NAT 14.8

விளையாடும் கண்ணனைக் கண்டோம்

644 வெளியசங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை *
அளிநன்குடையதிருமாலை ஆழியானைக்கண்டீரே? *
களிவண்டெங்கும்கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள்தடந்தோள்மேல் *
மிளிரநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
644 vĕl̤iya caṅku ŏṉṟu uṭaiyāṉaip * pītaka āṭai uṭaiyāṉai *
al̤i naṉku uṭaiya tirumālai * āzhiyāṉaik kaṇṭīre? **
kal̤i vaṇṭu ĕṅkum kalantāṟpol * kamazh pūṅkuzhalkal̤ taṭantol̤ mel *
mil̤ira niṉṟu vil̤aiyāṭa * viruntāvaṉatte kaṇṭome (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

644. “Did you see generous Thirumāl carrying a white conch and a discus and adorned with golden clothes?” “We saw him as his lovely fragrant hair fell on his large arms, like bees that swarm with glee, while he played in Brindavan (Mathura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெளிய சங்கு வெண்மையான சங்கு; உடையானை உடையவனாய்; பீதக ஆடை பீதாம்பர ஆடை; உடையானை உடையவனாய்; அளி நன்கு உடைய கிருபை உடையவனாய்; ஆழியானை சக்கரத்தை உடையவனான; திருமாலை கண்டீரே? பிரானைக் கண்டீர்களோ?; களி வண்டு களித்துள்ள வண்டுகள்; எங்கும் எல்லா இடங்களிலும்; கலந்தாற் போல் பரவினது போலே; கமழ் பூங்குழல்கள் பரிமளிக்கின்ற அழகிய கேசம்; தடந்தோள் மேல் அகன்ற தோளின் மேலே; மிளிர நின்று மிளிர்ந்து நின்று; விளையாட விளையாட; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே

Detailed WBW explanation

Have you beheld Kaṇṇan, who wields the luminous, peerless Śrī Pāñchajanya (divine conch), adorned in divine yellow garments, embodying compassion, bearing the celestial disc, and revered as the consort of Śrī Mahālakṣmī? We have indeed seen Him in Vṛndāvana, where His sacred tresses, fragrant as though joyous beetles intoxicated by honey have dispersed all around, splendidly cascade upon His divine shoulders.