PT 9.8.5

இராவணனை வதைத்தவர் கோயில் இது

1822 வணங்கலிலரக்கன்செருக்களத்தவிய
மணிமுடிஒருபதும்புரள *
அணங்கெழுந்தவன்றன்கவந்தம்நின்றாட
அமர்செய்தஅடிகள்தம்கோயில் *
பிணங்கலில்நெடுவேய்நுதிமுகம்கிழிப்பப்
பிரசம்வந்திழிதர * பெருந்தேன்
மணங்கமழ்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1822 vaṇaṅkal il arakkaṉ cĕrukkal̤attu aviya *
maṇi muṭi ŏrupatum pural̤a *
aṇaṅku ĕzhuntu avaṉ-taṉ kavantam niṉṟu āṭa *
amarcĕyta aṭikal̤-tam koyil- **
piṇaṅkaliṉ nĕṭu vey nuti mukam kizhippap *
piracam vantu izhitara pĕrun teṉ *
maṇaṅ kamazh cāral māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-5

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1822. Our dear god who fought and destroyed the pride of his enemy, the Rakshasā Rāvana, making his ten heads fall to the ground while his headless body stood there and danced stays in the temple in Thirumālirunjolai where the tops of the bamboo plants split open bee hives and the bees fly away and much honey spills out making the slope of the whole hill fragrant. O ignorant heart, come let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; வணங்கல் இல் வணக்கமற்ற; அரக்கன் இராவணன்; செருக்களத்து போர்க்களத்தில்; அவிய அழிய; மணி ரத்தினத்தாலான; முடி கிரீடங்கள்; ஒருபதும் பத்தும்; புரள தரையில் புரள; அணங்கு தெய்வாவேசம்; எழுந்து கொண்டது போல்; அவன் தன் அவனுடைய; கவந்தம் தலையற்ற உடல்; நின்று ஆட நின்று ஆட; அமர் செய்த யுத்தம் செய்த; அடிகள் தம் எம்பெருமானின்; கோயில் கோயில்; பிணங்கலில் பின்னிப் பிணங்கி; நெடு ஓங்கி வளர்ந்த; வேய் நுதி மூங்கிலின் நுனி; முகம் மலையுச்சியிலுள்ள தேன்; கிழிப்ப கூட்டின் முகத்தைக் கிழிக்க; பிரசம் வந்து தேனீக்கள்; இழிதர வந்து சிதற; பெருந் அதிகமான; தேன் தேனின்; மணங் கமழ் மணம் கமழ; சாரல் சாரல்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா