NAT 14.2

கண்ணன் விளையாட்டைக் கண்டோம்

638 அனுங்கவென்னைப்பிரிவுசெய்து ஆயர்பாடிகவர்ந்துண்ணும் *
குணுங்குநாறிக்குட்டேற்றைக் கோவர்த்தனனைக்கண்டீரே? *
கணங்களோடுமின்மேகம் கலந்தாற்போல * வனமாலை
மினுங்கநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே.
638 aṉuṅka ĕṉṉaip pirivu cĕytu * āyarpāṭi kavarntu uṇṇum *
kuṇuṅku nāṟik kuṭṭeṟṟaik * kovarttaṉaṉaik kaṇṭīre? **
kaṇaṅkal̤oṭu miṉ mekam * kalantāl pola vaṉamālai *
miṉuṅka niṉṟu vil̤aiyāṭa * viruntāvaṉatte kaṇṭome (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

638. “Did you see Govardhanān who left me and went to Gokulam, the cowherd village and fascinates everyone by stealing the butter, eating it and smelling of ghee?" “We saw the dark one adorned with garlands made of forest flowers. playing with his mates in Brindavan (Mathura) He looked like the clouds shining with lightning. "

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அனுங்க என்னை நான் வருந்தும்படியாக; பிரிவு செய்து என்னைப் பிரிந்துபோய்; ஆயர் பாடி கவர்ந்து ஆய்ப்பாடியை கவர்ந்து; உண்ணும் அனுபவிக்கும்; குணுங்கு நாறி வெண்ணெய் மணம் வீசும்; குட்டேற்றை இளைய ரிஷபம் போன்ற; கோவர்த்தனனைக் கண்ணபிரானை; கண்டீரே? பார்த்தீர்களா?; மின் மேகம் மின்னலும் மேகமும்; கலந்தாற் போல சேர்ந்தாற் போல்; கறுத்த கருத்த; வனமாலை மேனியிலே வனமாலை; மினுங்க நின்று மினுக்கப் பெற்று; கணங்களோடு தோழர் கூட்டங்களோடு; விளையாட விளையாடுவதை; விருந்தாவனத்தே விருந்தாவனத்தில்; கண்டோமே கண்டோமே

Detailed WBW explanation

Have you beheld Kaṇṇan, who, having departed from my side, left me engulfed in sorrow, yet thrives joyously in Śrī Gokulam, his form redolent with the fragrance of butter, resembling a vigorous young bull, and tending to the cows with great care? Indeed, we have seen Him, frolicking with His companions in Vṛndāvanam, adorned with the pale-hued Vanamālai [divine garland] upon His dark, divine form, evoking the splendid vision of lightning accompanying a cloud.