Chapter 14

Devotees seeing Kannan in Vrindavan - (பட்டி மேய்ந்து)

விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை
Devotees seeing Kannan in Vrindavan - (பட்டி மேய்ந்து)
How can the Lord bear it if those who are dear to Him suffer? Andal, separated from Krishna, was deeply distressed. To alleviate her suffering, Krishna stood before her, giving her His divine presence. Andal describes how she saw Krishna in Vrindavan: playing and grazing the cows, playing with His friends, Garuda spreading his wings to shield Him from + Read more
தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் பகவான் எப்படிப் பொறுத்துக்கொள்வான்? கண்ணனைப் பிரிந்து ஆண்டாள் பெருந்துன்பமடைந்தாள். அத்துன்பமெல்லாம் தீருமாறு கண்ணன் ஆண்டாள் எதிரில் நின்று சேவை தருகிறான். கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், தோழர்களோடு விளையாடுவதையும், அவன்மீது வெயில் படாமல் + Read more
Verses: 637 to 646
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will live under the divine feet of the Lord without leaving him
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 14.1

637 பட்டிமேய்ந்தோர்காரேறு பலதேவற்கோர்கீழ்க்கன்றாய் *
இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே? *
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீரூட்டி *
விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (2)
637 ## பட்டி மேய்ந்து ஓர் காரேறு * பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் *
இட்டீறு இட்டு விளையாடி * இங்கே போதக் கண்டீரே? **
இட்டமான பசுக்களை * இனிது மறித்து நீர் ஊட்டி *
விட்டுக் கொண்டு விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (1)
637 ## paṭṭi meyntu or kāreṟu * palatevaṟku or kīzhkkaṉṟāy *
iṭṭīṟu iṭṭu vil̤aiyāṭi * iṅke potak kaṇṭīre? **
iṭṭamāṉa pacukkal̤ai * iṉitu maṟittu nīr ūṭṭi *
viṭṭuk kŏṇṭu vil̤aiyāṭa * viruntāvaṉatte kaṇṭome (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

637. "Did you see that dark bull-like one playing like a young calf, running behind his brother Baladeva?" “We saw him grazing the cows and giving them water. He loves them and plays with them in Brindavan (Madhura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஓர் காரேறு ஒரு கறுத்த காளை; பட்டி மேய்ந்து இஷ்டப்படி திரிந்துகொண்டும்; பலதேவற்கு ஓர் பலராமனுக்கு; கீழ்க் கன்றாய் தம்பியாய்; இட்டீறு இட்டு இஷ்டப்படி; விளையாடி விளையாடிக்கொண்டும்; இங்கே போத இங்கு வர; கண்டீரே? பார்த்தீர்களோ?; இட்டமான தனக்கு இஷ்டமான; பசுக்களை பசுக்களை; இனிது மறித்து மகிழ்ச்சியாக மடக்கி; நீர் ஊட்டி தண்ணீரை பருகச் செய்து; விட்டுக் கொண்டு மேயவிட்டுக் கொண்டு; விளையாட விளையாட; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே பார்த்தோம்
kaṇṭīre? have you seen?; or kāreṟu a strong dark bull; paṭṭi meyntu who roams freely; iṅke pota coming here; kīḻk kaṉṟāy who is the brother of; palatevaṟku or Balarama; vil̤aiyāṭi who plays; iṭṭīṟu iṭṭu as He wishes; iṉitu maṟittu He herds; pacukkal̤ai the cows; iṭṭamāṉa that He likes; nīr ūṭṭi and let them drink water; viṭṭuk kŏṇṭu and let them graze; kaṇṭome we saw Him; vil̤aiyāṭa playing; viruntāvaṉatte in Brindavan

NAT 14.2

638 அனுங்கவென்னைப்பிரிவுசெய்து ஆயர்பாடிகவர்ந்துண்ணும் *
குணுங்குநாறிக்குட்டேற்றைக் கோவர்த்தனனைக்கண்டீரே? *
கணங்களோடுமின்மேகம் கலந்தாற்போல * வனமாலை
மினுங்கநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
638 அனுங்க என்னைப் பிரிவு செய்து * ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் *
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் * கோவர்த்தனனைக் கண்டீரே? **
கணங்களோடு மின் மேகம் * கலந்தால் போல வனமாலை *
மினுங்க நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (2)
638 aṉuṅka ĕṉṉaip pirivu cĕytu * āyarpāṭi kavarntu uṇṇum *
kuṇuṅku nāṟik kuṭṭeṟṟaik * kovarttaṉaṉaik kaṇṭīre? **
kaṇaṅkal̤oṭu miṉ mekam * kalantāl pola vaṉamālai *
miṉuṅka niṉṟu vil̤aiyāṭa * viruntāvaṉatte kaṇṭome (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

638. “Did you see Govardhanān who left me and went to Gokulam, the cowherd village and fascinates everyone by stealing the butter, eating it and smelling of ghee?" “We saw the dark one adorned with garlands made of forest flowers. playing with his mates in Brindavan (Mathura) He looked like the clouds shining with lightning. "

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அனுங்க என்னை நான் வருந்தும்படியாக; பிரிவு செய்து என்னைப் பிரிந்துபோய்; ஆயர் பாடி கவர்ந்து ஆய்ப்பாடியை கவர்ந்து; உண்ணும் அனுபவிக்கும்; குணுங்கு நாறி வெண்ணெய் மணம் வீசும்; குட்டேற்றை இளைய ரிஷபம் போன்ற; கோவர்த்தனனைக் கண்ணபிரானை; கண்டீரே? பார்த்தீர்களா?; மின் மேகம் மின்னலும் மேகமும்; கலந்தாற் போல சேர்ந்தாற் போல்; கறுத்த கருத்த; வனமாலை மேனியிலே வனமாலை; மினுங்க நின்று மினுக்கப் பெற்று; கணங்களோடு தோழர் கூட்டங்களோடு; விளையாட விளையாடுவதை; விருந்தாவனத்தே விருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே
kovarttaṉaṉaik Lord Kannan; kuṭṭeṟṟai who is like a young bull; kuṇuṅku nāṟi smells like butter; uṇṇum who enjoys; āyar pāṭi kavarntu after attracting the people of Ayarpadi; pirivu cĕytu left; aṉuṅka ĕṉṉai me to suffer; kaṇṭīre? have you seen Him?; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan; vil̤aiyāṭa where He plays; kaṇaṅkal̤oṭu with his friends; miṉuṅka niṉṟu wearing a sparkling; vaṉamālai forest garland; kaṟutta in His black body; kalantāṟ pola that looks like a combined; miṉ mekam cloud and lightening

NAT 14.3

639 மாலாய்ப்பிறந்தநம்பியை மாலேசெய்யும்மணாளனை *
ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே? *
மேலால்பரந்தவெயில்காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும் *
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே.
639 மாலாய்ப் பிறந்த நம்பியை * மாலே செய்யும் மணாளனை *
ஏலாப் பொய்கள் உரைப்பானை * இங்கே போதக் கண்டீரே? **
மேலால் பரந்த வெயில் காப்பான் * வினதை சிறுவன் சிறகு என்னும் *
மேலாப்பின் கீழ் வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (3)
639 mālāyp piṟanta nampiyai * māle cĕyyum maṇāl̤aṉai *
elāp pŏykal̤ uraippāṉai * iṅke potak kaṇṭīre? **
melāl paranta vĕyil kāppāṉ * viṉatai ciṟuvaṉ ciṟaku ĕṉṉum *
melāppiṉ kīzh varuvāṉai * viruntāvaṉatte kaṇṭome (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

639. "Did you see Him who is the personification of beauty, the One who symbolizes Love and the One who tells incredible lies? Did you see Him here? "We saw Garudā, the son of Vinadai, spreading his wings to protect Him from the heat, here in Brindavan (Mathura).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மாலாய் மோகமே வடிவாக; பிறந்த பிறந்த; நம்பியை பெருமானை; மாலே செய்யும் அன்பையே செய்கிற; மணாளனை மணாளனை; ஏலாப்பொய்கள் ஏற்கத் தகாத பொய்களை; உரைப்பானை கூறுபவனை; இங்கே போத இங்கே செல்வதை; கண்டீரே? பார்த்தீர்களா?; மேலால் பரந்த மேலே பரவிய; வெயில் வெய்யிலை; காப்பான் தடுப்பதற்காக; வினதை வினதையின்; சிறுவன் புதல்வன் கருடன்; சிறகு என்னும் சிறகுகளாகிற; மேலாப்பின் கீழ் விதானத்தின் கீழ்; வருவானை வருபவனை; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே பார்த்தோமே
nampiyai the Lord; piṟanta who is born; mālāy as personification of enchantment; maṇāl̤aṉai He; māle cĕyyum always shower love; uraippāṉai He is the One who tells; elāppŏykal̤ unacceptable lies; kaṇṭīre? have you seen Him; iṅke pota coming this way; kāppāṉ to prevent; vĕyil harsh sunlight; melāl paranta spreading above; ciṟuvaṉ Garuda, the son of; viṉatai Vinathai; ciṟaku ĕṉṉum spreads the wings; melāppiṉ kīḻ as a canopy; varuvāṉai under which He arrives; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan

NAT 14.4

640 கார்த்தண்கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறுபடுத்தி * என்னை
ஈர்த்துக்கொண்டுவிளையாடும் ஈசன்றன்னைக்கண்டீரே? *
போர்த்தமுத்தின்குப்பாயப் புகர்மால்யானைக்கன்றேபோல் *
வேர்த்துநின்று விளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
640 கார்த் தண் கமலக் கண் என்னும் * நெடுங்கயிறு படுத்தி என்னை *
ஈர்த்துக் கொண்டு விளையாடும் * ஈசன் தன்னைக் கண்டீரே? **
போர்த்த முத்தின் குப்பாயப் * புகர் மால் யானைக் கன்றே போல் *
வேர்த்து நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (4)
640 kārt taṇ kamalak kaṇ ĕṉṉum * nĕṭuṅkayiṟu paṭutti ĕṉṉai *
īrttuk kŏṇṭu vil̤aiyāṭum * īcaṉ taṉṉaik kaṇṭīre? **
portta muttiṉ kuppāyap * pukar māl yāṉaik kaṉṟe pol *
verttu niṉṟu vil̤aiyāṭa * viruntāvaṉatte kaṇṭome (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

640. “He attracted me with his dark beautiful lotus eyes, tied me to him with his love, pulled me and played with me. Did you see Him?” “We saw Him. He was like a baby elephant covered with a cloth decorated with pearls. We saw him sweating and playing in Brindavan (Madhura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கார்த் தண் காளமேகத்திலே குளிர்ந்த; கமல தாமரை பூத்தது போன்ற; கண் என்னும் கண்கள் என்கிற; நெடுங்கயிறு படுத்தி நீண்ட பாசக்கயிறால்; என்னை என்னை; ஈர்த்துக் கொண்டு இழுத்துக் கொண்டு போய்; விளையாடும் விளையாடும்; ஈசன் தன்னை ஈசனை; கண்டீரே? பார்த்தீர்களா?; போர்த்த போர்வையாக; முத்தின் முத்து; குப்பாய சட்டை அணிந்த மாதிரி; புகர் மால் தேஜஸ்ஸையுடைய பெரிய; யானைக் கன்றே போல் யானைக் குட்டி போல்; வேர்த்து நின்று வியர்த்து நின்று; விளையாட விளையாட; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே
kaṇṭīre? Have you seen; īcaṉ taṉṉai the Lord; kaṇ ĕṉṉum with His eyes that are; kamala like lotuses that bloom; kārt taṇ from a dark cool clouds; nĕṭuṅkayiṟu paṭutti they are like ropes of affection; īrttuk kŏṇṭu that drag; ĕṉṉai me; vil̤aiyāṭum to play with Him; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan; yāṉaik kaṉṟe pol like a baby elephant; pukar māl with incredible tejas; portta wearing; kuppāya a dress; muttiṉ studded with pearls; verttu niṉṟu sweating; vil̤aiyāṭa and playing

NAT 14.5

641 மாதவன்என்மணியினை வலையில்பிழைத்தபன்றிபோல் *
ஏதுமொன்றும்கொளத்தாரா ஈசன்றன்னைக்கண்டீரே? *
பீதகவாடையுடைதாழப் பெருங்கார்மேகக்கன்றேபோல் *
வீதியாரவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2)
641 ## மாதவன் என் மணியினை * வலையில் பிழைத்த பன்றி போல் *
ஏதும் ஒன்றும் கொளத் தாரா * ஈசன்தன்னைக் கண்டீரே? **
பீதக ஆடை உடை தாழ * பெருங் கார்மேகக் கன்றே போல் *
வீதி ஆர வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (5)
641 ## mātavaṉ ĕṉ maṇiyiṉai * valaiyil pizhaitta paṉṟi pol *
etum ŏṉṟum kŏl̤at tārā * īcaṉtaṉṉaik kaṇṭīre? **
pītaka-āṭai uṭai tāzha * pĕruṅ kārmekak kaṉṟe pol *
vīti āra varuvāṉai * viruntāvaṉatte kaṇṭome (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

641. “Did you see Madhavan, my lord, my jewel? who is like a boar that has been caught in a net and escaped? Has no one seen him? Doesn’t he want to show himself to anyone?” “We saw him. He was like a dark baby cloud wearing golden clothes as he came on the street in Brindavan (Mathura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மாதவன் கண்ணபிரான் எனும்; என் மணியினை என் ரத்தினத்தை; வலையில் வலையிலிருந்து; பிழைத்த பிழைத்த; பன்றிபோல் பன்றிபோலே செருக்குற்று; ஏதும் ஒன்றும் எந்த ஒன்றையும்; கொளத் தாரா பிறருக்குத் தராத; ஈசன் தன்னைக் பிரானை; கண்டீரே? பார்த்தீர்களா?; பீதக ஆடை உடை பீதாம்பர உடை; தாழ தாழ்ந்து தொங்க; பெரும் கார்மேக பெருத்த கருமையான; கன்றே போல் மேகக் குட்டிபோலே; வீதி ஆர வீதி நிறைந்து; வருவானை வருபவனை; விருந்தாவனத்தே பிருந்தாவனத்திலே; கண்டோமே கண்டோமே
ĕṉ maṇiyiṉai my gem; mātavaṉ called Kannan; paṉṟipol like a proud boar; piḻaitta escaped; valaiyil from the net; īcaṉ taṉṉaik that Lord; kŏl̤at tārā refuses to share with other; etum ŏṉṟum anything at all; kaṇṭīre? have you seen Him?; pītaka āṭai uṭai His yellow silk garment; tāḻa hanging down; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan; pĕrum kārmeka as a huge dark; kaṉṟe pol baby cloud; varuvāṉai comes walking; vīti āra and filling the street

NAT 14.6

642 தருமமறியாக்குறும்பனைத் தங்கைச்சார்ங்கமதுவேபோல் *
புருவவட்டமழகிய பொருத்தமிலியைக்கண்டீரே? *
உருவுகரிதாய்முகம்செய்தாய் உதயப்பருப்பதத்தின்மேல் *
விரியும்கதிரேபோல்வானை விருந்தாவனத்தேகண்டோமே.
642 தருமம் அறியாக் குறும்பனைத் * தன் கைச் சார்ங்கம் அதுவே போல் *
புருவ வட்டம் அழகிய * பொருத்தம் இலியைக் கண்டீரே? **
உருவு கரிதாய் முகம் செய்தாய் * உதயப் பருப்பதத்தின் மேல் *
விரியும் கதிரே போல்வானை * விருந்தாவனத்தே கண்டோமே (6)
642 tarumam aṟiyāk kuṟumpaṉait * taṉ kaic cārṅkam atuve pol *
puruva vaṭṭam azhakiya * pŏruttam iliyaik kaṇṭīre? **
uruvu karitāy mukam cĕytāy * utayap paruppatattiṉ mel *
viriyum katire polvāṉai * viruntāvaṉatte kaṇṭome (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

642. “Did you see the naughty one, his beautiful eyebrows bending like his Sārangam bow? He doesn’t have any compassion for the young girls who love him and is always bothering them. He doesn’t know how to get along with others. ” “We saw the dark one with a fair face. He looked like the bright sun rising from behind a hill. We saw him in Brindavan (Mathura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தருமம் இரக்கமென்பது; அறியா அறியாதவனாய்; குறும்பனை குறும்புகள் செய்யபவனை; தன் கைச்சார்ங்கம் தனது கைச் சார்ங்க வில்; அதுவே போல் போன்ற; புருவ வட்டம் புருவ வட்டங்களாலே; அழகிய அழகு மிக்க; பொருத்தம் பொருத்தம்; இலியை இல்லாதவனை; கண்டீரே? பார்த்தீர்களா?; உருவு திருமேனியில்; கரிதாய் கருமைபெற்றும்; முகம் முகம் செம்மையாக; செய்தாய் இருப்பதாலே; உதயப் உதய; பருப்பதத்தின் பர்வதத்தின்; மேல் விரியும் மேலே விரியும்; கதிரே சூரியன்; போல்வானை போலிருப்பவனை; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே
kuṟumpaṉai He plays mischiefs; aṟiyā and doesnt have; tarumam mercy; puruva vaṭṭam with His eyebrows; atuve pol that looks like; taṉ kaiccārṅkam a saranga bow; aḻakiya He is full of beauty; iliyai yet; pŏruttam unmatched; kaṇṭīre? have you seen Him?; uruvu in His divine body; karitāy with dusky complexion; mukam His face alone glows; cĕytāy and hence looks; polvāṉai like; utayap a rising; katire sun; paruppatattiṉ from behind a mountain; mel viriyum and spreading its rays; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan

NAT 14.7

643 பொருத்தமுடையநம்பியைப் புறம்போலுள்ளும்கரியானை *
கருத்தைப்பிழைத்துநின்ற அக்கருமாமுகிலைக்கண்டீரே? *
அருத்தித்தாராகணங்களால் ஆரப்பெருகுவானம்போல் *
விருத்தம்பெரிதாய்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே.
643 பொருத்தம் உடைய நம்பியைப் * புறம்போல் உள்ளும் கரியானை *
கருத்தைப் பிழைத்து நின்ற * அக் கரு மா முகிலைக் கண்டீரே? **
அருத்தித் தாரா கணங்களால் * ஆரப் பெருகு வானம் போல் *
விருத்தம் பெரிதாய் வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (7)
643 pŏruttam uṭaiya nampiyaip * puṟampol ul̤l̤um kariyāṉai *
karuttaip pizhaittu niṉṟa * ak karu mā mukilaik kaṇṭīre? **
aruttit tārā kaṇaṅkal̤āl * ārap pĕruku vāṉam pol *
viruttam pĕritāy varuvāṉai * viruntāvaṉatte kaṇṭome (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

643. “Did you see Him, beautiful and dark as a cloud? Is his mind as dark as his body? He makes many promises to girls but doesn’t keep them. Doesn’t he have any compassion?” “We saw Him. He was bright as the sky filled with stars when he came with a big crowd in Brindavan (Mathura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பொருத்தம் உடைய பொருத்தமுடைய; நம்பியை சுவாமியாய்; புறம் போல் உடம்பு போலே; உள்ளும் உள்ளமும்; கரியானை கறுத்திருப்பவனாய்; கருத்தை என் எண்ணத்தைத் தப்பி; நின்ற நிற்பவனாய்; அக் கரு மா கறுத்துப் பெருத்த; முகிலை முகில் போன்றவனை; கண்டீரே? பார்த்தீர்களா?; அருத்தி விருப்பமான; தாரா நட்சத்திர; கணங்களால் கூட்டங்களால்; ஆரப் பெருகு எங்கும் நிறைந்திருந்துள்ள; வானம்போல் ஆகாசம் போல்; விருத்தம் பெரிதாய் பெருங் கூட்டமாய்; வருவானை வருபவனை; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே
pŏruttam uṭaiya the fitting; nampiyai Lord; puṟam pol like His body; ul̤l̤um His heart too; kariyāṉai is dark; niṉṟa He stands; karuttai beyond my thoughts; mukilai He is like a cloud that is; ak karu mā vast and dark; kaṇṭīre? have you seen Him?; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan; varuvāṉai coming; viruttam pĕritāy in large groups; vāṉampol like the sky; ārap pĕruku that is filled with; arutti delightful; kaṇaṅkal̤āl cluster; tārā of stars

NAT 14.8

644 வெளியசங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை *
அளிநன்குடையதிருமாலை ஆழியானைக்கண்டீரே? *
களிவண்டெங்கும்கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள்தடந்தோள்மேல் *
மிளிரநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
644 வெளிய சங்கு ஒன்று உடையானைப் * பீதக ஆடை உடையானை *
அளி நன்கு உடைய திருமாலை * ஆழியானைக் கண்டீரே? **
களி வண்டு எங்கும் கலந்தாற்போல் * கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் *
மிளிர நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (8)
644 vĕl̤iya caṅku ŏṉṟu uṭaiyāṉaip * pītaka āṭai uṭaiyāṉai *
al̤i naṉku uṭaiya tirumālai * āzhiyāṉaik kaṇṭīre? **
kal̤i vaṇṭu ĕṅkum kalantāṟpol * kamazh pūṅkuzhalkal̤ taṭantol̤ mel *
mil̤ira niṉṟu vil̤aiyāṭa * viruntāvaṉatte kaṇṭome (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

644. “Did you see generous Thirumāl carrying a white conch and a discus and adorned with golden clothes?” “We saw him as his lovely fragrant hair fell on his large arms, like bees that swarm with glee, while he played in Brindavan (Mathura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வெளிய சங்கு வெண்மையான சங்கு; உடையானை உடையவனாய்; பீதக ஆடை பீதாம்பர ஆடை; உடையானை உடையவனாய்; அளி நன்கு உடைய கிருபை உடையவனாய்; ஆழியானை சக்கரத்தை உடையவனான; திருமாலை கண்டீரே? பிரானைக் கண்டீர்களோ?; களி வண்டு களித்துள்ள வண்டுகள்; எங்கும் எல்லா இடங்களிலும்; கலந்தாற் போல் பரவினது போலே; கமழ் பூங்குழல்கள் பரிமளிக்கின்ற அழகிய கேசம்; தடந்தோள் மேல் அகன்ற தோளின் மேலே; மிளிர நின்று மிளிர்ந்து நின்று; விளையாட விளையாட; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே
uṭaiyāṉai He is the bearer of; vĕl̤iya caṅku the white conch; uṭaiyāṉai and the wearer of; pītaka āṭai golden clothes; tirumālai kaṇṭīre? have you seen the Lord; āḻiyāṉai who has the discus; al̤i naṉku uṭaiya and is full of mercy; kal̤i vaṇṭu like joyful bees; kalantāṟ pol that spreads; ĕṅkum everywhere; kamaḻ pūṅkuḻalkal̤ His beautiful fragrant hair; vil̤aiyāṭa plays; mil̤ira niṉṟu gleamingly and shines; taṭantol̤ mel on His broad shoulder; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan

NAT 14.9

645 நாட்டைப்படையென்று அயன்முதலாத்தந்த நளிர்மாமலருந்தி *
வீட்டைப்பண்ணிவிளையாடும் விமலன்றன்னைக்கண்டீரே? *
காட்டைநாடித்தேனுகனும் களிறும்புள்ளுமுடன்மடிய *
வேட்டையாடிவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2)
645 ## நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த * நளிர் மா மலர் உந்தி *
வீட்டைப் பண்ணி விளையாடும் * விமலன்தன்னைக் கண்டீரே? **
காட்டை நாடித் தேனுகனும் * களிறும் புள்ளும் உடன் மடிய *
வேட்டையாடி வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (9)
645 ## nāṭṭaip paṭai ĕṉṟu ayaṉ mutalāt tanta * nal̤ir mā malar unti *
vīṭṭaip paṇṇi vil̤aiyāṭum * vimalaṉtaṉṉaik kaṇṭīre? **
kāṭṭai nāṭit teṉukaṉum * kal̤iṟum pul̤l̤um uṭaṉ maṭiya *
veṭṭaiyāṭi varuvāṉai * viruntāvaṉatte kaṇṭome (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

645. “He created Nānmuhan on a beautiful lotus growing from his navel, so that Nānmuhan could create the whole world. Did you see the faultless lord who created this world and plays in it?” “We saw Him fighting and killing the demon Thenuhan the elephant Kuvalayāpeedam and Bakasura in the forest. We saw him in Brindavan (Mathura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நாட்டை உலகங்களை; படை என்று படைத்திடு என்று; அயன் முதலா பிரமன் முதலானவர்; நளிர் மா மலர் குளிர்ந்த பெரிய மலருக்கு; உந்தி வீட்டை நாபியாகிற வீட்டை; பண்ணி உண்டாக்கி; விளையாடும் விளையாடும்; விமலன் பரமபாவனமான; தன்னை பிரானை; கண்டீரே? கண்டீரோ?; தேனுகனும் தேனுகாசுரனும்; களிறும் குவலயாபீட யானையும்; புள்ளும் பகாசூரனும்; உடன் மடிய உடனே மாளும்படியாக; காட்டை நாடி காட்டிற்குச் சென்று; வேட்டை யாடி வேட்டையாடி; வருவானை வருபவனை; விருந்தாவனத்தே விருந்தாவனத்தே; கண்டோமே கண்டோமே
kaṇṭīre? have you seen; taṉṉai the Lord; vimalaṉ who is pure; vil̤aiyāṭum and plays; paṇṇi by creating; unti vīṭṭai a place from His navel; nal̤ir mā malar in the form of cool lotus; ayaṉ mutalā for Brahma; paṭai ĕṉṟu to create; nāṭṭai the worlds; kaṇṭome we have seen Him; viruntāvaṉatte in Vrindavan; varuvāṉai who comes; kāṭṭai nāṭi the forest; veṭṭai yāṭi after hunting; uṭaṉ maṭiya and killed them instantly; teṉukaṉum the demon Thenuhan; kal̤iṟum the elephant Kuvalayāpeedam; pul̤l̤um and Bakasura

NAT 14.10

646 பருந்தாட்களிற்றுக்கருள்செய்த பரமன்றன்னை * பாரின்மேல்
விருந்தாவனத்தேகண்டமை விட்டுசித்தன்கோதைசொல் *
மருந்தாமென்றுதம்மனத்தே வைத்துக்கொண்டுவாழ்வார்கள் *
பெருந்தாளுடையபிரானடிக்கீழ் பிரியாதென்றுமிருப்பாரே. (2)
646 ## பருந்தாள் களிற்றுக்கு அருள்செய்த * பரமன் தன்னைப் பாரின் மேல் *
விருந்தாவனத்தே கண்டமை * விட்டுசித்தன் கோதை சொல் **
மருந்தாம் என்று தம் மனத்தே * வைத்துக் கொண்டு வாழ்வார்கள் *
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் * பிரியாது என்றும் இருப்பாரே (10)
646 ## paruntāl̤ kal̤iṟṟukku arul̤cĕyta * paramaṉ taṉṉaip pāriṉ mel *
viruntāvaṉatte kaṇṭamai * viṭṭucittaṉ kotai cŏl **
maruntām ĕṉṟu tam maṉatte * vaittuk kŏṇṭu vāzhvārkal̤ *
pĕruntāl̤ uṭaiya pirāṉ aṭikkīzh * piriyātu ĕṉṟum iruppāre (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

646. Vishnuchithan Kodai composed pāsurams about seeing in Brindavan (Mathura), the supreme lord who gave His grace to Gajendra the elephant. Those who keep these pāsurams in their minds as a cure will live under the divine feet of the lord without leaving Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பருந்தாள் தடிமனான காலையுடைய; களிற்றுக்கு யானைக்கு; அருள் செய்த அருள் செய்த; பரமன் தன்னை திருமாலை; பாரின் மேல் இவ்வுலகிலே; விருந்தாவனத்தே பிருந்தாவனத்திலே; கண்டமை சேவிக்கப் பெற்றதை; விட்டுசித்தன் பெரியாழ்வாரின்; கோதை மகளானஆண்டாள்; சொல் அருளிய பாசுரங்களை; மருந்தாம் பிறவிநோய்க்கு மருந்தாகும்; என்று என்று; தம் மனத்தே தங்கள் மனதிலே; வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டு; வாழ்வார்கள் வாழ்பவர்கள்; பெருந்தாள் பெருமை மிக்க திருவடிகளை; உடைய பிரான் உடைய பிரானின்; அடிக் கீழ் திருவடிகளின் கீழ்; என்றும் எந்நாளும்; பிரியாது இருப்பாரே பிரியாமல் இருப்பாரே
kotai Andal, the daughter of; viṭṭucittaṉ Periazhwar; cŏl composed the hyms; kaṇṭamai about getting the darshan of; paramaṉ taṉṉai the Lord; arul̤ cĕyta who blessed; kal̤iṟṟukku the elephant; paruntāl̤ with stout leg; pāriṉ mel in this very world; viruntāvaṉatte in Vrindavan; vāḻvārkal̤ those who live; vaittuk kŏṇṭu holding on to the view; tam maṉatte in their hearts; ĕṉṟu that these hymns will; maruntām be the medicine for samsara; piriyātu iruppāre will remain without separation; ĕṉṟum forever; aṭik kīḻ beneath; pĕruntāl̤ the glorious divine feet; uṭaiya pirāṉ of the Lord