Chapter 8

Thirumālirunjolai 1 - (முந்துற உரைக்கேன்)

திருமாலிருஞ்சோலை 1
Thirumālirunjolai 1 - (முந்துற உரைக்கேன்)
The Lord resides with great affection on two hills in Tamil Nadu. One is Vadavenkatam (Tirupati), and the other is Thirumaliruncholai. The āzhvār calls upon his mind, saying, "O foolish heart! Let's give up the stumbling caused by getting entangled in the snare of women's eyes and worship Thirumaliruncholai." Thus, he invites his mind to experience Thirumaliruncholai, where the presiding deity is Azhagar.
எம்பெருமான் தமிழ் நாட்டில் இரண்டு மலைகளில் மிகவும் ஆசையுடன் வாழ்கிறான். ஒன்று வடவேங்கடம்: மற்றொன்று திருமாலிருஞ்சோலை மலை. மட நெஞ்சே! மாதரார் கண் வலையில் சிக்கித் தடுமாறு வதை விட்டொழித்துத் திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா என்று ஆழ்வார் அழைத்துத் திருமாலிருஞ்சோலையை அனுபவிக்கிறார் ஈண்டு எழுந்தருளியுள்ள பெருமான் அழகர்.
Verses: 1818 to 1827
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 9.8.1

1818 முந்துறஉரைக்கேன்விரைக்குழல்மடவார்
கலவியைவிடு தடுமாறல் *
அந்தரமேழும்அலைகடலேழும்
ஆய எம்மடிகள்தம்கோயில் *
சந்தொடுமணியும்அணிமயில்தழையும்
தழுவிவந்தருவிகள்நிரந்து *
வந்திழிசாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே! (2)
1818 முந்துற உரைக்கேன் விரைக் குழல் மடவார் *
கலவியை விடு தடுமாறல் *
அந்தரம் ஏழும் அலை கடல் ஏழும்
ஆய * எம் அடிகள் தம் கோயில் **
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் *
தழுவி வந்து அருவிகள் நிரந்து *
வந்து இழி சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 1
1818 muntuṟa uraikkeṉ viraik kuzhal maṭavār *
kalaviyai viṭu taṭumāṟal *
antaram ezhum alai kaṭal ezhum
āya * ĕm aṭikal̤-tam koyil- **
cantŏṭu maṇiyum aṇi mayil tazhaiyum *
tazhuvi vantu aruvikal̤ nirantu *
vantu izhi cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-1

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1818. O ignorant heart, I would tell you something wonderful. If you would be rid of the infatuation you feel for beautiful fragrant-haired women, go to Thirumālirunjolai where waterfalls descend from the sloping hill bringing sandalwood, precious jewels and beautiful peacock feathers where our divine lord of all the seven worlds and seven oceans stays in his temple. Come, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான நெஞ்சே!; முந்துற முதலில் ஒன்று; உரைக்கேன் கூறுகிறேன்; விரை மணம் மிக்க; குழல் கூந்தலையுடைய; மடவார் பெண்களின்; கலவியை கலவியால் ஏற்படும்; தடுமாறல் தடுமாற்றத்தை; விடு விட்டுவிடு; அந்தரம் ஏழும் ஏழு தீவுகளையும்; அலை கடல் அலை கடல்; ஏழும் ஆய ஏழையும்; எம் அடிகள் சரீரமாக உடைய; தம் எம்பெருமானின்; கோயில் இருப்பிடமான; அருவிகள் அருவிகள் நிறைந்த; சந்தொடு சந்தனமரங்களோடு; மணியும் ரத்தினங்களையும்; அணி மயில் அழகிய மயில்; தழையும் தோகைகளையும்; தழுவி தழுவி; வந்து நிரந்து தள்ளிக்கொண்டு; வந்து இழி வந்து ஓடும்; சாரல் பரந்த சாரலையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.2

1819 இண்டையும்புனலும்கொண்டிடையின்றி
எழுமினோதொழுதுமென்று * இமையோர்
அண்டரும்பரவஅரவணைத்துயின்ற
சுடர்முடிக்கடவுள்தம்கோயில் *
விண்டலர்தூளிவேய்வளர்புறவில்
விரைமலர்க்குறிஞ்சியின்நறுந்தேன் *
வண்டமர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1819 ## இண்டையும் புனலும் கொண்டு இடை இன்றி *
எழுமினோ தொழுதும் என்று * இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற *
சுடர் முடிக் கடவுள் தம் கோயில் **
விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் *
விரை மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் *
வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 2
1819 ## iṇṭaiyum puṉalum kŏṇṭu iṭai iṉṟi *
ĕzhumiṉo tŏzhutum ĕṉṟu * imaiyor
aṇṭarum parava aravaṇait tuyiṉṟa *
cuṭar muṭik kaṭavul̤-tam koyil- **
viṇṭu alar tūl̤i vey val̤ar puṟavil *
virai malark kuṟiñciyiṉ naṟun teṉ *
vaṇṭu amar cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-2

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1819. Thirumālirunjolai is the temple where the gods worship, telling all in the sky, “Come and let us go and worship the lord, ” carrying garlands and pure water and going to praise our lord adorned with shining crowns and resting on a snake bed. There bees drink sweet honey from the fragrant kurinji flowers blooming in the forests and bamboo plants growing on the sloping hills split apart and throw out pearls. O ignorant heart, come, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; இண்டையும் பூமாலையையும்; புனலும் நீரையும்; கொண்டு கொண்டு; இடை இன்றி இடைவிடாமல்; என்று இமையோர் நித்யஸூரிகளும்; அண்டரும் பரவ தேவர்களும் நாமும்; தொழுதும் தொழுது; எழுமினோ எழுவதற்கு ஏற்ப; அரவணைத் ஆதிசேஷன் மேல்; துயின்ற துயின்ற; சுடர் முடி ஒளிமயமான கிரீடமணிந்த; கடவுள் தம் பெருமானின்; கோயில் கோயிலான; விண்டு விரியாத மலர்; அலர் தூளி துகள்களையுடைய; வேய் வளர்ந்த மூங்கில்; வளர் மரங்களோடும்; புறவில் சுற்றுப்பக்கங்களில்; விரை மலர் மணம் மிக்க; குறிஞ்சியின் குறிஞ்சி மலரின்; நறுந் தேன் இனிய தேன் பருகும்; வண்டு அமர் வண்டுகள் வாழும்; சாரல் சாரலையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.3

1820 பிணிவளராக்கைநீங்கநின்றேத்தப்
பெருநிலமருளின்முன்னருளி *
அணிவளர்குறளாய்அகலிடம்முழுதும்
அளந்தஎம்மடிகள்தம்கோயில் *
கணிவளர்வேங்கைநெடுநிலமதனில்
குறவர்தம்கவணிடைத்துரந்த *
மணிவளர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1820 பிணி வளர் ஆக்கை நீங்க நின்று ஏத்தப் *
பெரு நிலம் அருளின் முன் அருளி *
அணி வளர் குறள் ஆய் அகல் இடம் முழுதும் *
அளந்த எம் அடிகள் தம் கோயில் **
கணி வளர் வேங்கை நெடு நிலம் அதனில் *
குறவர் தம் கவணிடைத் துரந்த *
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 3
1820 piṇi val̤ar ākkai nīṅka niṉṟu ettap *
pĕru nilam arul̤iṉ muṉ arul̤i *
aṇi val̤ar kuṟal̤ āy akal-iṭam muzhutum *
al̤anta ĕm aṭikal̤-tam koyil- **
kaṇi val̤ar veṅkai nĕṭu nilam-ataṉil *
kuṟavar-tam kavaṇiṭait turanta *
maṇi val̤ar cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-3

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1820. Our dear lord who removes the sickness of his devotees if they worship him and who gives his grace to all went to Mahabali as a small, handsome dwarf and measured the whole world with his two feet. He stays in the temple of Thirumālirunjolai where hunters shoot their arrows on the slopes and precious stones grow and vengai trees flourish. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! மட நெஞ்சே!; பிணி துன்பத்தை; வளர் ஆக்கை வளர்க்கும் உடலை; நீங்க நின்று நீக்கி நின்று; ஏத்த துதிப்பதற்காக; பெரு நிலம் பரந்த பூமியை; அருளின் தன் கிருபையால்; முன் முன்பே; அருளி தந்தருளினவனும்; அணி வளர் அழகிய; குறள் ஆய் வாமநனாய்; அகல் இடம் பூமி; முழுதும் முழுவதையும்; அளந்த அளந்தவனுமான; எம் அடிகள் தம் பெருமானின்; கோயில் இருப்பிடம்; கணி காலம் உணர்த்தும் வகையில்; வளர் வளர்ந்துள்ள; வேங்கை மூங்கில் மரங்களையுடைய; நெடு விசாலமான; நிலம்அதனில் பூமியில்; குறவர் தம் குறவர்கள் தங்கள்; கவணிடை கல்லெறியும் கயிற்றில்; துரந்த வைத்து உண்டிவில் எறிந்த; மணி வளர் மணிகளின் ஒளி; சாரல் மிகுதியையுடைய சாரல்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.4

1821 சூர்மயிலாயபேய்முலைசுவைத்துச்
சுடுசரமடுசிலைத்துரந்து *
நீர்மையிலாததாடகைமாள
நினைந்தவர்மனம்கொண்டகோயில் *
கார்மலிவேங்கைகோங்கலர்புறவில்
கடிமலர்குறிஞ்சியின்நறுந்தேன் *
வார்புனல்சூழ்தண்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1821 சூர்மையில் ஆய பேய் முலை சுவைத்துச் *
சுடு சரம் அடு சிலைத் துரந்து *
நீர்மை இலாத தாடகை மாள *
நினைந்தவர் மனம் கொண்ட கோயில் **
கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் *
கடி மலர்க் குறிஞ்சியின் நறுந் தேன் *
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 4
1821 cūrmaiyil āya pey mulai cuvaittuc *
cuṭu caram aṭu cilait turantu *
nīrmai ilāta tāṭakai māl̤a *
niṉaintavar maṉam kŏṇṭa koyil- **
kār mali veṅkai koṅku alar puṟavil *
kaṭi malark kuṟiñciyiṉ naṟun teṉ *
vār puṉal cūzh taṇ māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-4

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1821. The lord who drank milk from the breasts of Putanā, and shot fearful arrows at the evil Thādagai and killed her stays in the temple in Thirumālirunjolai surrounded with cool flowing water where sweet honey from fragrant kurinji flowers drips on the blossoms of vengai trees over which clouds float. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! மட நெஞ்சே!; சூர்மையில் ஆய கொடிய ஸ்வபாவமுடைய; பேய் முலை பூதனையின்; சுவைத்து பாலை சுவைத்தவரும்; அடு கொல்லும் திறமை வாய்ந்த; சுடு நெருப்பை உமிழும்; சரம் அம்புகளை; சிலை வில்லிலே; துரந்து தொடுத்து; நீர்மை இலாத இரக்கமற்ற; தாடகை மாள தாடகைமுடியும்படி; நினைந்தவர் திருவுள்ளம்பற்றிய; மனம் கொண்ட பெருமான் விரும்பி; கோயில் இருக்குமிடம்; கார் மேகமண்டலம்வரை; மலி ஓங்கிவளர்ந்த; வேங்கை மூங்கில் மரங்களும்; கோங்கு கோங்கு மரங்களின்; அலர் மலர்; புறவில் சோலைகளில்; கடிமலர் மணம் மிக்க; குறிஞ்சியின் குறிஞ்சியின்; நறுந் தேன் இனிய தேனின்; வார் புனல் குளிர்ந்த; சூழ் தண் பிரவாஹம் சூழ்ந்த; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.5

1822 வணங்கலிலரக்கன்செருக்களத்தவிய
மணிமுடிஒருபதும்புரள *
அணங்கெழுந்தவன்றன்கவந்தம்நின்றாட
அமர்செய்தஅடிகள்தம்கோயில் *
பிணங்கலில்நெடுவேய்நுதிமுகம்கிழிப்பப்
பிரசம்வந்திழிதர * பெருந்தேன்
மணங்கமழ்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1822 வணங்கல் இல் அரக்கன் செருக்களத்து அவிய *
மணி முடி ஒருபதும் புரள *
அணங்கு எழுந்து அவன் தன் கவந்தம் நின்று ஆட *
அமர்செய்த அடிகள் தம் கோயில் **
பிணங்கலின் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் *
பிரசம் வந்து இழிதர பெருந் தேன் *
மணங் கமழ் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 5
1822 vaṇaṅkal il arakkaṉ cĕrukkal̤attu aviya *
maṇi muṭi ŏrupatum pural̤a *
aṇaṅku ĕzhuntu avaṉ-taṉ kavantam niṉṟu āṭa *
amarcĕyta aṭikal̤-tam koyil- **
piṇaṅkaliṉ nĕṭu vey nuti mukam kizhippap *
piracam vantu izhitara pĕrun teṉ *
maṇaṅ kamazh cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-5

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1822. Our dear god who fought and destroyed the pride of his enemy, the Rakshasā Rāvana, making his ten heads fall to the ground while his headless body stood there and danced stays in the temple in Thirumālirunjolai where the tops of the bamboo plants split open bee hives and the bees fly away and much honey spills out making the slope of the whole hill fragrant. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; வணங்கல் இல் வணக்கமற்ற; அரக்கன் இராவணன்; செருக்களத்து போர்க்களத்தில்; அவிய அழிய; மணி ரத்தினத்தாலான; முடி கிரீடங்கள்; ஒருபதும் பத்தும்; புரள தரையில் புரள; அணங்கு தெய்வாவேசம்; எழுந்து கொண்டது போல்; அவன் தன் அவனுடைய; கவந்தம் தலையற்ற உடல்; நின்று ஆட நின்று ஆட; அமர் செய்த யுத்தம் செய்த; அடிகள் தம் எம்பெருமானின்; கோயில் கோயில்; பிணங்கலில் பின்னிப் பிணங்கி; நெடு ஓங்கி வளர்ந்த; வேய் நுதி மூங்கிலின் நுனி; முகம் மலையுச்சியிலுள்ள தேன்; கிழிப்ப கூட்டின் முகத்தைக் கிழிக்க; பிரசம் வந்து தேனீக்கள்; இழிதர வந்து சிதற; பெருந் அதிகமான; தேன் தேனின்; மணங் கமழ் மணம் கமழ; சாரல் சாரல்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.6

1823 விடங்கலந்தமர்ந்தஅரவணைத்துயின்று
விளங்கனிக்கிளங்கன்றுவிசிறி *
குடங்கலந்தாடிக்குரவைமுன்கோத்த
கூத்தஎம்மடிகள்தம்கோயில் *
தடங்கடல்முகந்துவிசும்பிடைப்பிளிறத்
தடவரைக்களிறென்றுமுனிந்து *
மடங்கல்நின்றதிரும்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1823 விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று *
விளங்கனிக்கு இளங் கன்று விசிறி *
குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த *
கூத்த எம் அடிகள் தம் கோயில் **
தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் *
தடவரைக் களிறு என்று முனிந்து *
மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 6
1823 viṭam kalantu amarnta aravaṇait tuyiṉṟu *
vil̤aṅkaṉikku il̤aṅ kaṉṟu viciṟi *
kuṭam kalantu āṭi kuravai muṉ kotta *
kūtta ĕm aṭikal̤-tam koyil- **
taṭaṅ kaṭal mukantu vicumpiṭaip pil̤iṟat *
taṭavaraik kal̤iṟu ĕṉṟu muṉintu *
maṭaṅkal niṉṟu atirum māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-6

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1823. Our divine lord who rests on the snake bed of Adisesha killed the two Asurans, throwing one who had come as a calf at the other who came as a vilam tree, and he carried a pot and danced the kuravai dance. He stays in the temple in Thirumālirunjolai where a lion is angry and roars thinking that the sound of the thunder of the clouds that rise to the sky carrying water from the sea is the trumpeting of an elephant. O ignorant heart, come, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; விடம் கலந்து பகைவர் மீது விஷம் கலந்து; அமர்ந்த வீசுபவனான; அரவணை ஆதிசேஷன் மீது; துயின்று துயின்றவனும்; விளங்கனிக்கு விளாம் பழத்துக்காக; இளங் கன்று அசுரனான இளங் கன்றை; விசிறி வீசி எறிந்தவனும்; குடம் கலந்து ஆடி குடக்கூத்தாடினவனும்; குரவை முன் கோத்த ராஸக்ரீடை; கூத்த நடத்தினவனுமான; எம் அடிகள் தம் எம்பெருமான் இருக்கும்; கோயில் கோயில்; தடங் கடல் மேகங்கள் ஆழ்ந்தகடல்; முகந்து நீரை முகந்து; விசும்பிடை வானம்; பிளிற கர்ஜிப்பதைக்கேட்டு; தடவரை பெரிய மலை போன்ற; களிறு யானை; என்று சீற்றம் கொண்டு; முனிந்து கர்ஜிக்கிறது; நின்று என்று எண்ணி; அதிரும் கர்ஜிக்கும்; மடங்கல் சிங்கங்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.7

1824 தேனுகனாவிபோயுகஅங்கு ஓர்
செழுந்திரள்பனங்கனியுதிர *
தானுகந்தெறிந்ததடங்கடல்வண்ணர்
எண்ணிமுன்இடங்கொண்டகோயில் *
வானகச்சோலைமரதகச்சாயல்
மாமணிக்கல்லதர்நிறைந்து *
மானுகர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1824 தேனுகன் ஆவி போய் உக * அங்கு ஓர்
செழுந் திரள் பனங்கனி உதிர *
தான் உகந்து எறிந்த தடங் கடல் வண்ணர் *
எண்ணி முன் இடம் கொண்ட கோயில் **
வானகச் சோலை மரதகச் சாயல் *
மா மணிக் கல் அதர் நுழைந்து *
மான் நுகர் சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 7
1824 teṉukaṉ āvi poy uka * aṅku or
cĕzhun tiral̤ paṉaṅkaṉi utira *
tāṉ ukantu ĕṟinta taṭaṅ kaṭal vaṇṇar *
ĕṇṇi muṉ iṭam kŏṇṭa koyil- **
vāṉakac colai maratakac cāyal *
mā maṇik kal atar nuzhaintu *
māṉ nukar cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-7

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1824. The dark ocean-colored one who threw ripe palm fruits at the Asuran Thenugasuran and killed him stays in the temple in Thirumālirunjolai filled with flourishing emerald-colored groves where deer walk on stony paths and graze on the grass on the slopes. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; தேனுகன் தேநுகாஸுரனின்; ஆவி போய் உக உயிர் மாள; அங்கு ஓர் அங்கு அழகாக; செழுந் திரள் திரண்டிருந்த; பனங்கனி உதிர பனம்பழங்கள் உதிர; எறிந்த அவனை பனங்கனிமேல் எறிந்து; தான் உகந்து தான் உகந்த பெருமான்; தடங் கடல் பெரும் கடல் போன்ற; வண்ணர் நிறமுடைய எம்பெருமான்; எண்ணி முன்பு இதுவே; முன் இடம் பாங்கான இடம்; கொண்ட என்று எண்ணி; கோயில் இருந்த இடம்; மரகதச் சாயல் மரகத ஒளியையுடைய நிறைய மான்கள்; வானக ஆகாசத்தளவும் ஓங்கி வள்ர்ந்த; சோலை சோலைகளின்; மா மணிக் பெரும்பாறை; கல் அதர் வழியாகப் புகுந்து; நுகர் சாரல் மேயும் சாரல்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.8

1825 புதமிகுவிசும்பில்புணரிசென்றணவப்
பொருகடல்அரவணைத்துயின்று *
பதமிகுபரியின்மிகுசினம்தவிர்த்த
பனிமுகில்வண்ணர்தம்கோயில் *
கதமிகுசினத்தகடதடக்களிற்றின்
கவுள்வழிக்களிவண்டுபருக *
மதமிகுசாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1825 புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவப் *
பொரு கடல் அரவணைத் துயின்று *
பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த *
பனி முகில் வண்ணர் தம் கோயில் **
கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின் *
கவுள் வழிக் களி வண்டு பருக *
மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 8
1825 putam miku vicumpil puṇari cĕṉṟu aṇavap *
pŏru kaṭal aravaṇait tuyiṉṟu *
patam miku pariyiṉ miku ciṉam tavirtta *
paṉi mukil vaṇṇar-tam koyil- **
katam miku ciṉatta kaṭa taṭak kal̤iṟṟiṉ *
kavul̤ vazhik kal̤i vaṇṭu paruka *
matam miku cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-8

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1825. Our cloud-colored lord who rests on the bed of the snake Adisesha on the roaring ocean where waves rise up to the sky stays in the temple of Thirumālirunjolai where happy bees drink the ichor dripping from the cheeks of angry elephants and flowing on the slope of the hill. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; புதம் மிகு மேகங்கள் நிறைந்த; விசும்பில் ஆகாசத்தில்; புணரி சென்று அலைகள் சென்று; அணவ உராய்ந்து; பொரு கொந்தளிக்கும்; கடல் பாற்கடலில்; அரவணைத் ஆதிசேஷன் மீது; துயின்று துயின்றவன்; பதம் மிகு முயற்சிமிக்க கேசியென்கிற; பரியின் குதிரையாக வந்த அசுரனின்; மிகு சினம் மிகுந்த சீற்றத்தை; தவிர்த்த போக்கினவனும்; பனி முகில் குளிர்ந்த மேகம் போன்ற; வண்ணர் தம் வடிவை உடையவனின்; கோயில் கோயில்; கதம் மிகு மிகுந்த; சினத்த சினத்துடன் கூடின; கட தட மதங்கொண்ட; களிற்றின் பெரிய யானையின்; கவுள் கன்னத்தின்; வழி வழியாகப் பெருகும்; மதம் மிகு மதநீர் பாய்ந்து ஓடும்; களி மதஜலத்தை; வண்டு பருக வண்டுகள் பருகும்; சாரல் சாரல்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.9

1826 புந்தியில்சமணர்புத்தரென்றிவர்கள்
ஒத்தனபேசவும்உகந்திட்டு *
எந்தைபெம்மானார்இமையவர்தலைவர்
எண்ணிமுன்இடங்கொண்டகோயில் *
சந்தனப்பொழிலின்தாழ்சினைநீழல்
தாழ்வரைமகளிர்கள்நாளும் *
மந்திரத்திறைஞ்சும்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1826 புந்தி இல் சமணர் புத்தர் என்று இவர்கள் *
ஒத்தன பேசவும் உகந்திட்டு *
எந்தை பெம்மானார் இமையவர் தலைவர் *
எண்ணி முன் இடம் கொண்ட கோயில் ***
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல்
தாழ்வரை மகளிர்கள் நாளும் *
மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ்சோலை *
வணங்குதும் வா மட நெஞ்சே 9
1826 punti il camaṇar puttar ĕṉṟu ivarkal̤ *
ŏttaṉa pecavum ukantiṭṭu *
ĕntai pĕmmāṉār imaiyavar talaivar *
ĕṇṇi muṉ iṭam kŏṇṭa koyil- ***
cantaṉap pŏzhiliṉ tāzh ciṉai nīzhal
tāzhvarai makal̤irkal̤ nāl̤um *
mantirattu iṟaiñcum māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-9

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1826. He, our highest lord, our father, who loves even the ignorant Jains and Buddhists and others of other religions that put their own beliefs ahead of the Vedās stays in the temple in Thirumālirunjolai where women in the shadows of a grove of long-branched sandal trees on the slopes recite mantras and worship our god. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; புந்தி இல் விவேகமற்ற; சமணர் சமணர் என்றும்; புத்தர் என்று புத்தர் என்றும்; இவர்கள் இவர்கள்; ஒத்தன தங்களுக்கு; பேசவும் ஒத்ததைப் பேசவும்; உகந்திட்டு அதையும் கேட்டு மகிழ்ந்து; எந்தை பெம்மானார் எம் பெருமான்; இமையவர் நித்யஸூரிகளின்; தலைவர் தலைவர்; முன் முன்பு இதுவே பாங்கான; இடம் எண்ணி இடம் என்று எண்ணி; கொண்ட கோயில் உகந்த கோயில்; சந்தனப் சந்தன; பொழிலின் தோப்பிலுள்ள; தாழ் சினை தாழ்ந்த கிளையின்; நீழல் தாழ் நிழலின் கீழ்; வரை மகளிர்கள் மலைப்பெண்கள்; நாளும் நாள்தோறும்; மந்திரத்து மந்திரங்களை ஓதி வரம்; இறைஞ்சும் வேண்டி கடவுளை வணங்கும்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா

PT 9.8.10

1827 வண்டமர்சாரல்மாலிருஞ்சோலை
மாமணிவண்ணரைவணங்கும் *
தொண்டரைப்பரவும்சுடரொளிநெடுவேல்
சூழ்வயல்ஆலிநன்னாடன் *
கண்டல்நல்வேலிமங்கையர்தலைவன்
கலியன்வாயொலிசெய்தபனுவல் *
கொண்டுஇவைபாடும்தவமுடையார்கள்
ஆள்வர்இக்குரைகடலுலகே. (2)
1827 ## வண்டு அமர் சாரல் மாலிருஞ்சோலை *
மா மணி வண்ணரை வணங்கும் *
தொண்டரைப் பரவும் சுடர் ஒளி நெடு வேல் *
சூழ் வயல் ஆலி நல் நாடன் **
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன் *
கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் *
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் *
ஆள்வர் இக் குரை கடல் உலகே 10
1827 ## vaṇṭu amar cāral māliruñcolai *
mā maṇi vaṇṇarai vaṇaṅkum *
tŏṇṭaraip paravum cuṭar ŏl̤i nĕṭu vel *
cūzh vayal āli nal nāṭaṉ **
kaṇṭal nal veli maṅkaiyar talaivaṉ *
kaliyaṉ vāy ŏlicĕyta paṉuval *
kŏṇṭu ivai pāṭum tavam uṭaiyārkal̤ *
āl̤var-ik kurai kaṭal ulake-10

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1827. Kaliyan with a long shining spear, the chief of Thirumangai in Thiruvāli country surrounded with good fences of thazai flowers, composed pāsurams on the beautiful sapphire-colored god describing how his devotees praise and worship him in Thirumālirunjolai where bees sing on the slopes. If devotees learn and recite these ten pāsurams they will rule this world surrounded by the sounding oceans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அமர் வண்டுகள் படிந்த; சாரல் சாரல்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; மா மணி நீலமணி வண்ணரான; வண்ணரை வடிவுடையவரை குறித்து; வணங்கும் வணங்கும்; தொண்டரை பாகவதர்களை; பரவும் துதிப்பவரும்; சுடர் ஒளி ஒளி மிக்க; நெடு வேல் வேல் படையை உடையவரும்; சூழ் பரந்த வயல்களை; வயல் உடையவருமான; ஆலி நல் ஆலி நாட்டு; நாடன் தலைவரும்; கண்டல் தாழைச் செடிகளை; நல் வேலி வேலியாகக் கொண்ட; மங்கையர் திருமங்கை; தலைவன் தலைவன்; கலியன் வாய் திருமங்கை ஆழ்வார்; ஒலி செய்த அருளிச்செய்த; பனுவல் பாசுரங்களை; கொண்டு பரம பக்தியுடன்; இவை பாடும் பாடும்; தவம் பாக்கியம்; உடையார்கள் உடையவர்கள்; இக் குரை ஒலிக்கின்ற; கடல் கடலால் சூழப்பட்ட; உலகே இவ்வுலகை; ஆள்வர் ஆள்வர்