Chapter 14
Devotees seeing Kannan in Vrindavan - (பட்டி மேய்ந்து)
விருந்தாவனத்துக் கண்ணனைக் கண்டமை
How can the Lord bear it if those who are dear to Him suffer? Andal, separated from Krishna, was deeply distressed. To alleviate her suffering, Krishna stood before her, giving her His divine presence. Andal describes how she saw Krishna in Vrindavan: playing and grazing the cows, playing with His friends, Garuda spreading his wings to shield Him from + Read more
தன்னைச் சேர்ந்தவர்கள் துன்புற்றால் பகவான் எப்படிப் பொறுத்துக்கொள்வான்? கண்ணனைப் பிரிந்து ஆண்டாள் பெருந்துன்பமடைந்தாள். அத்துன்பமெல்லாம் தீருமாறு கண்ணன் ஆண்டாள் எதிரில் நின்று சேவை தருகிறான். கண்ணன் பசுக்களை மேய்த்து விளையாடுவதையும், தோழர்களோடு விளையாடுவதையும், அவன்மீது வெயில் படாமல் + Read more
Verses: 637 to 646
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will live under the divine feet of the Lord without leaving him
- NAT 14.1
637 ## பட்டி மேய்ந்து ஓர் காரேறு * பலதேவற்கு ஓர் கீழ்க்கன்றாய் *
இட்டீறு இட்டு விளையாடி * இங்கே போதக் கண்டீரே? **
இட்டமான பசுக்களை * இனிது மறித்து நீர் ஊட்டி *
விட்டுக் கொண்டு விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (1) - NAT 14.2
638 அனுங்க என்னைப் பிரிவு செய்து * ஆயர்பாடி கவர்ந்து உண்ணும் *
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் * கோவர்த்தனனைக் கண்டீரே? **
கணங்களோடு மின் மேகம் * கலந்தால் போல வனமாலை *
மினுங்க நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (2) - NAT 14.3
639 மாலாய்ப் பிறந்த நம்பியை * மாலே செய்யும் மணாளனை *
ஏலாப் பொய்கள் உரைப்பானை * இங்கே போதக் கண்டீரே? **
மேலால் பரந்த வெயில் காப்பான் * வினதை சிறுவன் சிறகு என்னும் *
மேலாப்பின் கீழ் வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (3) - NAT 14.4
640 கார்த் தண் கமலக் கண் என்னும் * நெடுங்கயிறு படுத்தி என்னை *
ஈர்த்துக் கொண்டு விளையாடும் * ஈசன் தன்னைக் கண்டீரே? **
போர்த்த முத்தின் குப்பாயப் * புகர் மால் யானைக் கன்றே போல் *
வேர்த்து நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (4) - NAT 14.5
641 ## மாதவன் என் மணியினை * வலையில் பிழைத்த பன்றி போல் *
ஏதும் ஒன்றும் கொளத் தாரா * ஈசன்தன்னைக் கண்டீரே? **
பீதக ஆடை உடை தாழ * பெருங் கார்மேகக் கன்றே போல் *
வீதி ஆர வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (5) - NAT 14.6
642 தருமம் அறியாக் குறும்பனைத் * தன் கைச் சார்ங்கம் அதுவே போல் *
புருவ வட்டம் அழகிய * பொருத்தம் இலியைக் கண்டீரே? **
உருவு கரிதாய் முகம் செய்தாய் * உதயப் பருப்பதத்தின் மேல் *
விரியும் கதிரே போல்வானை * விருந்தாவனத்தே கண்டோமே (6) - NAT 14.7
643 பொருத்தம் உடைய நம்பியைப் * புறம்போல் உள்ளும் கரியானை *
கருத்தைப் பிழைத்து நின்ற * அக் கரு மா முகிலைக் கண்டீரே? **
அருத்தித் தாரா கணங்களால் * ஆரப் பெருகு வானம் போல் *
விருத்தம் பெரிதாய் வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (7) - NAT 14.8
644 வெளிய சங்கு ஒன்று உடையானைப் * பீதக ஆடை உடையானை *
அளி நன்கு உடைய திருமாலை * ஆழியானைக் கண்டீரே? **
களி வண்டு எங்கும் கலந்தாற்போல் * கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் *
மிளிர நின்று விளையாட * விருந்தாவனத்தே கண்டோமே (8) - NAT 14.9
645 ## நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த * நளிர் மா மலர் உந்தி *
வீட்டைப் பண்ணி விளையாடும் * விமலன்தன்னைக் கண்டீரே? **
காட்டை நாடித் தேனுகனும் * களிறும் புள்ளும் உடன் மடிய *
வேட்டையாடி வருவானை * விருந்தாவனத்தே கண்டோமே (9) - NAT 14.10
646 ## பருந்தாள் களிற்றுக்கு அருள்செய்த * பரமன் தன்னைப் பாரின் மேல் *
விருந்தாவனத்தே கண்டமை * விட்டுசித்தன் கோதை சொல் **
மருந்தாம் என்று தம் மனத்தே * வைத்துக் கொண்டு வாழ்வார்கள் *
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ் * பிரியாது என்றும் இருப்பாரே (10)