PAT 1.3.2

அரன(சிவபெருமான்)ளித்த அரைவடம்

45 உடையார்கனமணியோடு ஒண்மாதுளம்பூ *
இடைவிரவிக்கோத்த எழில் தெழ்கினோடு *
விடையேறுகாபாலி ஈசன்விடுதந்தான் *
உடையாய்! அழேல்அழேல்தாலேலோ உலகமளந்தானே! தாலேலோ.
45 uṭaiyār kaṉamaṇiyoṭu * ŏṇ mātul̤ampū *
iṭai viravik kotta * ĕzhil tĕzhkiṉoṭum **
viṭai eṟu kāpāli * īcaṉ viṭutantāṉ *
uṭaiyāy azhel azhel tālelo * ulakam al̤antāṉe tālelo (2)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Musical Recitation

(Pasuram sung using above Ragam and Thalam)
PAT.1.3.2

Simple Translation

45. Kabāli, Shivā (His grandson) the bull-rider sent you this girdle of golden beads alternating with beautiful pear-shaped drops, perfectly befitting your waist, as a gratitude for removing his curse. Do not cry, do not cry. Sleep (thālelo), You measured the world (as ThrivikRaman) for Mahābali, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உடையார் இடுப்புக்குத்தகுந்த; கனமணியோடு பொன்மணியோடு; இடை விரவிக் இடை இடையே கலந்து; கோத்த கோர்க்கப்பட்ட; எழில் தெழ்கினோடு எழில் மிக்க சரிகையோடு; ஒண் அழகிய; மாதுளம்பூ மாதுளம்பூ போன்ற சங்கிலியையும்; விடை ஏறு காபாலி ரிஷப வாகன காபாலியான; ஈசன் விடுதந்தான் ருத்ரன் உனக்கு அனுப்பி வைத்தான்; உடையாய்! அனைத்தையும் உடையவனே!; அழேல் அழேல் அழாதே அழாதே!; தாலேலோ! கண் வளராய்!; உலகம் அளந்தானே! உலகளந்த திருவிக்கிரமனே!; தாலேலோ! கண் வளராய்!
viṭai eṟu kāpāli Kabali on a Rishaba vahana; īcaṉ viṭutantāṉ Rudra sent you this; ŏṇ beautiful; iṭai viravik girdle; kotta adorned; kaṉamaṇiyoṭu with a golden bell; ĕḻil tĕḻkiṉoṭu with elegant lace; uṭaiyār for His broad waist; mātul̤ampū like the garland of the Maathulampoo flower; uṭaiyāy! o possessor of everything!; aḻel aḻel do not cry, do not cry!; tālelo! close your eyes!; ulakam al̤antāṉe! o Tiruvikrama who encompassed the world!; tālelo! close your eyes!