NAT 14.6

உதயசூரியன் போலும் கண்ணனைக் கண்டோம்

642 தருமமறியாக்குறும்பனைத் தங்கைச்சார்ங்கமதுவேபோல் *
புருவவட்டமழகிய பொருத்தமிலியைக்கண்டீரே? *
உருவுகரிதாய்முகம்செய்தாய் உதயப்பருப்பதத்தின்மேல் *
விரியும்கதிரேபோல்வானை விருந்தாவனத்தேகண்டோமே.
642 tarumam aṟiyāk kuṟumpaṉait * taṉ kaic cārṅkam atuve pol *
puruva vaṭṭam azhakiya * pŏruttam iliyaik kaṇṭīre? **
uruvu karitāy mukam cĕytāy * utayap paruppatattiṉ mel *
viriyum katire polvāṉai * viruntāvaṉatte kaṇṭome (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

642. “Did you see the naughty one, his beautiful eyebrows bending like his Sārangam bow? He doesn’t have any compassion for the young girls who love him and is always bothering them. He doesn’t know how to get along with others. ” “We saw the dark one with a fair face. He looked like the bright sun rising from behind a hill. We saw him in Brindavan (Mathura). ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தருமம் இரக்கமென்பது; அறியா அறியாதவனாய்; குறும்பனை குறும்புகள் செய்யபவனை; தன் கைச்சார்ங்கம் தனது கைச் சார்ங்க வில்; அதுவே போல் போன்ற; புருவ வட்டம் புருவ வட்டங்களாலே; அழகிய அழகு மிக்க; பொருத்தம் பொருத்தம்; இலியை இல்லாதவனை; கண்டீரே? பார்த்தீர்களா?; உருவு திருமேனியில்; கரிதாய் கருமைபெற்றும்; முகம் முகம் செம்மையாக; செய்தாய் இருப்பதாலே; உதயப் உதய; பருப்பதத்தின் பர்வதத்தின்; மேல் விரியும் மேலே விரியும்; கதிரே சூரியன்; போல்வானை போலிருப்பவனை; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே

Detailed WBW explanation

Have you beheld the Emperumān, who appears unacquainted with mercy, yet perpetually indulges in playful mischiefs? Adorned magnificently, His divine eyebrows arch like the bow Śārṅga that He wields. Seemingly detached, He does not resonate with the congruence typically shared with His devotees. We have indeed witnessed Him in Vṛndāvanam, where He resembles the sun ascending from the mountain that heralds its rise, His dark divine form aglow with a reddish effulgence.