும் *
வானார்செழுஞ்சோலைக் கற்பகத்தின்வாசிகையும் *
தேனார்மலர்மேல் திருமங்கைபோத்தந்தாள் *
கோனே! அழேல்அழேல்தாலேலோ குடந்தைக்கிடந்தானே! தாலேலோ.
50 kāṉ ār naṟuntuzhāy * kaicĕyta kaṇṇiyum *
vāṉ ār cĕzhuñcolaik * kaṟpakattiṉ vācikaiyum **
teṉ ār malarmel * tirumaṅkai pottantāl̤ *
koṉe azhel azhel tālelo * kuṭantaik kiṭantāṉe tālelo (7)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.7

Divya Desam

Simple Translation

50. The divine Lakshmi seated on a lotus that drips honey sent you a garland of forest thulasi and a garland of karpaga flowers that bloomed in the fertile grove in the sky to decorate your forehead. O king, do not cry, do not cry, thālelo, you rest on Adishesha in Kudandai (Kumbakonam), thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் ஆர் மலர் மேல் தேன் நிறைந்த மலர்மேல்; திருமங்கை உறைகின்ற பெரிய பிராட்டியார்; கான் ஆர் காட்டில் வளர்ந்துள்ள; நறுந்துழாய் மணம்மிக்க துளசியால்; கைசெய்த கண்ணியும் தொடுக்கப்பட்ட மாலையும்; வான் ஆர் செழுஞ்சோலை வான் உலகத்தில்; செழுஞ்சோலை நிறைந்து வளர்ந்துள்ள; கற்பகத்தின் கற்பக மரத்தின்; வாசிகையும் பூக்களால் தொடுத்த; மாலையும் மாலையும்; போத்தந்தாள் அனுப்பினாள்; கோனே! அழேல் அழேல் கோமானே அழாதே; தாலேலோ! கண் வளராய்!; குடந்தை திருக்குடந்தையில்; கிடந்தானே! உறங்கும் பிரானே!; தாலேலோ! கண் வளராய்!
tirumaṅkai Goddess Laskhmi who lives; teṉ ār malar mel on the flower filled with honey; pottantāl̤ sent; kaicĕyta kaṇṇiyum garland made of; naṟuntuḻāy Tulasi with its fragrance; kāṉ ār grown in the forest; mālaiyum garland; vācikaiyum made with flowers; kaṟpakattiṉ from the tree of wishes; cĕḻuñcolai grown; vāṉ ār cĕḻuñcolai in the heavenly realm; koṉe! aḻel aḻel o Lord, don’t cry; tālelo! o eye-opener!; kiṭantāṉe! the One who is sleeping; kuṭantai in Thirukkudanthai; tālelo! o eye-opener!