PAT 1.3.8

பூதேவி கொடுத்தனுப்பிய உச்சிமணிச் சுட்டி

51 கச்சொடுபொற்சுரிகை காம்பு கனகவளை *
உச்சிமணிச்சுட்டி ஒண்தாள்நிரைப்பொற்பூ *
அச்சுதனுக்கென்று அவனியாள்போத்தந்தாள் *
நச்சுமுலையுண்டாய்! தாலேலோ நாராயணா! அழேல்தாலேலோ.
51 kaccŏṭu pŏṟcurikai * kāmpu kaṉakaval̤ai *
ucci maṇiccuṭṭi * ŏṇtāl̤ niraip pŏṟpū **
accutaṉukku ĕṉṟu * avaṉiyāl̤ pottantāl̤ *
naccumulai uṇṭāy tālelo * nārāyaṇā azhel tālelo (8)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.8

Simple Translation

51. O Achuda! The earth goddess sent a dress, a small golden sword with a handle, golden bangles, a diamond ornament for your forehead and a shining golden flower on a stalk for you. You drank the poisonous milk from the breast of Putanā, thālelo. O Nārāyanā! Do not cry, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கச்சொடு இடுப்புப் பட்டையும்; பொற்சுரிகை பொன்னால் செய்த உடைவாளையும்; காம்பு கரையுடன் கூடின சேலையும்; கனகவளை கனகவளைகளும்; உச்சி மணிச்சுட்டி உச்சியில் மணிச் சுட்டியும்; ஒண்தாள் நிரைப்பொற்பூ அழகிய காம்புகளுடைய; பொற்பூ தங்கப்பூக்களையும்; அச்சுதனுக்கு என்று கண்ணாபிரானுக்குக் கொடுப்பீர் என்று; அவனியாள் போத்தந்தாள் பூமிப்பிராட்டி அனுப்பினாள்; நச்சுமுலை பூதனையின்; உண்டாய்! விஷப்பாலை அருந்தியவனே!; தாலேலோ! நாராயணா! கண் வளர்வாய் நாராயணா!; அழேல் தாலேலோ! அழாமல் கண் வளர்வாய்!
avaṉiyāl̤ pottantāl̤ the earth Goddess sent; pŏṟcurikai the golden sword; kaccŏṭu for the waist; kāmpu the garment with; kaṉakaval̤ai the golden threads; ucci maṇiccuṭṭi the jewel for His forehead; pŏṟpū golden flowers; ŏṇtāl̤ niraippŏṟpū with beautiful stalks; accutaṉukku ĕṉṟu to be given to the Kannan; uṇṭāy! o one who drank poison and killed; naccumulai Putanā; tālelo! nārāyaṇā! open your eyes, Narayana!; aḻel tālelo! open your eyes without crying!