PT 9.8.6

கண்ணன் தங்கும் மாலிருஞ்சோலையை வணங்குவோம்

1823 விடங்கலந்தமர்ந்தஅரவணைத்துயின்று
விளங்கனிக்கிளங்கன்றுவிசிறி *
குடங்கலந்தாடிக்குரவைமுன்கோத்த
கூத்தஎம்மடிகள்தம்கோயில் *
தடங்கடல்முகந்துவிசும்பிடைப்பிளிறத்
தடவரைக்களிறென்றுமுனிந்து *
மடங்கல்நின்றதிரும்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1823 viṭam kalantu amarnta aravaṇait tuyiṉṟu *
vil̤aṅkaṉikku il̤aṅ kaṉṟu viciṟi *
kuṭam kalantu āṭi kuravai muṉ kotta *
kūtta ĕm aṭikal̤-tam koyil- **
taṭaṅ kaṭal mukantu vicumpiṭaip pil̤iṟat *
taṭavaraik kal̤iṟu ĕṉṟu muṉintu *
maṭaṅkal niṉṟu atirum māliruñcolai- *
vaṇaṅkutum vā maṭa nĕñce-6

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1823. Our divine lord who rests on the snake bed of Adisesha killed the two Asurans, throwing one who had come as a calf at the other who came as a vilam tree, and he carried a pot and danced the kuravai dance. He stays in the temple in Thirumālirunjolai where a lion is angry and roars thinking that the sound of the thunder of the clouds that rise to the sky carrying water from the sea is the trumpeting of an elephant. O ignorant heart, come, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சே! பணிவான மனமே!; விடம் கலந்து பகைவர் மீது விஷம் கலந்து; அமர்ந்த வீசுபவனான; அரவணை ஆதிசேஷன் மீது; துயின்று துயின்றவனும்; விளங்கனிக்கு விளாம் பழத்துக்காக; இளங் கன்று அசுரனான இளங் கன்றை; விசிறி வீசி எறிந்தவனும்; குடம் கலந்து ஆடி குடக்கூத்தாடினவனும்; குரவை முன் கோத்த ராஸக்ரீடை; கூத்த நடத்தினவனுமான; எம் அடிகள் தம் எம்பெருமான் இருக்கும்; கோயில் கோயில்; தடங் கடல் மேகங்கள் ஆழ்ந்தகடல்; முகந்து நீரை முகந்து; விசும்பிடை வானம்; பிளிற கர்ஜிப்பதைக்கேட்டு; தடவரை பெரிய மலை போன்ற; களிறு யானை; என்று சீற்றம் கொண்டு; முனிந்து கர்ஜிக்கிறது; நின்று என்று எண்ணி; அதிரும் கர்ஜிக்கும்; மடங்கல் சிங்கங்களையுடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையை; வணங்குதும் வா வணங்குவோம் வா