PAT 1.3.10

இடரில்லை

53 வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்ட *
அஞ்சனவண்ணனை ஆய்ச்சிதாலாட்டிய *
செஞ்சொல்மறையவர்சேர் புதுவைப்பட்டன்சொல் *
எஞ்சாமைவல்லவர்க்கு இல்லைஇடர்தானே. (2)
53 ## vañcaṉaiyāl vanta * peycci mulai uṇṭa *
añcaṉa vaṇṇaṉai * āycci tālāṭṭiya **
cĕñcŏl maṟaiyavar cer * putuvaip paṭṭaṉ cŏl *
ĕñcāmai vallavarkku * illai iṭartāṉe (10)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.10

Simple Translation

53. Yashodā sang lullaby for the kohl-colored Kannan, who drank milk from the cunning Poothana's breasts when she came to kill Him. The Pattan of Puduvai (Periyazhwar) has composed songs she sang. Those who recite these hymns fully, will be free of all difficulties.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வஞ்சனையால் வஞ்சனையாக; வந்த தாய்வேடத்தில் வந்த; பேய்ச்சி பேயான பூதனையிடம்; முலை உண்ட தாய்ப்பாலை உண்ட; அஞ்சன வண்ணனை கருநிறக்கண்ணனை; ஆய்ச்சி யசோதைப்பிராட்டி; தாலாட்டிய தாலாட்டிய விதத்தை; செஞ்சொல் சிறந்த சொற்களையுடைய; மறையவர் சேர் வேத விற்பன்னர்களின் வர்த்திக்கிற; புதுவைப்பட்டன் ஸ்ரீவில்லிபுத்தூரார் அருளிச்செய்த; சொல் பாசுரங்களை; எஞ்சாமை வல்லவர்க்கு குறைவில்லாமல் ஓதுபவர்களுக்கு; இல்லை இடர் தானே துன்பம் இல்லையே!
āycci mother Yashoda; tālāṭṭiya sang lullaby to; añcaṉa vaṇṇaṉai Kannan, who has black complexion; mulai uṇṭa He drank the breastmilk of; peycci putanā; vanta who came as a mother; vañcaṉaiyāl and tried to deceit Him; ĕñcāmai vallavarkku those who recite without fail; cŏl these pasurams (poems); putuvaippaṭṭaṉ written by Śrīvilliputtūrār (Periyāzhvār); cĕñcŏl with excellent words; maṟaiyavar cer in line with Vedic scholars; illai iṭar tāṉe there is no suffering