NAT 14.3

கருடனது சிறகின்கீழ் வருவானைக் கண்டோம்

639 மாலாய்ப்பிறந்தநம்பியை மாலேசெய்யும்மணாளனை *
ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே? *
மேலால்பரந்தவெயில்காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும் *
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே.
639 mālāyp piṟanta nampiyai * māle cĕyyum maṇāl̤aṉai *
elāp pŏykal̤ uraippāṉai * iṅke potak kaṇṭīre? **
melāl paranta vĕyil kāppāṉ * viṉatai ciṟuvaṉ ciṟaku ĕṉṉum *
melāppiṉ kīzh varuvāṉai * viruntāvaṉatte kaṇṭome (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

639. "Did you see Him who is the personification of beauty, the One who symbolizes Love and the One who tells incredible lies? Did you see Him here? "We saw Garudā, the son of Vinadai, spreading his wings to protect Him from the heat, here in Brindavan (Mathura).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலாய் மோகமே வடிவாக; பிறந்த பிறந்த; நம்பியை பெருமானை; மாலே செய்யும் அன்பையே செய்கிற; மணாளனை மணாளனை; ஏலாப்பொய்கள் ஏற்கத் தகாத பொய்களை; உரைப்பானை கூறுபவனை; இங்கே போத இங்கே செல்வதை; கண்டீரே? பார்த்தீர்களா?; மேலால் பரந்த மேலே பரவிய; வெயில் வெய்யிலை; காப்பான் தடுப்பதற்காக; வினதை வினதையின்; சிறுவன் புதல்வன் கருடன்; சிறகு என்னும் சிறகுகளாகிற; மேலாப்பின் கீழ் விதானத்தின் கீழ்; வருவானை வருபவனை; விருந்தாவனத்தே பிருந்தாவனத்தில்; கண்டோமே பார்த்தோமே

Detailed WBW explanation

Have you beheld Kaṇṇan, who manifested Himself in this sacred place, adorned with a divine form that radiates affection towards the cowherd maidens, and who, as the cherished bridegroom, speaks charming untruths? We have indeed witnessed Emperumān in Vṛndāvanam, where Garuda, with his wings widespread across the heavens like a canopy, shields the dark, divine form of Kaṇṇan from the scorching sunbeams.